ஷார்ட் ஸ்டோரி

தேர்வு


தென்றல் அட்வர்டைசிங் கம்பெனி.
சுந்தரம் எத்தனை பேர் இன்டர்வியூக்கு வந்திருக்காங்க"
பதினாலு பேர் சார்"
ஒகே ஒவ்வொரு ஆளா வரச்சொல்லு
இன்டர்வியூ முடிந்து அதில் கணேஷ் மட்டும் தேர்வு பெற்றதாக அறிவித்து அவனுக்கு அப்பாயின்மென்ட் லெட்டரை கொடுத்தார் எம்.டி. ராஜன்.
சுந்தரம் கேட்டார்.
"வந்திருந்த எல்லோரையும்விட எக்ஸ்ப்ரீயன்ஸ்" குறைவான கணேஷை மட்டும் ஏன் தேர்தெடுத்திங்க சார்?"
சுந்தரம் நாம நடத்துறது அட்வர்டைசிங் கம்பெனி, வந்திருந்த எல்லோரும் மவுன்ட் ரோட்ல வச்சா நல்லாருக்கும்,பீச்சுல வச்சா நல்லாயிருக்கும்னு அரைச்ச மாவையே திரும்ப அரைச்சாங்க,ஆனா கணேஷ் மட்டும்" இப்ப இருக்கிற பரபரப்பான வாழ்க்கையில பெத்த புள்ளகிட்டகூட பேச நேரமில்லாம போய்டுது,ஆனா ஒரு மனிதன் நிம்மதியா,அவசரமில்லாம போற ஒரே இடம் கழிப்பறைதான்,எந்த ஒரு டென்ஷன் இல்லாம இருக்கிற இடத்தில் நம் விளம்பரத்தை வைத்தால் நன்றாக மனதில் பதியும் சார் என்றான். இப்ப உள்ள சூழ்நிலையில அனுபவத்தைவிட புதுமைதான் நமக்கு முக்கியம், அதனால்தான் அவனை தேர்தெடுத்தேன்.
குறிப்பு:(கதை எழுத ஆசை,முயற்சித்து கிறுக்கியது)

Post Comment

7 வம்புகள்:

Deepa said...

Arumai
Applause to your attempt
Dont (you dare) stop attempting a hand at short stories. You have the flair, just need to fan it a bit

Ahamed irshad said...

Thank you Deepa.

வினையூக்கி said...

அட சூப்பரு !!! எனது அலுவலகத்தில் (சுவீடனில்) அலுவலகம் சம்பந்தபட்ட புதிய அறிவிப்புகளை கழிப்பறைக்கு நேர் எதிராக கதவில் வைத்திருப்பார்கள்.

Ahamed irshad said...

அப்படியா.வருகைக்கு நன்றி வினையூக்கி...

இமா க்றிஸ் said...

கிறுக்கலாகத் தெரியவில்லை. ;) நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் அஹமது இர்ஷாத்.

Ahamed irshad said...

உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி இமா.

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்

நல்ல சிந்தனை - குறுங்கதை நன்று - சிந்தித்தால் ஏன் இக்கதையின் கருத்து உண்மையாக இருக்காதெனத் தோன்றுகிறது

நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates