Photo License: Sinkdd
--
அப்போதெல்லாம் பெருநாள் சமயத்தில் கலர் கலரான கைலியை உடுத்திக்கொண்டு சொந்த பந்தங்கள் வீட்டிற்க்கு படையெடுத்தால் கை நிறைய காசுகள் மனசு நிரம்ப கிடைக்கும் எல்லோரும் முகத்தில் மகிழ்ச்சி அன்றைக்கு பிச்சை கேட்பவர்கள்கூட மகிழ்ச்சியாக இருப்பர் இடியாப்பம்,கோழி,இறைச்சி,வட்லாப்பம்,கடற்பாசி(இனிப்புவகை)இவைகளை அன்றைக்கு சாப்பிட இயலாத அளவுக்கு இருக்கும்..காலையில் தொழுகையை முடித்துவிட்டு நண்பர்களின் சட்டை கைக்குட்டை முதற்கொண்டு பார்த்து கமெண்ட் அடித்து பரஸ்பரம் ஆரத்தழுவி அன்று கொண்டாடும் பெருநாளின் மகிழ்ச்சி வராது ஒருநாளும் வாழ்நாளில் அப்பேர்ப்பட்ட இன்பமான பொழுதுகள் அன்று.. பலூன் வியாபாரியிடம் ஒரு குறிப்பிட்ட பலூனை கேட்கும் சிறுமி அந்த வியாபாரியிடம் பேரம் பேசும் தாய்மார்கள்,கோன் ஐஸை வாய்,சட்டைக் காலர் வழி சாப்பிட்டு வரும் பொடுசுகள்,சாமீயோவ்வ்வ்வ்வ் என்று அலட்டல் தொண்டையில் வெற்றிலையை மென்றுகொண்டே காசு கேட்கும் நரிக்குறவர்கள்,நீளமான குடையை மடக்கியபடி வரும் போஸ்ட்மேன் என்று சகல காட்சிகளும் அன்று அரங்கேறும் எங்கள் ஊரில். இசைமுரசு நாகூர் ஹனிபா பாட்டைக்கேட்டுக் கொண்டே கொண்டாடும் பெருநாள் அது..பெரும்பாலும் இதுவரை அனைத்து பெருநாளுக்கும் ஊரில் இருந்திருக்கிறேன் இந்த முறை அப்படி வாய்க்குமா என்றால் அது படைத்த இறைவனுக்கே வெளிச்சம்..சொந்தபந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடும்,நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாடும்,தோழிகள் ஒன்றுகூடி கொண்டாடும் இப்படி பலதரப்பட்ட தரப்பினர் அளவுக்கதிகமான சந்தோஷத்தில் தங்களை பொலிவுப்படுத்திக் கொள்வர்..
இதைப் பற்றி நிறைய எழுத மனசு துடித்தாலும்,அப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியான தினத்தில் சொந்தபந்தங்கள்,நண்பர்களை விட்டுவிட்டு,இப்படி இங்கே நாலு சுவற்றுக்கு மத்தியில் இருப்பது போன்றதை நினைத்தாலும் எழுத வரவே மாட்டேங்குறது..வெளிநாட்டில் இருப்பவர்கள் ரொம்ப காலம் வெளிநாட்டில் இருக்காதீர்கள் என்பது இந்த சின்னவனின் வேண்டுகோள்..முப்பது வருஷம் வளைகுடா வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒருவரை சந்தித்தால் அவர் நாற்பது வருஷமா இங்கே இருப்பவரை கைக்காட்டுகிறார்..அடபாவமே என்று உச் கொட்டவே முடியாது நாமும் அதே தொடக்க நிலையில் இருப்பதால்.. அந்த நாற்பது வருஷ பாவப்பட்டவரை எப்படியாவது பார்க்கனும் என்ற நிலையில் ஒருநாள் சந்தித்தே விட்டேன்..
'எப்படி இருக்கீங்க?'
'ம் நல்லா இருக்கிறேன் தம்பீஈஈஈ'
'எப்படி இத்தனை வருஷமாக இருக்கீங்க?'
நேரடியாக கேட்டே விட்டேன்..
'சூழ்நிலைதான் தம்பீஈஈ' குரலில் சற்று இடரல்,
அவரின் சூழ்நிலையை அவரின் நிலையிலேயே நின்று யோசித்தேன்..கண்ணைக் கட்டியது..
