Showing posts with label நினைவலைகள். Show all posts
Showing posts with label நினைவலைகள். Show all posts

த‌ள்ளுவ‌ண்டி ப‌ஜ்ஜியும் ர‌யில் டிக்கெட்டும்....


---

இய‌ற்கை வ‌லை பின்னிய‌ ர‌யில்நிலைய‌த்திலிருந்து ஒன்ற‌ரை கி.மிட்ட‌ரில் க‌ட‌ற்க‌ரை.இப்போதுள்ள‌ சூழலில் த‌மிழ்நாட்டை விற்றால்தான் அங்குள்ள சேற்றை அக‌ற்ற‌முடியும் அவ்வ‌ள‌வு அழ‌கான‌ க‌ட‌ற்கரையை ப‌ராமாரிப்பின்றி தேமே என்று வைத்திருக்கிறார்க‌ள்.இப்போது ர‌யில‌டியின் வேறு ப‌குதியிலிருந்து ந‌ல்ல‌ முறையில் தார்ரோடு போட்டு க‌ட‌ற்க‌ரைக்கு வாக‌ன‌ முறையில் எளிதாக‌ போகும்ப‌டி செய்திருக்கிறார்க‌ள்.க‌ட‌ற்க‌ரையை ஒட்டிய‌ ப‌குதியில் வாழ்ப‌வ‌ர்க‌ளின் வீட்டுக்கூரையில் அடிக்கும் உப்பின் ம‌ண‌ம் ஏதோ ஒன்றை உண‌ர்த்தும்..

'ராத்திரி வேளையில‌ அங்கிட்டு போவ‌திய்ய‌.. ந‌ரி வ‌ரும் ' என்று ப‌ய‌முறுத்துவார்க‌ள்..

'த‌னியா யாராவ‌து மாட்டினா ந‌ரி ந‌ம்க‌ண்ணில் ம‌ண்ண‌ தூவிவிட்டு ஊளையிடும் ' என‌ ஏக‌த்துக்கும் பீதியை உண்டாக்கும் த‌க‌வ‌ல் அளிப்பார்க‌ள்..
 
அந்திசாயும்முன் அங்குள்ள‌ உப்ப‌ள‌த்தில் கிரிக்கெட் விளையாடுவார்க‌ள் நானும் விளையாடியிருக்கிறேன் எவ்வ‌ள‌வு ர‌ம்மிய‌மான‌ இய‌ற்கை ஏழையாயிருந்தாலும் ஊரிலேயே இருக்க‌னும் என்ற‌ கூற்று எங்க‌ ஊருக்கு பொருந்தும்.

மாலை நான்க‌ரை ம‌ணிக்கு மாய‌வ‌ர‌ம் காரைக்குடி மார்க்க‌ ர‌யில் போன‌பிற‌கு நாற்ப‌து வ‌ய‌தை தாண்டிய‌வ‌ர்க‌ள்,ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தின‌ர் சில‌ச‌ம‌ய‌ம் ர‌யில‌டியில் உட்கார்ந்து இய‌ற்கை காற்றை சுவாசிப்பார்க‌ள்.லாலுபிர‌சாத் யாத‌வ் ர‌யில்வே ம‌ந்திரியாக‌ இருந்த‌போது எங்க‌ ஊர் ர‌யில‌டிக்கு உட்காரும் ப‌டிக்கு க்ரானைட் க‌ல்லாக‌ மாற்றிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌து.
 
'செய்ய‌து பீடி வெலய‌ ஏத்திட்டாம்மா ' என்ற‌ப‌டி வ‌ந்து அம‌ரும் அறுப‌தைத் தொட்டிருக்கும் ஒருவ‌ர்.ர‌யில‌டியில் எதிர் ப‌குதியிலிருக்கும் காடுக‌ளில் முள்ளை வெட்டித் த‌லையில் வைத்துக்கொண்டு போகும் க‌டற்க‌ரையோர‌த்தில் குடிசை போட்டு வாழும் பெண்க‌ள் அவ‌ர்க‌ளின் வீட்டுத் தேவைக்கும்,சில‌ச‌ம‌ய‌ங்க‌ளில் அந்த‌ விற‌குக‌ளை விற்றும் வாழ்க்கையை ந‌க‌ர்த்துப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்.காலையில் போகிற‌வ‌ர்க‌ள் அந்திசாயும் நேர‌த்தில் அந்த‌ ர‌யில‌டி வ‌ழியாக‌ திரும்புவார்க‌ள்..

ஸ்டேஷ‌ன் மாஸ்ட‌ர்க‌ளை அடிக்க‌டி மாற்றுவார்க‌ள் ஒருமுறை குஜ‌ராத்தைச் சேர்ந்த‌வ‌ர் ஸ்டேஷ‌ன் மாஸ்ட‌ராக‌ வ‌ந்திருந்தார் த‌மிழை க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌ழ‌கியிருந்ததாக‌ சொல்வார். சாதார‌ண‌ த‌மிழ் புரியலாம் ஆனால் எங்க‌ள் ஊரின் பேச்சு வ‌ழ‌க்கு புரிய‌ அந்த‌ ஊரிலேயே பிற‌ந்த‌ இருக்க‌னும் ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் திண‌றிய‌தாக‌ சொன்னார்..அங்குள்ள‌வ‌ர்க‌ள்தான் உத‌வியிருக்கிறார்க‌ள்.டிக்கெட் எடுக்க‌ வ‌ரும் ப‌ல‌ர் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு இல‌வ‌ச‌ம் என்றே வ‌ருவார்க‌ளாம்.டிக்கெட் க‌வுண்ட‌ரில்,
 
'த‌ம்பி மூணு டிக்க‌ட் குடுங்க் திருத்திர‌பூண்டிக்கு '

ஆனால் ஐந்து பேர் இருப்ப‌ர்.

'அம்மா உங்க‌ பைய‌னுக்கும் டிக்கெட் எடுக்க‌னும்மா?'

'ஆ... இது சின்ன‌ப்புள்ள‌...'

12 வ‌ய‌தை தாண்டிய‌பிற‌கும் சின்ன‌ப்புள்ளை.. இப்ப‌டியான‌ சுவ‌ராஸ்ய‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள் அங்கே ந‌ட‌க்கும் முன்பெல்லாம் க‌ம்ப‌ன் எக்ஸ்ப்ர‌ஸ் காரைக்குடி சென்னை மார்க்க‌ ர‌யில் எங்க‌ள் ஊருக்கு இர‌வு எட்டு ம‌ணிக்கு வ‌ரும் முதியோர்க‌ளுக்கும்,நோயாளிக‌ளுக்கும் பேருத‌வியாக‌ இருந்த‌து..பிராட்கேஜ்ஜாக‌ மாத்த‌ப்போகிறோம் என்று அந்த‌ எக்ஸ்ப்ர‌ஸ்ஸையே நிறுத்திவிட்டார்க‌ள்..இந்தியாவிலேயே மீட்ட‌ர்கேஜ் இருக்கும் ஒரே ப‌குதி எங்க‌ள் ப‌குதி ம‌ட்டும்தான்.க‌ர‌டியாய் க‌த்தியாச்சு, உண்ணாவிர‌த‌ம் இருக்க‌வெல்லாம் யோகா தெரிந்திருக்க‌னும் அத‌ற்க்கெல்லாம் யாரும் த‌யாரில்லை..
 
ர‌யில‌டியிலிருந்து க‌ட‌ற்க‌ரைக்கு ந‌ட‌க்க‌ முய‌ற்சித்தோம் நானும் என் ந‌ண்ப‌ர்க‌ளும்.எவ்வ‌ள‌வு ப‌ர‌ந்த‌ வான்வெளி ம‌னித‌ர்க‌ளின் அக‌ங்கார‌ம்,போட்டி,ஏற்ற‌த்தாழ்வு போன்ற‌வ‌ற்றை ம‌ண்டியிட‌வைக்கும் அள‌வுக்கு இருக்கிற‌து இய‌ற்கை.ஊரிலிருந்தால் கைலிதான் க‌ட்டியிருப்போம்..ப‌டிப்பு,வேலை இது ரெண்டுக்கு ம‌ட்டும்தான் பேன்ட்..மெட்ராஸ்க்கே கைலியோடு போன‌ அனுப‌வ‌ம் உண்டு என‌க்கு..எங்க‌ளூரில் வேட்டி என்றுதான் அழைக்க‌ப்ப‌டும்.வெள்ளை,க‌ல‌ர் என்று ப‌ல‌ ர‌க‌ங்க‌ளில் இருக்கும் வ‌ஸ்து வேட்டி..வேஷ்டி என்ப‌து ம‌ருவி வேட்டியாகியிருந்த‌து அந்த‌ வேட்டியை முட்டி தெரிய‌ க‌ட்டினால் அத‌ற்க்குப் பேர் க‌ச்சை..இப்ப‌டியாக‌ இந்த‌ வேட்டியை விவ‌ரிக்க‌வே ஒரு ப‌குதி தேவைப்ப‌டும்..

ந‌ட‌ந்தோம் ம‌ண‌லில் சாய‌ங்கால‌ம் என்ப‌த‌னால் ம‌ண்ணிலிருந்த‌ சூடு அற‌வே விட்டுப்போயிருந்த‌து அப்ப‌டி போக‌யில் அங்கே ஒரு ப‌ழைய‌ க‌ட்ட‌ட‌ம் எதிர்ப‌டும் சின்ன‌துதான் முன்பொரு கால‌த்தில் அது க‌ஸ்ட‌ம்ஸ் ஆபிஸ்'ன்னு ர‌யில‌டியில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெரிய‌வ‌ர் சொல்ல‌ கேட்டிருக்கிறேன்.க‌ல‌ங்க‌ரை விள‌க்குகூட‌ இருந்திருக்கிற‌து பெரிய‌ அளவில் என்று சொல்ல‌முடியாவிட்டாலும் சொல்லும்ப‌டியான‌ க‌ட‌ல்சார்ந்த‌ வாணிப‌ம் ந‌ட‌ந்திருக்கிற‌து..

தி ஹிந்து ஆங்கில‌ பேப்ப‌ரில்கூட‌ வெத‌ர் ரிப்போர்ட்டில் த‌மிழ்நாட்டு வ‌ரிசையில் எங்க‌ள் ஊரைத்தான் முத‌லில் கொடுத்திருப்பார்க‌ள்..மீட்ட‌ரால‌ஜி என‌ப்ப‌டும் வானிலை மைய‌ம் உண்டு எங்க‌ளூரில் நான் ஒரு த‌ட‌வை வெளியில் நின்ற‌வாறு பார்த்திருக்கிறேன்..ம‌ழையைப் ப‌ற்றியோ அல்ல‌து புய‌ல் எச்ச‌ரிக்கையைப் ப‌ற்றியோ இதுவ‌ரை நான் அறிந்து ஊருக்கு ம‌த்தியில் வ‌ந்து அறிவித்த மாதிரி த‌வ‌லில்லை..இம்மாதிரி வானிலை ச‌ம்ப‌ந்த‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளில் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌தாக‌வே இருந்திருக்கிற‌து எங்க‌ள் ஊர்..கார‌ண‌ம் க‌ட‌ல்..

அந்த‌ ப‌ழைய‌ க‌ஸ்ட‌ம்ஸ் க‌ட்ட‌ட‌த்திற்க்கு போக‌ விருப்ப‌மில்லை விவ‌ரிக்க‌முடியாத‌ அள‌வுக்கு அழுக்காய் இருந்த‌து..உள்ளே உடைந்த‌ சாராய‌ பாட்டில்க‌ளும் கிட‌ந்த‌து..ந‌ட‌ந்தோம் சாய‌ங்கால‌ காற்று எங்க‌ளை த‌ள்ளிய‌து..க‌ண்ணுக்கு எட்டிய‌ தூர‌ம்வ‌ரை இய‌ற்கை. ந‌ட‌க்கையில் சில‌ சிப்பிக்க‌ள் காலில் த‌ட்டுப்ப‌டும் சில‌வை மூடிய‌வாறே கிட‌க்கும்..அதை ரெண்டாக‌ப் பிரித்தால் அடிக்கும் க‌விச்சு(அ)நாற்ற‌ம் சொல்ல‌முடியாத‌து..அந்த‌மாதிரி விஷ‌ய‌ங்க‌ளில் நான் ஈடுப‌டுவ‌து கிடையாது க‌ச‌க்கும் என்ப‌தால் பாக‌ற்காயை சாப்பாட்டிலிருந்து பாய்காட் ப‌ன்ற‌வ‌ன் நான்..இப்ப‌டியாக‌ ந‌ட‌ந்துக்கொண்டே இருப்போம்..க‌ட‌ல் அலையின் ச‌த்த‌ம்கூட‌ கேட்க‌வில்லை,இன்னும் போக‌னும் என்கிற‌ வேளையில் ம‌ணியை பார்த்தால் ஐந்து ம‌ணி முடிவுக்கு வ‌ந்து ஆறு ம‌ணியை நெருங்கிக் கொண்டிருக்கும்..குழுவில் ஒருத்த‌ன் முன‌ங்குவான்,
 
'டேய் ஒரு வேல‌ இருக்குடா ம‌ற‌ந்தேப் போய்டேன் ' என்பான் உள்ள‌ங்கையை நெற்றியில் த‌ட்டிய‌வாறு..ஒருத்த‌னுக்கு ந‌ம்ப‌ர் ஒன் வ‌ந்தா ம‌ற்ற‌வ‌னுக்கும் வ‌ர்ற‌ மாதிரி ஆளாளுக்கு ஏதாவ‌து ஒரு கார‌ண‌த்தை சொல்லி வ‌ந்த‌ த‌ட‌த்திலேயே திரும்பிவிடும் ச‌ம‌ர்த்த‌ர்க‌ள் எல்லாவ‌ற்றுக்கும் ந‌ரி மேட்ட‌ர்தான் கார‌ண‌ம் என்று பிற்பாடுதான் தெரிந்த‌து.மெஜாரிட்டி திரும்பிப் போக‌னும் என்று இருந்த‌தால் நான் சொன்ன‌து எடுப‌ட‌வில்லை.வேண்டுமானால் நீ ம்ட்டும் போ என்ற‌து குரூப்பின் பார்வைக‌ள்..

சாதார‌ண‌மாக‌ ஊரின் ந‌டுப்ப‌குதியில் ஆறு ம‌ணிக்கு மேல் வ‌ந்துவிடும் இருட்டு,க‌ட‌ற்க‌ரைப் போன்ற‌ இட‌ங்க‌ளில் கொஞ்ச‌ம் லேட்டாக‌த்தான் இருட்டும்..ர‌யில‌டியில் இருந்த‌வ‌ர்க‌ள் திரும்பிவிட்டிருந்த‌ன‌ர்.ந‌ட‌ந்த‌ அச‌தியில் ரெண்டு நிமிஷ‌ம் உட்கார்ந்தோம்...குரூப்பை திசைமாற்றிய‌வ‌ன் ம‌ட்டும் முத‌லில் கிள‌ம்ப‌ பிற‌கு நாங்க‌ளும் கிள‌ம்பியாச்சு..நானும்
இன்னொருத்த‌னும் ஒரே தெருவில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள்,அத‌னால‌ மூணாவ‌து ஒருவ‌ன் க‌ழ‌ன்டுக்கொள்ள‌ இப்போது ரெண்டு பேராகியிருந்தோம்..
 
