நேற்று மதியம் லஞ்ச் ப்ரேக்கில் எங்கள் அலுவலகத்திற்கு எதிர்புறமுள்ள ஹோட்டலுக்கு நானும் அக்கட பூமியை(ஐதரபாத்) சேர்ந்த என்னுடன் பணிபுரியும் ஒருவரும் சாப்பிட சென்றோம்.நாங்கள் வழக்கமாக செல்லும் ஹோட்டலுக்கு சற்று தொலைவில் புதியதாக ஒரு ஹோட்டல் அப்போதுதான் ஆரம்பித்து இருந்தார்கள். சக சாப்பாட்டுவாசி? கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கே சென்றோம்.அங்கே போய் உட்கார்ந்து நான் சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ண,அவர் காரம் அதிகமுள்ள CHILLS சம்பந்தமா ஏதோ ஆர்டர் பண்ண,அடுத்த ஆறு!(ஹோட்டல் தொழிலுக்கு புதுசு போலிருக்கு) நிமிடத்தில் சாப்பாடு வந்தது.என் சாப்பாடு தட்டில் இரண்டு ஸ்பூன் இருந்தது.சகவருக்கும் அப்படியே.நான் ஸ்பூனை எடுத்து அந்தபக்கம் வைத்துவிட்டு வழக்கம்போல் கையால் சாப்பிட துவங்கினேன்.சகவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அவர் ஸ்பூனில் சாப்பிடதுவங்கினார்.நான் நல்லா நிம்மதியா சாப்பிட்டேன்,சகவர் ஸ்பூனில் சாப்பிட்டாலும் அவ்வளவாக திருப்தி இல்லை.அதாவது எல்லார் முன்னாடியும் சட்டை கசங்காம,அப்படியே ஸ்டைலா என்னகடா டேய் நீங்க பன்ற அலும்பெல்லாம் தாங்க முடியலடா. சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அலுவலகத்திற்கு வருகையில் என்னிடம் ஏன் ஸ்பூனில் சாப்பிடாமல் கையில் சாப்பிட்டீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் நான் சாப்பிட போறது எனக்காக,அடுத்தவன் பார்க்கிறானே, அவன் என்ன நினைப்பானோ, அப்படியெல்லாம் நான் பார்க்க மாட்டேன். மொத்தத்துல அடுத்தவனுக்காக நான் சாப்பிடலை. எனக்காக சாப்பிடுகிறேன் என்று பதிலிளித்துவிட்டு ஆமா நேத்து வரை கையில் சாப்பிட்டுவிட்டு இன்னிக்கு என்னா புதுசா ஸ்பூன்ல சாப்பிட்டீங்க என்று கேட்டேன்(நாங்கள் வழ்க்கமாக சாப்பிடும் ஹோட்டலில் ஸ்பூன் வைக்க மாட்டார்கள்) அதற்கு அவர் சொன்ன பதில் அடெங்கொப்பா ரகம்
நாம் நேரத்துக்கு தகுந்தாப்ல மாறிகிடுனும்.(அப்புறம் ஏன்டா தெலுங்கானா கேட்கமாட்டீங்க) நான் அதற்கு பதிலேதும் சொல்லாமல் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டேன். அத்தோடு சாப்பாட்டுக்கு அவரோடு போறதுக்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு. இதுல நான் சொல்ல வர்றது என்னான்னா நான் அவரை குறை சொல்லவில்லை. நாம ஏன் அடுத்தவனுக்காக வாழனும். நம்ம மனசுக்கு பிடித்த மாதிரி நடைமுறைக்கு ஏற்ப வாழலாமே. டிரஸ் போடுறதிலிருந்து அனைத்திலும் ஒரே ஒரு நாள் நமக்காக வாழ்ந்துதான் பார்ககலாமே.......
24 வம்புகள்:
Neenga romba nallavaro?... :-))
நாட்டில் பலர் இப்படி தான், அடுத்தவர் பார்ப்பதற்காகவே வாழ்வார்கள்!
Mail yr number dginnah@gmail.com
எப்படியோ இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே...
COOL......
நன்றி நண்பா. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பா. என் தளத்தில் ( http://azhkadalkalangiyam.blogspot.com/ ) வந்து உங்கள் கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி நண்பா.
அப்பரம் ஒரு விஷயம் சொன்னால் தப்பக நினைக்க வேண்டாம். உங்கள் அனுமதி இல்லாமல் எடுக்க கூடாது உங்க பதிவு என்று நீங்க கீழே போட்டு இருக்கிங்க அதை எத்தனை பேர் பார்ப்பாங்க நண்பா. அதனை மேலே வைத்தால் ஓப்பன் ஆனதும் கண்ணில் படும். சொல்லனும் என்று தோனுச்சு. தவறாக எண்ண வேண்டாம்.
தமிழ் பிரியன் said...
"Neenga romba nallavaro?... :-))"
வாங்க தமிழ்ப்ரியன் நான் நல்லவனா கெட்டவனா நேத்து உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேனே அப்பவே தெரியலையா?
வால்பையன் said...
//"நாட்டில் பலர் இப்படி தான், அடுத்தவர் பார்ப்பதற்காகவே
வாழ்வார்கள்//
நீங்க சொன்னா ரைட்டு தல..
தமிழரசி said...
//எப்படியோ இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே.//.
புரிஞ்சித்தானே ஆகனும் சகோதரி உங்கள் முதல் வருகைக்கு நன்றி...
மைதீஸ் உங்கள் முதல் வருகைக்கும், கூல்"க்கும் நன்றி....
பிரபாதாமு உங்கள் முதல் வருகைக்கும், நான் உங்கள் வலைதளத்திற்கு வந்ததற்கு நன்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி. நீங்க சொன்னது உடனே நிறைவேற்றப்பட்டுள்ளது.
ம்..
ஹோட்டலுக்கு ஹோட்டல், வாசப்படி...... :-)
உண்மை அர்ஷத் பெரும்பாலும் நாம் நமக்காகவே வாழ்வதில்லை இனியாவது வாழணும்...ம்ம்ம்
Chitra said...
//ஹோட்டலுக்கு ஹோட்டல், வாசப்படி...... :-)//
ஆமா எவ்ளோ நாளைக்குதான் வீட்ட பத்தியே சொல்றது. ரொம்ப நன்றி சித்ரா உங்கள் வருகைக்கு....
thenammailakshmanan said...
//உண்மை அர்ஷத் பெரும்பாலும் நாம் நமக்காகவே வாழ்வதில்லை இனியாவது வாழணும்...ம்ம்ம்///
ரொம்ப நன்றி தேனம்மை லக்ஷ்மணன். வருகைக்கு,வாழ்த்துக்கும்...
நானும் உங்க கட்சிதான். தேவைன்னா மட்டுமே எதுவும் செய்வேன். ஸ்ட்ரா போட்டு குடிப்பது உட்பட.
ரொம்ப நன்றி அக்பர் வருகைக்கும், விருதுக்கும்...
மன்னார்குடி மதியழகு வருகைக்கு நன்றி...
உண்மைதான்.சகோ.நமக்கா சாப்பிடுகிறோம்.மற்றவர்கள் என்ன\ நினைத்துக்கொள்வார்களோ என்று அவஸ்தையுடன் சாப்பிடுவதை விட நம் வசதி எதுவோ அப்படியே நடப்பதுதான் முறை.இல்லாவிட்டால் கொக்கு தட்டில் பாயசம் சாப்பிட்ட மாதிரி,நரி,கூஜாவில் பாயசம் சாப்பிட்ட கதையாகிவிடும்.இருந்தாலும் மற்றவர்கள் திரும்பி பார்க்கும் அளவுக்கு பொது இடத்தில் சாப்பிடக்கூடாது என்பது என் கருத்து,
மற்றவர்கள் திரும்பி பார்க்கும் அளவுக்கு நாம் சாப்பிடாமல் இருக்கனும்ங்கிற உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.அதே சமயத்தில் நாம்ளும் நம் வசதிக்கேற்ப நாகரிகமாகவும் சாப்பிடவும் வேண்டும்..
முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி ஸாதிகா..
அடுத்தவங்களுக்காக வாழலாம்! அடுத்தவங்க பார்க்குறாங்களேன்னு வாழக்கூடாது!
இர்ஷாத், நாட்டில இது மாதிரி நிறைய நடக்குதுப்பா.நாகரீக வளர்ச்சின்னு பேசாம பாத்திட்டு இருக்க வேண்டியதுதான்.
முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செய்யது முஹம்மது ஆஸாத் அவர்களே...
ஹேமா said..
//இர்ஷாத், நாட்டில இது மாதிரி நிறைய நடக்குதுப்பா.நாகரீக வளர்ச்சின்னு பேசாம பாத்திட்டு இருக்க வேண்டியதுதான்.//
நாகரீக வளர்ச்சிங்கிற பேரில் பலரும் பண்ற கூத்தை நானும் பல தடவை பார்த்திருக்கேன்.சில விஷயங்களில் நமக்கு வேண்டியதை,விருப்பத்தை தடுப்பது போன்ற தோற்றத்தை இந்த நாகரீக வளர்ச்சி ஏற்படுத்திவிடுகிறது.
உங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா.
நமக்காக வாழும் வாழ்க்கைதான் சுகம்.
க்ளாப்ஸ் க்ளாப்ஸ் நமக்காக தான் வாழனும், நம் வசதிக்கு தான் சாப்பிடனும்.
ஜலீலா அக்கா,
துபாய் ராஜா,
உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
//க்ளாப்ஸ் க்ளாப்ஸ் நமக்காக தான் வாழனும், நம் வசதிக்கு தான் சாப்பிடனும்// perfect!!!!
வழி மொழிகிறேன்.. வாழ்த்துக்கள். இத்தனை நாள் இந்த ப்ளாகை மிஸ் பண்ணி இருக்கேன்.
இதில் முக்கியமான ஒன்றை யாரும் உணர்வதில்லை. நம் கையால் எடுத்து விரலால் வாயில் வைத்து சாப்பிடுவது நமக்கு மட்டுமே உரியது.மற்றவர்களின் வாயில் நம் விரல் நுழைவது இல்லை.ஆனால் கரண்டியால் சாப்பிடுவது எவ்வளவு அருவருப்பானது என்பது ஒரே கரண்டி எத்தனை பேரின் வாயில் நுழைந்து வந்தது என்பதை சாப்பிடக்கூடிய அந்த நேரத்தில் கையில் கரண்டியை வைத்துக்கொண்டு யோசித்தால் புரியும்.
அன்பின் அஹமது
நல்ல சிந்தனை - மற்றவர்களுக்காக நாம் வாழ வில்லை - புரிந்து கொண்ட்டார்களெனில் சரி
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா
Post a Comment