இவ்வளவு வருஷம் இங்க இருந்தீங்க சரி, இப்ப திரும்பி பார்த்தால் வாலிபம்,சொந்த ஊர்,குடும்பம் இன்னபிற சந்தோஷமான விஷயங்களை யெல்லாம் தவற விட்டுட்டோமே என்று என்னைக்காவது நினைத்துப் பார்த்ததுண்டா' என் குரலில் சற்று காட்டம்,
'அதென்ன தம்பீ அப்படிச் சொல்லிப்புட்டிங்க அதெல்லாம் இல்லாமல் இருக்குமா,எல்லாத்தையும் மனசில் வைத்திருக்கிறேன் மனசிலேயே எல்லாத்தையும் அதாவது இன்பம்,துன்பம் எல்லாத்தையும் மாறி மாறிப் போட்டு பார்த்துக்குவேன்..
'அதுசரி மனசிலேயே வாழ்ந்துப் பார்த்து இருக்கீங்க?'
'ஹீம்ம்' அவரின் பெருமூச்சு எல்லாத்தையும் சொல்லியது..
'நீங்க எத்தனை வருஷம் தம்பீ?' கொஸ்டீன் ரவுண்டடித்து என்கிட்டயே வந்தது..
'இப்பதாங்க ரெண்டு வருஷமாத்தான்,ஆனா உங்களைப் போல நெடுங்காலமெல்லாம் வெளிநாட்டில் இருக்கவும் மாட்டேன் இருக்கவும் கூடாது என்ற முடிவோடு இருக்கிறேங்க' என்றதும்,
'இதையேத்தான் நாங்களும் சொன்னோம் ஆரம்பத்திலே' தரையைப் பார்த்தபடி சொன்ன அவரின் குரலில் ஏகத்துக்கும் அலட்சியம்,
அவரின் தோளில் கைவைத்து,
'இங்க பாருங்க குறைந்தது அஞ்சு வருஷம் அல்லது ஒருவருஷம் முன்ன பின்னதான் அதாவது ஆறு வருஷம்தான் வெளிநாட்டு ஜாகை அதற்க்கப்புறம் சொந்த ஊரைப் பார்த்துப் போய்க்கிட்டே இருப்பேன்' என்றேன் ஆக்ரோஷத்துடன்,
'அதற்கு உங்கள் தேவைகள் உங்களைப் போகவிடாது தம்பீஈஈ, என் அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது இதுதான்' என்றவரை ஏறிட்டு,
'தேவைகளை குறைத்து வாழ கத்துகிடுவேங்க' என்று பேச்சு வாக்கில் சொல்லி விட்டேன்..சத்தம் போட்டு சிரித்துவிட்டார் மனுஷன்..
'இந்தக் காலத்துல தேவைகளை குறைக்கதுன்றது நடக்கிற விஷயமா,இதோ உங்க கையில இருக்கிற போனே நீங்க சொல்றது இல்லைங்குது'
'சரி எப்ப நீங்க கெளம்புறீங்க வெளிநாட்டு வாழ்க்கையைவிட்டு' பேச்சை டைவர்ட் செஞ்சேன்.
'இன்னும் ஒருவருஷத்துல பையன் படிப்பை முடிச்சிடுவான் அவன இங்க கொண்டு வந்து நல்ல இடத்தில் செட்டிலாக்கிட்டு நான் கிளம்பிடுவேன்' என்றதும்
'மகனுக்கு என்ன ஐடியா நாற்பது வருஷமா இல்ல அதுக்க்க்கும்ம்ம்ம்ம்ம் மேலேயா' என்றேன் நக்கலுடன்,
'அதுபோக நீங்கதான் இவ்வளவு வருஷம் இங்க இருந்தீட்டீங்க,உங்க மகனையாவது வெளிநாட்டு வாழ்க்கையை அண்ட விடாமல் பார்த்துக்கொள்ளலாமே,
'அவந்தான் விருப்பப்படுறான் தம்பீஈஈ'
அது விருப்பமில்லை கட்டாயமாக்கப்பட்டு விட்டது.. ஃபர்ஸ்ட் இயர்லேயே இந்த நாட்டுக்கு போகனும் என்று அவன்ற சர்டிபிக்கேட்லேயே முடிவு செஞ்சிடுறாங்க அதான் உண்மை..
--பேசுவோம்..