ர‌யில‌டியிலிருந்து நேராக‌ மெயின்ரோடு அங்கே ப‌ஸ்ஸ்டாண்ட் ப‌க்க‌த்தில் பேரூராட்சி ஆபிஸை ஒட்டிய‌வாறு மாலை வேளைக‌ளில் த‌ள்ளுவ‌ண்டிக‌ளில் வைத்து ச‌மூசா,ப‌ஜ்ஜி,மு.ப‌ஜ்ஜி,வெ.ப‌ஜ்ஜி,உளுந்துவ‌டை போடுவார்க‌ள்..சாய‌ங்கால‌ வேளை அதாவ‌து நான்கு ம‌ணியிலிருந்து ஏழும‌ணிக்குள் என‌க்கு ப‌சியெடுக்கும்,அந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நானும் இன்னொருத்த‌னும் அங்கே இருப்போம் அன்றைய‌
தேதியில் அந்த‌ ப‌ஜ்ஜிக்கும்,ச‌மூசாவிற்க்கும் நான் அடிமை.சின்ன‌ ப்ளேட்டில் ஒரு ப‌ஜ்ஜி,ஒருச‌மூசா அதிலேயே ச‌ட்னியையும் உற்றி த‌ருவார்க‌ள்..ப‌ஜ்ஜியை ச‌ட்னியில் ஊற‌வைத்து சாப்பிடும்போது அமிர்த‌ம்..ஏதோ ஒன்றை வென்றுவிட்ட‌ திருப்தி..ரொம்ப‌ அருமையாக‌ இருக்கும்.எங்க‌ ஊர்க்கார‌ர்
யாராவ‌து உங்க‌ளிட‌ம் அக‌ப்ப‌ட்டால் கேட்டுப் பாருங்க‌ள்..பால்கார‌ர்க‌ள்,வேலைமுடிந்து வீட்டுக்கு திரும்புப‌வ‌ர்க‌ள் என‌ ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ வ‌கையின‌ரை அங்கே நான் க‌ண்டிருக்கிறேன்.சில‌ர் நின்று சாப்பிட‌விரும்பாம‌ல் பார்ச‌ல் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்க‌ள்,ஏனென்றால் மாலை வேளையில் அந்த‌ மெயின்ரோடு கொஞ்ச‌ம் பிஸியாக‌ இருக்கும்..சில‌ர் நாலுபேர் பார்க்க‌ ஏன் சாப்பிடுவானேன் என்ற‌ எண்ண‌த்தில் பார்ச‌ல் வாங்கி செல்வ‌துண்டு..ந‌ம‌க்கு அதெல்லாம் கிடையாது ஆனால் நாக‌ரீக‌ம்  இருக்கும் அதில் துளிய‌ள‌வும் ச‌ந்தேக‌ம் கிடையாது என்னைப் பொருத்த‌வ‌ரை அடுத்த‌வ‌ர்க்காக‌
வாழும் ர‌க‌ம் கிடையாது..
 
எங்க‌ளூரில் ஆறும‌ணியை உண‌ர்த்தும் வ‌கையில் 'ச‌ங்கு' ச‌த்த‌ம் பேரூராட்சி ஆபிஸ் மாடியிலிருந்து வ‌ரும்..ச‌மீப‌மாக‌ அதை நிறுத்திவிட்ட‌தாக‌ கேள்வி. இப்ப‌டி ப‌ல‌ அடையாள‌ங்க‌ள் ம‌றைந்துவிட்ட‌ன‌ ம‌ணிப் பார்க்க‌த் தெரியாத‌வ‌ர்க‌ள்என‌ ப‌ல‌ த‌ர‌ப்பின‌ரும் ச‌ங்கு ச‌ந்த‌ம் வ‌ந்த‌தும் ஆறு ம‌ணியாச்சு என‌ முடிவுக்கு வ‌ந்துவிடுவார்க‌ள்,அதிலும் டிச‌ம்ப‌ர் போன்ற‌ வாய் த‌ந்தி அடிக்கும் கால‌ங்க‌ளில் சாதார‌ண‌மாக‌வே நாலு டூ ஏழுக்குள் கூட்ட‌ம் நிர‌ம்ப‌ இருக்கும் அந்த‌ த‌ள்ளுவ‌ண்டி க‌டைக‌ளில்,ப‌ல‌ நேர‌த்தில் ஏமாற்ற‌த்துட‌ன் திரும்பி இருக்கிறோம்..இப்போதுதான் துன்ப‌ம் வ‌ந்தால்கூட‌ ட்ரிட்' வை என்ற‌ ச‌ம்பிராத‌ய‌ம் அம‌லில் இருக்கிற‌து அப்போது இருந்திருந்தால் க‌ண்டிப்பாய் போற‌ இட‌ம் ப‌ஜ்ஜி ச‌ட்னி க‌டைதான்..அதேபோல் ஆட்டுக்கால் சூப்பும் ப‌டு பிர‌பல‌ம் அத‌ற்க்கும் ஒரு க‌டை உள்ள‌து. அதை பின்னாடி ச‌ம‌ய‌ம் கிடைக்கும்போல் நோக்க‌லாம் (ம‌லையாள‌ம்...!!)
 
                                                                                                   
                                                                                            ---கொசுவ‌ர்த்தி சுத்தும்..   

Post Comment

சார் ப‌த்து நிமிஷ‌ம்தான் வ‌ண்டி நிக்கும்....

