சினிமா பார்ப்பதை விட பாடல் கேட்பது எனக்கு பிடிக்கும்.ஏ.ஆர்.ரஹ்மான்,இளையராஜா,சிற்பி,வித்யாசாகர் இவர்களுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிப்பதைப் போல எனக்கும் பிடிக்கும். ஆனால் சமீபகாலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடல்கள் என்னை ரொம்பவே ஈர்த்தது. வெயில்,ஆனந்த தாண்டவம்,கிரிடம்,ஆயிரத்தில் ஒருவன், இந்த படங்களிலுள்ள பாடல்கள் அனைத்தையும் ரசிச்சு கேட்டேன். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி ரெண்டு நாளைக்கு முன்னாடி பாடல்கள் மட்டும் ரிலீசான "மதராசப்பட்டணம்" என்ற படத்துல வர்ற பாடல்கள் சூப்பர். ஹிஸ்டோரிக்கல் மெலோடி என்று விளம்பரபடுத்தி இருந்தார்கள் தப்பே இல்லை. அவ்வளவு பிரமாதம் பாடல்கள்.அதிலும் குறிப்பா "ஆருயிரே ஆருயிரே" எனத் தொடங்கும் பாடலை குறைந்தது ஒரு ஐம்பது தடவையாவது கேட்டிருப்பேன்.சோனி நிகமும்,சைந்தவியும் சேர்ந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் மனசை ஒரு வழி பண்ணிடுச்சுங்க.பிரமாண்டமான எதிர்காலம் ஜி.வி.பிரகாஷ்க்கு உண்டு...... அந்தப் பாடலை இங்கே கொடுத்துள்ளேன். ரைட் க்ளிக் செஞ்சு சேவ் செய்து கொள்ளுங்கள்....பாடலை கேட்டுட்டு கண்டிப்பா பின்னூட்டத்துல சொல்லுங்கள்...
9 வம்புகள்:
நீங்கள் சொன்ன படங்களின் பாடல்களை நானும் கேட்டு இருக்கிறேன்.. நல்ல பாடல்கள் தான்.. இதையும் கேட்கிறேன்... பகிர்விற்கு நன்றி.
Really super
ரொம்ப நன்றி நாடோடி வருகைக்கு பாடலை கேட்டுட்டு சொல்லுங்க,
பனித்துளி சங்கர் உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
நன்றி அர்ஷத் இதில் என்னுடய தோழி தமிழின் கணவரும் நடித்து இருக்கிறார்
அப்படியா.மகிழ்ச்சிக்கரமான செய்தி.ரொம்ப நன்றி வருகைக்கு மிஸஸ்.தேனம்மை லக்ஷ்மணன்..
பாட்டைக்கேட்டேன். நன்றாக இருக்கிறது. எக்கோ எபக்ட் சுப்பர்.
Dr.P.Kandaswamy Thank For Your Visit& Comment Sir.
அன்புள்ள இர்ஷாத் அவர்களுக்கு!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
அன்பின் அஹமது
நல்ல ரசனை - நல்வாழ்த்துகள் அஹமது - நட்புடன் சீனா
Post a Comment