23 வம்புகள்:
தேவைகளைச் சுருக்கும் உங்கள் ஆசையும், சீக்கிரமே தாய்நாடு திரும்பி விடவேண்டும் என்ற உங்கள் ஆவலும், பெருநாளுக்கு சொந்த நாட்டில் சொந்தபந்தங்களோடு இருக்க வேண்டும் என்ற ஆர்வமும் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ். திருமணம் எப்போது இர்ஷாத்?
//வெளிநாட்டில் இருப்பவர்கள் ரொம்ப காலம் வெளிநாட்டில் இருக்காதீர்கள் என்பது இந்த சின்னவனின் வேண்டுகோள்//
அந்தப் பெரியவர் சொன்னதுபோல, இங்கு வருபவர்கள் எல்லாருமே ஒன்றிரண்டு வருடங்கள், மிஞ்சிப்போனால் ஐந்தாறு வருடங்கள் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களே (நாங்கள் உட்பட). வெற்றிகரமாகத் திரும்பியவர்கள் விரல்விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில். அதிலும், மீண்டு(ம்) வந்துவிடுபவர்களும் உண்டு.
தேவைகளைச் சுருக்குவதென்றால், முதலிலேயே - இங்கு வருவதற்கு முன்பே - செய்ய முடிந்திருக்கவேண்டும் (ஒருசில நியாயமான காரணங்கள் தவிர). ஆசைகள், அவசியங்கள், தேவைகள் - சுருங்குவதேயில்லை, மனம் என்ற குடை சுருங்கும்வரை.
பொதுவாகக் குடும்பத்தோடு இங்கு வாழும் வாய்ப்பு அமைந்துவிட்டவர்கள் அதிகம் இழப்பதில்லை. தனியாக இருப்பவர்கள்தான் நிறைய மிஸ் பண்ணுவது.
வெளிநாட்டு வாழ்க்கையிலும் பல நன்மைகள் உண்டு #பாஸிடிவ் திங்கிங்!! :-)))))
எனினும், இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான் எப்போதும்!!
//திருமணம் எப்போது இர்ஷாத்?//
ஸ்ரீராம் சார், திருமணமாகாதவர்கள் இவ்விதம் பதிவு எழுதுவதில்லை! ;-)))))))))
சில ஆச்சரியக்குறிகளுடனும், சில கேள்விக்குறிகளுடனும் உங்களது கருத்துக்களில் பெரும்பாலானவற்றையே பலர் பிரதிபலிப்பதை நினைவு கூர முடிகிறது.
//இங்கு வருபவர்கள் எல்லாருமே ஒன்றிரண்டு வருடங்கள், மிஞ்சிப்போனால் ஐந்தாறு வருடங்கள் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களே (நாங்கள் உட்பட). வெற்றிகரமாகத் திரும்பியவர்கள் விரல்விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில். அதிலும், மீண்டு(ம்) வந்துவிடுபவர்களும் உண்டு.//
ஆம் இர்ஷாத் ஹூஸைனம்மா சொல்வதே உண்மை.
இர்ஷாத்..அவசியமான டாபிக்.ஒன்றை பெற வேண்டும் என்\றால் இன்னொன்றை இழக்க வேண்டும் எனபதும் உண்மை.
இப்பதாங்க ரெண்டு வருஷமாத்தான்,ஆனா உங்களைப் போல நெடுங்காலமெல்லாம் வெளிநாட்டில் இருக்கவும் மாட்டேன் இருக்கவும் கூடாது என்ற முடிவோடு இருக்கிறேங்க' என்றதும்,//இதையே இன்னும் நாண்கு வருடங்கள் சென்று உங்களிடம்ம கேட்கவேண்டும்:)
அதற்கு உங்கள் தேவைகள் உங்களைப் போகவிடாது தம்பீஈஈ, என் அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது இதுதான்'//இதுதான் உண்மை.
தேவைகளை குறைத்து வாழ கத்துகிடுவேங்க' என்று பேச்சு வாக்கில் சொல்லி விட்டேன்..சத்தம் போட்டு சிரித்துவிட்டார் மனுஷன்..///
ஹி..ஹி..அவர் மட்டுமில்லை .நானும்தான் சிரித்தேன்.
//இந்தக் காலத்துல தேவைகளை குறைக்கதுன்றது நடக்கிற விஷயமா,இதோ உங்க கையில இருக்கிற போனே நீங்க சொல்றது இல்லைங்குது'//
பார்த்தீங்களா?
ஒகே..ஒகே..க்கூல்கூல்.......
அன்பின் இர்ஷாத் - என்ன செய்வது - அயலகம் செல்லும் சகோதரர்கள் அவ்வளவு எளிதில் தாயகம் திரும்ப இயலாது. தாயகத்தில் உள்ள பிரச்னைகள் - சகோதர சகோதரிகள் படிப்பு - திருமணம் - தாய் தந்தையர் - என அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமே ......
இன்ஷா அல்லாஹ் - அனைத்து விருப்பங்களும் விரைவினில் நலமே நிறவேற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
திருமணம் எப்போது இர்ஷாத்?
---
மாப்பி எத்தன பேர் கிட்ட நீர் இன்னும் பேச்சிலர்னு சொல்லி வச்சிருக்கீரு... எல்லாம் நல்லபடியாய் நடக்க அல்லாஹ் உங்கள ஆசிர்வதிப்பார் மாப்பி.. ஜாலியா இரும்...
நல்ல அலசல் அண்ணே.
விரைவில் சொந்தங்களுடன் இந்தியாவில் பெருநாள் கொண்டாட ஆண்டவன் அருளுவாராக.
பேசுவோம், வெளிநாட்டில் சம்பாதித்து ஊருக்கும் தாரளமாக அனுப்பி கொடுத்து அவர்களும் நல்லா செலவழிச்சு பழகிய பின் ஊர் போய் சம்பாதித்து கையைச் சுருக்கும்பொழுது அவர்களால் முடியாது தம்பி,அதற்காகவே ,தம் குடும்பம் வச்தியாக வாழ்வே இங்கே நிறைய பேர் கஷடப்படுறாங்க, எத்தனை பேருக்கு கஞ்சியோ கூழோ ஒன்றாக சேர்ந்து குடிப்போம்னு எளிமையாக வாழ் விருப்பம் சொல்லுங்க தம்பி..
நானும் எத்தனையோ பேர் வெளிநாடே வேண்டாம்னு சொல்லி முடித்து விட்டு ஊர் வரக்கண்டிருக்கிறேன்,ஆனால் 90 சத்விகிதம் பேர் திரும்பி போய் வெளிநாட்டில் தான் சம்பாதிக்க விரும்புகிறார்கள்.சம்பாதிக்கிறார்கள்.அவர்களுக்கு பழகிப்போய் விட்டது.எனக்கு தெரிந்தவர் 16 வருடம் ஒரே கம்பெனி ஒரே ரூம்னு இருந்து வெறுத்து ஊர் வந்து செட்டிலாகபோறேன் என்று ஊர் வந்து நாட்களும் ஓடிக்கொண்டிருக்கிறது,ஆனால் அவர் எதையோ இழந்தவர் போலத்தான் இருக்கிறார்.அவருக்கு ஊரில் மனைவி மக்களோடு இருக்க ஆசை,ஆனால் சம்பாத்தியமும் பத்தலை..இனி திரும்பி போகவும் முடியாது வயசாகிடுச்சு,பல்லைக் கடித்து கொண்டு கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்னு புலம்புகிறார்.ஊரில் ஒரளவு நியாயமாக சம்பாதிப்பவர்கள் வேலையை விட்டு விட்டு இங்கே வருவது பெரிய தப்பு. குடும்பமாக இருக்க வசதியிருந்தால் மட்டும் இங்கு வருவது ஒரளவிற்கு சாத்தியப்படும்.சேர்ந்து இருக்கிறோம்னு என்ற திருப்தியாவது மிஞ்சும்.
தொடர்ந்து பேசுவோம். பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்று..
குடும்பத்தை அழைத்துச் செல்ல ட்ரை செய்யுங்கள் இர்ஷாத்.
நாம் எதிர் கொள்ளத்தெரியாத அவலம் இது,
இன்னும் பேசுவோம்...
ஒவ்வொரு முறை 'முடித்து'ச்செல்லும் போதும் திரும்ப வரக்கூடாது என்று நினைத்தே செல்கிறேன். ஆனாலும் திருப்பிவிட பலகாரணங்கள் நமக்கு முன்னே காத்திருக்கிறது.
இன்னும் ஆறு மாதத்தில் திரும்பிவிட வேண்டும். இம்முறை திரும்ப வரக்கூடாது. ஆனாலும்...
குறைந்தது 5 வருஷம் என்றுதான் இங்கே வருகிறோம்..>
தாங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்..
யதார்த்தத்தை பிரதிபலிக்கும் பதிவு. வளைகுடாவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தங்கள் சிரமங்கள், கஷ்டங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதனாலேயே அடுத்தடுத்த தலைமுறைகளும் அவ்வாறு முடிவெடுக்க நேரிடுகிறது போலும்...!
உங்கள் எண்ணங்கள் சீக்கிரமே நிறைவேற வாழ்த்துக்கள்!
ஆறு வருஷம்தான் வெளிநாட்டு ஜாகை அதற்க்கப்புறம் சொந்த ஊரைப் பார்த்துப் போய்க்கிட்டே இருப்பேன்' என்றேன் ஆக்ரோஷத்துடன்,
தாங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள் இர்ஷாத்
என்ன சொல்றதுன்னு தெரியலை, நாங்களும் சென்னையை விட்டு ஊருக்கு போகணும்னு சொல்லிட்டேதான் இருக்கோம். அப்பிடியெல்லாம் திடும்னு கிளம்பினாத்தான் உண்டு.
அப்புறம், வந்தப்புறம் ஏற்படும் சின்னச் சின்ன அசௌகரியங்களுக்கும் மனசை தயார் பண்ணிக்கணும்.
பின்னாடி, அங்கேயே இருந்திருந்தா "அவனை"மாதிரி சம்பாதிச்சிருக்கலாமேன்னு materialistic ஆக compare பண்ணிக்கக் கூடாது..
மத்தபடி, கடவுள், உண்மையாத் தேடி உழைக்கும் எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்து விடுகிறார்..
குட் ஒன் இர்ஷாத்...ஆனால் அந்த அனுபவசாலி சொல்றதுதான் நடக்கும்...
என்ன சொல்வதென்று தெரியவில்லை நண்பரே..
படித்துமுடித்த அடுத்த வருடத்தில் கடல் தாண்டி வந்த நானும் ரெண்டு வருஷம் தாண்டி ரெண்டு நாள் கூட இருக்க மாட்டேன் நீங்கள் கூறியதையே எனக்கு தெரிந்திருக்கவில்லை வாழ்க்கையின் போக்கும், வாழ்க்கையின் தேவைகளையும் பற்றி, ரெண்டாவது வருடம் முடியும் தருவாயில் தான் வந்து ஒட்டிக்கொண்டது வாழ்க்கை பற்றிய ஒரு பயமும், தேவைகளும்... இப்படி ஆரம்பித்தது தான் இப்போது ஐந்து வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது..
ஊரில் என்ன வேலை இல்லை என்று நிமிர்ந்து சொல்லும் மனம் .. ஊரில் வந்து என்ன வேலை செய்யப்போகிறோம் என்று யோசித்தால் பயத்தில் ஓடி ஒழிகிறது..
அடுத்த வருடம் இந்நேரம் ஊரில் தான் இருப்பேன் என்று வைராக்கியமாக இருக்கிறேன்.. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்..
குடும்பத்தோடு சம்பாதிக்கிறேன், அதிகமாக செலவு செய்கிறேன், தமிழகம் திரும்பினாலும் வேலை கிடைக்கும்,மேலும் சில வருமான வழிகளும் உண்டு, விவசாயமும் செய்யமுடியும், ஆனால் அடுத்த வருடம் பாக்கலாம்னு ஓடிட்டி இருக்கு பதினொரு ஆண்டுகள் ஆயாச்சு.
எண்ணமே வாழ்வு!
எண்ணியதை ஒரு நாளுக்கு ஒரு முறையாவது உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உறுதிப்படுத்தியதையே இறுதி முடிவென எல்லோரிடமும் சொல்லுங்கள். சொல்லிக்கொண்டே இருங்கள்!
எண்ணம் ஈடேரும்!
இர்ஷாத், பெருநாள் புலம்பல்களில் ஹோம்சிக் தொற்றிக்கொண்டது.
Sabeer abuShahruk
நல்ல அலசல்.....ஆனா தீர்வு கிடையாது...புலம்பிகிட்டே இருக்க வேண்டியதுதான்
எல்லாருடைய பதில்களுக்கு என்னுடைய பதில் விரைவில் தனிப்பதிவாக.. இது பின்னூட்டத்தில் பத்தோடு பத்தாக விவாதிக்கற விஷயமில்லை என்பதால் தனிபதிவு... நன்றி பின்னூட்டமிட்ட அனைவருக்கும்..
Post a Comment