ந‌டு இர‌வில் விக்ர‌வாண்டியோ,மாம‌ண்டூரோ அல்ல‌து டிரைவ‌ருக்கு பிடித்த‌ ஏரியாவா அது'ன்னு க‌ண்டுபிடிக்க‌வே சிர‌ம‌மா இருக்கும் என்ன‌ க‌ல‌ர்னே தெரியாத‌ உள் ப‌னிய‌னோடு ஒரு சிறுவ‌ன் அல்ல‌து பையன் பேருந்தின் க‌ண்ணாடிக‌ளை துடைத்துக் கொண்டே 'சார் வ‌ண்டி ப‌த்து நிமிஷ‌ம் நிக்கும்' என்பான் வார்த்தையில் ப‌த்து நிமிஷ‌மானாலும் கூடுத‌லாக‌ பேருந்து நிற்ப‌து வாஸ்த‌வ‌ம்தான்.. இளையராஜாக்க‌ளும்,ஏஆர் ர‌ஹ்மான்க‌ளும் ஏண்டா இசைய‌மைச்சோம்'ன்னு நொந்து நூடுல்ஸாகிற‌ வ‌கையில் அந்த‌ மோட்ட‌ல் வாச‌லில் சிடிக்க‌ளை போட்டு ரேடியோ என்ற‌ பெய‌ரில் ஒரு டிர‌ம்மில் போட்டு பாடுற‌து ஜான‌கியா இல்ல‌ ப‌ர‌வை முனிய‌ம்மாவா என்று க‌ணிப்ப‌த‌ற்க்குள் பாட்டை மாத்திவிடுவார் அக்க‌டைக்கார‌ர்.இத‌ற்க்கிடையில் ந‌ம் ப‌க்க‌த்து சீட் வாசி ந‌ம் தோளில் அல்ல‌து கொஞ்ச‌ம் முன்னேறி ந‌ம் ம‌டியில்? கிட‌க்க‌வும் வாய்ப்பு இருக்கும் அந்த‌ள‌வுக்கெல்லாம் நான் விட‌ற‌தில்லை கொஞ்ச‌மும் இர‌க்க‌மில்லாம‌ல் ப‌ட்டென்று சொல்லிவிடும் சுபாவ‌ம் அதே போல் நானும் த‌வ‌றிகூட‌ அவ‌ர் ம‌டிக்கு முன்னேறுவ‌தெல்லாம் கிடையாது.இத‌னால்தான் ர‌யில்ப‌ய‌ண‌ங்க‌ளில் வ‌ரும் சிநேக‌ம் பேருந்தில் வ‌ருவ‌தில்லை பெரும்பாலும்.. ந‌ம்ப‌ர் ஒன்னுக்கு வ‌ந்தாலும் வ‌ராவிட்டாலும் அங்கே இற‌ங்குவ‌து ந‌ல்ல‌து ஏனென்றால் அப்போதெல்லாம் குஷ‌ன் கிடையாது எக்ஸ்ரே எடுக்க‌ எப்ப‌டி உட்காருவமோ அப்ப‌டித்தான் அந்த‌ திருவ‌ள்ளுவ‌ர் பேருந்தில் உட்கார‌ வேண்டும் முதுகெலும்பு ரெண்டும் ந‌ம்மை வெளியே கொஞ்ச‌ம் ஆசுவாச‌ப்ப‌டுத்த‌ சொல்லும்..இள‌நீர்க்க‌டையும் க‌ட்ட‌ண‌ க‌ழிப்ப‌றையும் கொஞ்ச‌ம் இடைவெளியில்தான் இருக்கும் ந‌ல்ல‌ ஒற்றுமை?. டிரைவ‌ருக்கும் க‌ண்ட‌க்ட‌ருக்கு சாப்பிடுவ‌தெல்லாம் ஃப்ரீ என்ப‌தால் இட்லி ச‌ட்னியில் ஆரம்பித்து வாச‌ல் க‌டை வாழைப்ப‌ழ‌ம் வ‌ரை ஃபுல்லா லோடை வ‌யிற்றுக்கு ஏத்திவிடுவார்க‌ள் அதனால் அவ‌ர்க‌ளை க‌டைவாசிக‌ள் முறைப்ப‌தோ ம‌ல்லுக‌ட்டுவ‌தோ அரிது..புருவ‌த்தை உய‌ர்த்தினால் இவ‌ர்க‌ள் நிறுத்தும் ஸ்டாப்பை மாத்திவிடும் அபாய‌த்தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள்.. அப்புற‌ம் சாப்பாடு ப‌ற்றிச் சொன்னால் இட்லியை போராடித்தான் பிய்க்க‌ வேண்டியிருக்கும் இட்லிக்கே இந்த‌ க‌தியென்றால் ப‌ரோட்டாவுக்கு மாவுக்க‌ட்டு போடும் நிலைகூட‌ வ‌ர‌லாம். எந்த‌ நேர‌மும் திற‌ந்தே கிட‌க்கும் த‌ண்ணிர் தொட்டி அல்ல‌து டிர‌ம், குவ‌ளை ப‌ல‌ அடி வாங்கி பாவ‌ம் என்னை விட்டுடு என்று கெஞ்சும் நிலையில்தான் வைத்திருப்பார்க‌ள்..சுகாதார‌ம் ஏ ஒன்.. ஒருமுறை இடுப்பில் க‌ட்டிய‌ ட‌வ‌லுட‌ன் தோசைக்க‌ல்லிருந்து என்க்கு தோசை ப‌ரிமாறிய‌ அந்த‌ மாஸ்ட‌ர் முக‌த்தை ம‌ற‌க்க‌வேமுடியாது இம்மாதிரியான‌ விப‌ரீத‌ங்க‌ள் இருந்தாலும் ஜீர‌ணிக்கிர‌ ஒரே விஷ‌ய‌ம் ப‌க‌ல் நேர‌த்தில் அந்த‌ மோட்ட‌ல் இருக்கும் இட‌ம் காற்றோட்ட‌மான‌ இட‌த்தில் வைத்திருப்பார்க‌ள் அது ஒன்னுதான் என‌க்கு தெரிந்தது..எந்த‌ ஆட்சி வ‌ந்தாலும் இவ‌ர்க‌ள் வைக்கிற‌ விலைக்கு மாற்று கிடையாது ப‌ய‌ணிக‌ளும் வேற‌ வ‌ழி என்கிற‌ முறையிலே இதுவ‌ரை வாங்கி வ‌ந்திருக்கிறார்க‌ள் வாங்கிக் கொண்டிருப்பார்க‌ள் இன்ன‌மும்..அங்கே வாச‌லில் இருக்கிற‌ டீக்க‌டையில் பாலுக்கு மாடு,மாட்டோட‌ ம‌டி என் எல்லாத்துக்கும் சேர்த்தே விலை சொல்வார்க‌ள்..பெப்ஸியில் எக்ஸ்பைரி டேட் செக் ப‌ண்ணியிருக்கிறேன் ஒருமுறை க‌ரெக்டா இருந்த‌து ஆச்சரிய‌ம்..ப‌க்க‌த்திலிலுள்ள‌ டெலிபோன் பூத்தில் லோக்க‌லுக்கே எஸ்.டி.டி பில்லு வ‌ரும் (ப‌க‌ல் நேர‌த்தில்) விலையையோ த‌ர‌த்தையோ யாரும் எதிர்த்து கேட்க‌மாட்டார்க‌ள் அதுதான் ஏனென்று இன்னைவ‌ரைக்கும் புரிய‌வில்லை..அவ‌ர்க‌ள் கேட்ப‌து இருக்க‌ட்டும் இவ்ளோ பேசுற‌ நீ ஏன் கேட்க‌கூடாது என்று கேட்கும் அன்ப‌ர்க‌ளுக்கு,, 

ஆளை விடுங்க‌ள் என‌க்கு சாப்பிட‌, எழுத‌ கை வேண்டும்..
________________________________________________
ன் கையும் ரிமோட்டும் போட்ட‌ போட்டியில் வ‌ந்து நின்ற‌து இம‌ய‌ம் டிவியில் ஒரு நிக‌ழ்ச்சியில் நேய‌ர் விருப்ப‌மாம் பூங்காவில் உட்கார்ந்திருந்த‌ ஒருவ‌ரிட‌ம் டிவி விஜே,

'உங்க‌ பேரு..?'

'..........'

'என்ன‌ ப‌ன்றீங்க‌'?

'ஏதோ போய்கிட்ருக்கு' ??#$

'உங்க‌ளுக்கு லேட்ட‌ஸ்ட்டா வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் பிடித்த‌து?'

'க‌ள‌வாணி'

'த‌மிழ்லேயே ரொம்ப‌ பிடித்த‌ ப‌ட‌ம் எது?'

'திருட்டுப‌ய‌லே'..


இப்போ அவ‌ர் எதில் ஃபுரோப‌ஷ‌ன‌ல் என்ப‌து உங்க‌ள் க‌ணிப்பிற்க்கே விட்டுவிடுகிறேன்..


ம‌க்க‌ள் தொலைக்காட்சியில் 'யாருக்கு ஆயிர‌ம்' நிக‌ழ்ச்சி அருமை அதைவிட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியை தொகுத்த‌ளிப்ப‌வ‌ர் (பெய‌ர் தெரிய‌வில்லை) த‌மிழை இவ்வ‌ள‌வு அழ‌காக‌ உச்ச‌ரிப்ப‌தில் அந்த‌ த‌மிழ் மேலேயே ரொம்ப‌ ஆசை வ‌ந்திடுவ‌து அவ‌ரின் வெற்றி த‌மிழின் வெற்றி..வ‌ட‌நாட்டு சாய‌ல் அவ‌ர் முக‌த்திலிருக்கிற‌து..ரொம்ப‌ அற்புத‌ம்..வாழ்த்துக்க‌ள்..

தே ம‌க்க‌ள் தொலைக்காட்சியில் 'கொஞ்ச‌ம் சேட்டை கொஞ்ச‌ம் அர‌ட்டை' நிக‌ழ்ச்சியில் அதை தொகுத்த‌ளிப்ப‌வ‌ர் திருநெல்வேலி பாஷையில் பேசுவ‌து சூப்ப‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ரிட‌ம்,

'அண்ணே இந்த‌ 'ஹெட்மாஸ்ட‌ர்' அப்ப‌டின்னு சொல்லுதோம்'ல‌ அதுக்கு த‌மிழ்'ல‌ என்னேன்னே பேரு'?

'ஹெட்மாஸ்ட‌ர்னா..(யோசித்துவிட்டு)பிரின்ஸிபாலு'ன்னு அர்த்த‌ம்' :)

'அதாவ‌து ஹெட்மாஸ்ட‌ர்னாஆஆஆஆ த‌மிழ்'ல‌ பிரின்ஸிபால்'ன்னு அர்த்த‌ம்'யா'ன்னு அவ‌ர் கேம‌ராவை பார்த்து சொன்ன‌தும் ந‌மக்கு வ‌யிற்றை புண்ணாக்கிவிடுகிற‌து


__________________________________________________
Take a Look at our Local Buses :)









__________________________________________-

Finally  இதுக்கும் இய‌ந்திர‌ம் வ‌ந்தாச்சு..

______________________________

என‌க்கு தெரிந்து த‌மிழ்நாடு அர‌சு பேருந்துக்கென்றே ஒரு வ‌லைப்பூ..முடிந்த‌வ‌ரை எல்லா கோட்ட‌த்தையும் சேர்த்திருக்கிறார்க‌ள் அதுவும் புகைப்ப‌ட‌த்தோடு..


Post Comment

தாலுக்கா டூ த‌லைந‌க‌ர‌ம் -2..


எப்பாடு ப‌ட்டாலும் ஒரு பாடு ப‌ட்டு ஒரு/ப‌ல‌ வ‌ழியாக‌ டெல்லியை மிகுந்த‌ பெருமூச்சோடு ஜி.டி.எக்ஸ்ப்ர‌ஸ் அடைந்த‌து.எங்க‌ளை வ‌ர‌வேற்க‌ வ‌ந்த‌வ‌ரை நாங்க‌ தேடி க‌ண்டுபிடிக்க‌ வேண்டிய‌தாயிற்று, டெல்லி குளிருக்கு போட்ட‌ ம‌ஃப்ள‌ரை குளிர் இல்லாத‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலும் போடுவார் போல‌ ஏதோ ஒரு க‌ல‌ரில் ச‌ட்டையும் போட்டிருந்தார் கையெல்லாம் குலுக்கிவிட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும்போதே எல்லாம் க‌ரெக்டா எடுத்துட்டு வ‌ந்துட்டீங்க‌ளான்னு ரொம்ப‌ மொட்டையா கேக்க‌வும்,

'எல்லாம்'னா' யாரு முந்துவா எம்.பி.ஏவேதான்..

'பாஸ்போர்ட்,ச‌ர்டிபிகேட் அதெல்லாம்ப்பா'

'அதெல்லாம் க‌ரெக்டா எடுத்துட்டு வ‌ந்தாச்சு ஆமா ரெண்டு நாள்'ல‌ வேல‌ முடிஞ்சிரும்'ல‌' நான் கேட்க‌வும்,

'உங்க‌ அதிர்ஷ்ட‌ம் ஒரு நாளையிலும் முடிய‌லாம்,துர‌திர்ஷ்ட‌மான‌ மூணு நாள் கூட‌ ஆக‌லாம்'

அதிர்ஷ்ட‌த்துக்கும் ந‌ம‌க்கும் த‌மிழ்நாடு டூ டெல்லியை விட‌ தூர‌மாச்சே'ன்னு வ‌யித்துல‌ கிலி'யை உண்டுபண்ண‌வும்,

'கொஞ்ச‌ம் சீக்கிர‌ம் வேலையை முடிச்சு கொடுத்திருங்க‌ளேன்'

அதுக்கு த‌லைமுறை த‌லைமுறையாய் த‌மிழ‌ர்க‌ள் சொல்லும்

'என் கைல‌ என்ன‌ப்பா இருக்கு'

அதோடு பேச்சுக‌ளுக்கு ஷ‌ட் ட‌வுன் ப‌ன்னிட்டு டெல்லியை வேடிக்கை பார்த்து கொண்டு வ‌ந்த‌ ஒரு ம‌ணி நேர‌த்திற்க்குள் அவ‌ர் த‌ங்கும் இட‌ம் வ‌ந்த‌து..

இற‌ங்கிய‌தும் சுற்றி நோட்ட‌மிட்டேன் வ‌ட‌ நாட்டு சாய‌ல் அனைத்தையும் மொத்த‌மாய் குத்த‌கைக்கு எடுத்திருந்த‌து அந்த‌ ஏரியா.. தூர்த‌ஷ‌னில் எப்ப‌வோ ஏதோச்ச‌யாய் பார்த்த‌ ம‌னித‌ர்க‌ள் இப்ப‌ நேரில்..

மாடி போர்ஷ‌னில் வ‌ழிகாட்டி குடியிருந்தார்.பேச்சுல‌ராய் இவ‌ர் இருக்க‌,கீழ் போர்ஷ‌னில் ஒரு பேமிலி குடியிருந்த‌து..இங்கே அப்ப‌டி ந‌ட‌க்குமா பேச்சுல‌ர்'ஸை அந்த‌ ஏரியாவிலேயே இருக்க‌விட‌மாட்டார்க‌ள்.
மூன்று பேருக்கு ஏத்த‌ ரூம்தான் அது மூன்று பேரும் ஒல்லியாக‌ இருந்த‌தால் தெரிய‌வில்லை கொஞ்ச‌ம் 'FAT' ஆன‌ ஆள் இருந்தால் சிர‌ம‌ம்தான். பாத்ரூம் சொல்லிக்கொள்ளும்ப‌டி இல்லை அதனால் குளிய‌ல் என்ற‌ ச‌மாச்சார‌த்தை 'பாஸ் செய்துவிட்டு தூங்க‌ போய்ட்டேன் எங்கே போற‌து தூங்கிட்டேன்..

அந்த‌ நாள் ரெஸ்ட் என்ப‌தால் ப‌ய‌ண‌க‌ளைப்பில் தூங்கியிருந்தோம் வ‌ழிகாட்டி மட்டும் எழுந்து ப‌க்க‌த்தில் மார்க்கெட்டுக்கு போய் காய்க‌றி இன்ன‌ம்பிற‌ ஐயிட்ட‌ங்க‌ளை வாங்கிட்டு வ‌ந்தார் என‌க்கு கொஞ்ச‌ நேர‌த்தில் விழிப்பு வ‌ந்துவிட்ட‌து.

ந‌ல்லா தூங்குனிங்க‌ளான்னார்'

'ம்' என்றேன்..

'நீங்க‌ தூக்க‌த்திலேயே பேசுறீங்க‌,உங்க‌ கூட‌ வ‌ந்த‌வ‌ரும் ப‌க‌ல் ர‌யில்ல‌ சாப்பிட்ட‌து முத‌ற்கொண்டு தூக்க‌த்திலேயே ஒரு ப‌ய‌ண‌ம் போயிட்டாரு'என்றார்..

என‌க்கு புது இட‌ங்க‌ளில் தூக்க‌த்தில் புல‌ம்ப‌ல் வ‌ரும் என்று அவ‌ர் சொல்லித்தான் அன்றைக்கு தெரிந்தது..ச‌க‌வ‌னை எழுப்பிவிட்டு சாப்பிட்டோம் கீழிருந்து ஒரு சிறுவ‌ன் வ‌ந்து 'ஹிந்திலே ஏதோ சொல்லிட்டு போனான் வ‌ழிகாட்டியிட‌ம்..  ஊரு,பேரு,குடும்ப‌ம் எல்லாத்தையும் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் கேட்டுக்கொண்டோம்..கேர‌ம்போர்டு இருந்த‌து மிக வ‌ச‌தியாப்போன‌து அன்றைய‌ பொழுது..

அடுத்த‌ நாள் காலையிலேயே ரெடியாகி சான்றித‌ழ்,பாஸ்போர்ட் ச‌கித‌மாக‌ கிள‌ம்பினோம் அடுத்த‌ நாற்ப‌து நிமிட‌ங்க‌ளில் போய் சேர்ந்த‌ இட‌ம் ம‌த்திய‌ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு அமைச்ச‌க‌த்தின் க‌ட்டிட‌த்தில் இட‌துபுற‌த்தில் இருந்த‌ 'அட்ட‌ஸ்டேஷ‌ன்' ப‌ணி ந‌டைபெறும் வ‌ளாக‌ம் அங்கே சென்ற‌தும் அதிர்ச்சி... அது என்ன்.ன்ன்ன்னா

க்யூ நின்ற‌து அது க்யூ'வா இல்ல‌ மினி ஜி.டி. எக்ஸ்ப்ர‌ஸ்ஸா எவ்வ‌ள‌வு பெருசு... ய‌ய்யாடி..

'இவ‌ங்க‌ளெல்லாம் நேத்து நைட்டே வ‌ந்திருக்க‌னும்'என்றார் வ‌ழிகாட்டி.

'ஙே..'

பார‌த‌ மாதாவே ஆச்சிரிய‌ப்ப‌டும் அள‌வுக்கு வ‌கைதொகையாக‌ இந்தியாவின் அனைத்து மொழியின‌ரும் உலாவிய‌ இட‌ம் அனேக‌மாக‌ என‌க்கு தெரிந்த‌து இதுவாக‌த்தானிருக்கும்..லைனில் நின்றுக்கொண்டிருந்தோம்.வ‌ழிகாட்டி அலுவ‌ல‌க‌த்திற்க்குள் சென்றுவிட்டார்.அங்கேயே ஒருவ‌ர் டீ விற்ப‌னை செய்துக்கொண்டிருந்தார்..

நேர‌ம் ஆக‌ ஆக‌ க்யூ'வில் முன்னேற்ற‌ம் இருந்த‌து..

இதில் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ங்க‌ள்..

1) சான்றித‌ழ் போலி' என்று தெரிந்தால் அப்ப‌டியே தோளில் கையைப் போட்டு கூட்டிப்போய் விடுவார்க‌ள்..டெல்லி 'க‌ளி' எப்ப‌டின்னு? தெரிய‌வில்லை..

2) 12:30 ம‌ணிக்கு அட்ட‌ஸ்டேஷ‌' அலுவ‌ல‌க‌ க‌வுண்ட்ட‌ர்க‌ள் மூடிவிடுவார்க‌ள்..திரும்ப‌வும் 2:30 ம‌ணிக்கு திற‌ப்பார்க‌ள் 12:25'க்கு க‌வுண்ட்ட‌ர் கிட்ட‌ நிற்ப‌வ‌ருக்கு மோட்ச‌ம்தான்..

3) முத‌லில் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை அலுவ‌ல‌க‌த்தில் சான்றித‌ழ் 'அட்ட‌ஸ்ட்'(ஒரிஜின‌ல்தானா) செய்ய‌ப்ப‌ட்டு,அதுக்கப்புற‌ம் 'வெளியுற‌வு அமைச்ச‌க‌த்தில் சான்றித‌ழை ச‌ம‌ர்பிக்க‌ அங்கு மூணு ம‌ணி நேர‌மோ,அல்ல‌து ஐந்து ம‌ணி நேர‌மோ வெயிட் ப‌ண்ண அவ‌ர்க‌ள் ப‌ங்குக்கு சான்றித‌ழின் முதுகில் ஒரு முத்திரையை குத்துவார்க‌ள். க‌டைசியாக‌ துபாய் தூத‌ர‌க‌த்தில் இந்திய‌ ரூபாய் 500 ஐ செலுத்திவிட அவ‌ர்க‌ள் நாட்டின் த‌பால்த‌லையை சான்றித‌ழின் முதுகில் ஒன்னுக்கு இர‌ண்டாக‌ ஒட்டிவிடுவார்க‌ள்..அத்தோடு முடிந்த‌து வேலை..அடுத்து ர‌யில் ஏற‌ வேண்டிய‌துதான் பாக்கி..

யார் செஞ்ச‌ ந‌ன்மையோ எங்க‌ளுக்கு சான்றித‌ழ் அட்ட‌ஸ்ட் செய்யும் வேலை எந்த‌வொரு தொல்லையும் இல்லாம‌ல் இனிதே முடிந்த‌து..வ‌ழிகாட்டிக்கு டாட்டா காட்டிவிட்டு திரும்ப‌வும் ஜி.டி எக்ஸ்ப‌ர‌ஸ்ஸிலேயே சென்னை வ‌ந்து சேர்ந்தோம்.ந‌ம்ம‌ எம்.பி.ஏவும் நானும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஆனோம் அப்போது,ஆனால் அவ‌ன் ந‌ம்ப‌ரோ முக‌வ‌ரியோ எதுவுமே அச்ச‌ம‌ய‌த்தில் வாங்க‌வில்லை..அவ‌ன் இந்த‌ ப்ளாக்கை ப‌டிக்கிறான்னா என்ப‌துகூட‌ என‌க்கு தெரிய‌வில்லை அப்ப‌டி ப‌டித்தான் என்றால் என் ஃப்ரோபைலில் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் இ மெயில் முக‌வ‌ரிக்கு மெயில் அனுப்ப‌வும் வேண்டுகோள் விடுக்கிறேன்.(ந‌ண்பேன்..டா)

அதிமுக்கிய‌மான‌ டிஸ்கி: 'டெல்லி எருமை டெல்லி எருமை'ன்னு சொல்றாய்ங்க‌ளே எப்ப‌டியாவ‌து பார்த்திர‌லாம் என்றால் 'எருமை ப‌ட‌ம் போட்ட‌ போஸ்ட‌ர் கூட‌ பார்க்க‌லை' என்ப‌துதான் க‌டும் சோக‌ம்... இனிமே யாராவ‌து எருமையை டெல்லி எருமைன்னு சொல்லி வித்தீங்க‌... 

Post Comment

MOTOROLA L6...

 கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட்- நன்றி கூகிள்

சென்னை செல்வதற்காக பட்டுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் ஏறினேன்.நல்ல குஷன் பேக் சிஸ்டெமெல்லாம் இருந்து டிவியில் கார்த்திக்கும் அவரது நண்பர்களும் ஏதோ பாடிக் கொண்டிருந்தார்கள். ஜன்னலோர சீட் வாய்த்ததால் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.அரை மணி நேரத்தில் வண்டி கிளம்பியது. கிளைமேட் வேற நல்லா இருந்ததால் அந்தப் பேருந்தில் போவது ஏதோ ஒரு மகிழ்ச்சியை தந்தது. சில்லென்ற காற்று முகத்தில் அறைந்துக்கொண்டே இருந்தது வாங்கிய அறையெல்லாம் போதும் என்ற நிலையில் ஜன்னலை மூடிவிட்டேன்...வண்டி கிளம்பிய கால் மணி நேரத்தில் பக்கத்திலிருந்தவர் தூங்கிவிட்டார்!!! எப்படித்தான் சில பேருக்கு உடனேயே தூக்கம் வருகிறது என்பதை யாராவது பி.ஹெச்.டி செய்தால் நலம்.குறட்டை,தோள்'ல சாய்றது போன்ற தொந்தரவு பக்கத்திலிருந்தவரிடம் இல்லாதது என் பாக்கியம்.மதுக்கூர்,மன்னார்குடி,வலங்கைமான் வழியாக கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்வதற்குள் மூணு மணி நேரம் அவுட்'டாகியிருந்தது.பத்து நிமிஷம் வண்டி நிற்கும் என கண்டக்டர் திருவாய் மலர்ந்ததால் நான் கீழே இறங்கி வாழைப்பழமும்,வாட்டர் பாட்டிலும் வாங்கிவிட்டு என் சீட்டிற்கு வந்துவிட்டேன்.நான் சீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த ஒருவன் பதற்றத்துடன் 'சார் உங்க மொபைலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுக்கமுடியுமா அவசரம் சார் என் ஃப்ரெண்டுக்கு அடிப்பட்ருச்சு ப்ளீஸ் சார்'   நமக்குதான் இரக்க குணமாச்சே!' சரி நம்பரை குடுங்க என்றேன்.. இதோ தர்றேன் என்றவன் ' குடுங்க சார் நான் அடிக்கிறேன் என்றவனை நம்பி மொபைலைக் கொடுத்ததும், 'ஹலோ ஹலோ ஹலோ'ன்னு அவன் பேசியபடியே பஸ்ஸீக்கு பின்னாடி போனதும் எனக்கு பொறி தட்டியது, ஆஹா ஏதோ தில்லுமுல்லுன்னு நினைத்து பஸ்ஸை விட்டு இறங்கி தேடினேன் P.T. உஷாவுக்கு கும்பகோணத்துல ரசிகர் மன்றம்? வெச்சிருப்பான் போல, மின்னல் மாதிரி பறந்துட்டான்.. என்ன பண்றதுன்னே தெரியல,என் கவனக்குறைவுக்கு அது சாட்டையடி என நினைத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் வாங்கி கொண்டார்கள்.அங்கே என்னோடு இன்னொருத்தரும் நின்றிருந்தார் அவரது பெட்டியை எவனோ ஆட்டைய போட்டுட்டானாம்.. நல்லவேளை நான் பெட்டி கொண்டு வரவில்லை..அந்த சம்பவத்திலிருந்து அறிமுகமில்லாதவர் யாரும் ஏதும் கேட்டால் அந்த இடத்தில் நான் "பே பே பே' தான்..

Post Comment

'ஏடிஎம்மும் பிராட்கேஜ்ஜீம்' - 2 (NATIVE UPDATES)


நான் படித்த பள்ளியில் ஆசிரியர்களில் சில பேரைத் தவிர வகுப்பறை கட்டிடங்கள் அனைத்துமே புதுசு.படிக்கும்போதெல்லாம் எப்படா வீட்டுக்கு போவோம் என்றிருக்கும் இப்போ இன்னும் கொஞ்ச நேரம் அங்கு இருந்திருக்கலாமே என்று மனதில் தோன்றியதை 'ப்ளாக்கர்' மேல சத்தியமாய் சொல்லலாம்.என் மேல் தனி கவனம் எடுத்த ஆசிரியை திருமதி. பி. ரோஸம்மாள் அவர்களை நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.அதைவிட சந்தோஷம் இப்போது அவர்கள் எங்கள் பள்ளியின் தலைமைஆசிரியர்..தகுதியானவர்தான்.அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

############################################################

                                                                              
நம் ஆல் டைம் ஃபேவரிட் ரயில்வே ஸ்டேஷன். மாறவில்லை அதே கடல்காற்று, இயற்கை ரம்மியம், மன நிம்மதியான இடம், நான் ஊரிலிருந்த ஒரு மாதத்தில் அதிகம் விஜயம் செய்தது இங்கேதான்.இன்னும் இங்கே மீட்டர்கேஜில் தான் ரயில்கள் போய்க்கொண்டிருக்கின்றன,பிராட்கேஜ்ஜா மாத்தச்சொல்லி கோரிக்கை, போராட்டம்.... ம்ஹீம் எதுக்கும் பலன் இல்லை..என்ன செய்யலாம் சொல்லுங்க..

############################################################

சாப்பிடும்போது, பைக் ஓட்டும்போது,குளிக்கும்போது இப்படி எப்பவெல்லாம் வேலையா இருப்போமோ அப்பவெல்லாம் மொபைல் ரிங் பதறியடிச்சுக்கிட்டு யார் போன் பண்றாங்க அப்படின்னு எடுத்தா மறுமுனையில ரஜினி 'நான் ஒரு தடவை சொன்னா' அப்படின்றாரு அவரு ஒரு தடவையோ இல்ல நூறு தடவையோ சொல்ற மாதிரி நான் எதுவுமே செய்யல, இதே மாதிரி, பாட்டு, ரிங்டோன், கவிதை, அட்வைஸ் அப்படின்னு லிஸ்ட் சொல்லிக்கிட்டே போகலாம்.. இந்த செல்போன் கம்பெனிக்காரங்க கொடுக்கிற லொள்ளு தாங்கல.. புறப்படும் சமயத்தில்தான் 'DO NOT DISTURB' அப்படிங்கிற ஆப்ஷன் இருக்கிறது தெரிஞ்சது.. தெரிஞ்சு..

############################################################

ஒரு அரசுடைமை வங்கியில் பணம் எடுக்கிறது சம்பாதிக்கறதை விட கஷ்டமாயிருக்கிறது.வழக்கம்போல் க்யூஉ உ உ உ உ உ உ உ நிற்க என்ன இவ்வளவு பெரிய க்யூ அப்படின்னு பார்த்தால் பணம்/எடுக்க/டெபாஸிட் பண்ண அப்படீன்னு இரண்டு கவுண்டர்கள் இருக்க ஒரு கவுண்டரில் ஆள் வராததால்(அதுவும் திங்கள்கிழமை வெளங்கிரும்) இன்னொன்றில் உள்ளவரே இரண்டு வேலையையும் கவனிக்க வேண்டியதாயிற்று.. இதற்கிடையில் கம்ப்யூட்டர் ஹேங்க் ஆயிருச்சு என்ற அறிவிப்பு வேற.இதில் கவனிக்க வேண்டிய விளம்பரம்.
'நீங்கள் ஏன் க்யூவில் நின்று காத்திருக்க வேண்டும் ஏடிஎம் கார்டு அப்ளை பண்ணி கார்டு வாங்கிக்கொள்ளுங்கள்'
ஏடிஎம் ஃபார்ம் குறைந்தது ஐந்து தடவை கேட்டிருப்பேன் இன்னும் நூறு தடவை கேட்டாலும் வர்ற ஒரே பதில் 'தீர்ந்திருச்சு சார் போய் மேனேஜர்ட்ட சொல்லுங்க'
மேனேஜரிடமும் அதே பதில்தான் வந்தது அப்படிங்கிறதை சொல்லித்தான் தெரியனுமா..

Photo Courtesy: Zakir Hussian


Post Comment

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா..


சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா" எங்கயோ கேட்ட பாடலே இந்த கட்டுரையின் வேர்.நம்ம ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம். காதிர் முகைதீன் கல்லூரி நம்ம ஊருக்கு முக்கியஅடையாளம் நாகப்பட்டினம் முதல் பேராவூரணி அறந்தாங்கி வரை மாணவர்கள் படித்த கல்லூரி பழமைவாய்ந்தது.அந்த வேப்ப மர சூழலும்,இயற்கையின் பசுமையும் அக் கல்லூரியின் வாயிலை அலங்கரிக்கும்.நான் அங்கே படிக்கவில்லையென்றாலும்(ஏன் படிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு (அ)நியாயமா ஒரு பதிவு போடனும் ஏன் வம்பு) கடல்காற்றின் சுகமும்,பாசாங்கான எங்கள் ஊரின் பேச்சு வழக்கும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. கடலை பார்த்த ரயில் நிலையம்.அந்த ரயில் நிலையத்தில் ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட கவலையும் தணியும்.அப்பேர்ப்பட்ட ரம்மியமான இயற்கை வலையில் அமைந்தது.இதை நான் பெருமையாகவே சொல்வேன்.காலை 8 மணிக்கு ஒரு ரயிலும்,மாலை 4 மணிக்கு ஒரு ரயிலுமாக காரைக்குடி-மயிலாடுதுறை ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் எங்கள் ஊரையும் தொட்டுச் செல்லும். முன்பு காரைக்குடி- சென்னை இடையே ஒடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலும் எங்கள் ஊரின் வழியே சென்று கொண்டிருந்தது.அதுக்கு மூடுவிழா நடத்தி சில வருடங்கள் ஆகி விட்டது. சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த ரயில்நிலையம் வந்து படிக்காத மாணவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்தளவுக்கு எங்கள் ஊர் மாணவர்களின் படிப்புக்கும்,இந்த ரயில் நிலையத்துக்கும் பிணைப்பு அபரிதமானது. பல சமயங்களில் வாத்தியார்கள் முன்னிலையில் வகுப்பறையாக உருவெடுத்த பெருமை இந்த ரயில் நிலையத்தையேச் சாரும். வயதான முதியோர்களும்,இளைஞர்களும் வயது வித்தியாசமின்றி வந்து போகும் இடமாக இருந்தது எனக்கு தெரிந்தவரையில் ரயில்நிலையம்தான். வருடா வருடம் மே அல்லது ஜீன் மாதங்களில் ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட,மாநில அளவிளான கால்பந்து போட்டி நடக்கும்.அந்த ஒரு மாதம் முழுவதும் மாலை நேரங்களில் எங்களின் ஊரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம்.நினைத்தாலே இனிக்கும் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இந்த கால்பந்து தொடர் போட்டியை குறிப்பிடலாம்.அந்த தொடர் போட்டி ஆரம்பமாகும் நாளில் இருக்கும் சந்தோஷம்,அதன் நிறைவு நாளிலிருக்கும் கவலை கல்யாணம் முடிஞ்சு பத்தே நாள்'ல வெளிநாட்டுக்குப் போகிற மணமகனின் கவலைக்கு ஈடானுது.அவ்வளவு தூரம் எங்கள் மக்களோடு ஒன்றிப் போன விளையாட்டு கால்பந்து. அவிச்ச அல்லது அவிக்காத கடலையை சாப்பிட்டுக்கிட்டு இந்த டீம் கோல் போடுமா,அந்த டீம் ஜெயிக்குமா பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டு ஆர்வத்துள்ளலில் எவ்வித கவலையும் இன்றி இருக்கும் அந்த நிமிடம் வாழ்நாள் முழுதும் வராதா(வராது!)என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு.

டிஸ்கி: இது மீள் பதிவு...

Post Comment

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா


சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா" எங்கயோ கேட்ட
பாடலே இந்த கட்டுரையின் வேர்.நம்ம ஊர் தஞ்சை மாவட்டம் 
அதிராம்பட்டினம்.காதிர் முகைதீன் கல்லூரி நம்ம ஊருக்கு முக்கிய
 அடையாளம்.நாகப்பட்டினம் முதல்  பேராவூரணி,அறந்தாங்கி வரை மாணவர்கள் படித்த கல்லூரி.பழமைவாய்ந்தது.அந்த வேப்ப மர சூழலும்,இயற்கையின் பசுமையும் அக் கல்லூரியின் வாயிலை அலங்கரிக்கும்.நான் அங்கே படிக்கவில்லையென்றாலும்(ஏன் படிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு ()நியாயமா ஒரு பதிவு போடனும் ஏன் வம்பு) கடல்காற்றின் சுகமும்,பாசாங்கான எங்கள் ஊரின் பேச்சு வழக்கும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. கடலை பார்த்த ரயில் நிலையம்.அந்த ரயில் நிலையத்தில் ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட கவலையும் தணியும்.அப்பேர்ப்பட்ட ரம்மியமான இயற்கை வலையில் அமைந்தது.இதை நான் பெருமையாகவே சொல்வேன்.காலை 8 மணிக்கு ஒரு ரயிலும்,மாலை 4 மணிக்கு ஒரு ரயிலுமாக காரைக்குடி-மயிலாடுதுறை ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் எங்கள் ஊரையும் தொட்டுச் செல்லும். முன்பு காரைக்குடி- சென்னை இடையே ஒடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலும் எங்கள் ஊரின் வழியே சென்று கொண்டிருந்தது.அதுக்கு மூடுவிழா நடத்தி சில வருடங்கள் ஆகி விட்டது. சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த ரயில்நிலையம் வந்து படிக்காத மாணவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்தளவுக்கு எங்கள் ஊர் மாணவர்களின் படிப்புக்கும்,இந்த ரயில் நிலையத்துக்கும் பிணைப்பு அபரிதமானது. பல சமயங்களில் வாத்தியார்கள் முன்னிலையில் வகுப்பறையாக உருவெடுத்த பெருமை இந்த ரயில் நிலையத்தையேச் சாரும். வயதான முதியோர்களும்,இளைஞர்களும் வயது வித்தியாசமின்றி வந்து போகும் இடமாக இருந்தது எனக்கு தெரிந்தவரையில் ரயில்நிலையம்தான். வருடா வருடம் மே அல்லது ஜீன் மாதங்களில் ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட,மாநில அளவிளான கால்பந்து போட்டி நடக்கும்.அந்த ஒரு மாதம் முழுவதும் மாலை நேரங்களில் எங்களின் ஊரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம்.நினைத்தாலே இனிக்கும் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இந்த கால்பந்து தொடர் போட்டியை குறிப்பிடலாம்.அந்த தொடர் போட்டி ஆரம்பமாகும் நாளில் இருக்கும் சந்தோஷம்,அதன் நிறைவு நாளிலிருக்கும் கவலை கல்யாணம் முடிஞ்சு பத்தே நாள்'ல வெளிநாட்டுக்குப் போகிற மணமகனின் கவலைக்கு ஈடானுது.அவ்வளவு தூரம் எங்கள் மக்களோடு ஒன்றிப் போன விளையாட்டு கால்பந்து. அவிச்ச  அல்லது அவிக்காத கடலையை சாப்பிட்டுக்கிட்டு இந்த டீம் கோல் போடுமா,அந்த டீம் ஜெயிக்குமா பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டு ஆர்வத்துள்ளலில் எவ்வித கவலையும் இன்றி இருக்கும் அந்த நிமிடம் வாழ்நாள் முழுதும் வராதா(வராது!)என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு. 


                                                                                                             

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates