Thanks For Photo : Vivek
"என்னா சாலாட்சி நாலஞ்சி நாளா எங்கே போனே?"
"இல்லம்மா வுட்டுக்காரருக்கு உடம்பு சரியில்ல அதான் வரமுடியல"
"என்னா பண்ணுது?"
"காய்ச்சதான் எப்பவும் ஒன்னு ரெண்டு நாள்'ல எந்திருச்சி ஆட்டோவ எடுத்துட்டு வேலக்கி போவாரு' இந்த வாட்டி நாலு நாளா எந்திரிக்கக்கூட முடியல"
"டாக்ட்ரு என்னா சொன்னாரு"?
"காய்ச்சதான், மாத்தர,சிவப்பு டப்பி எல்லாம் எலுதி தந்தாரு முன்னூறு ரூவா செலவாச்சி"
"சரிம்மா உன் வுட்டுக்காரரு போனு கீனு பன்னாரா?"
"நேத்துதான் பண்ணாங்க,வெளிநாடு முன்னமாதிரி இல்லயாம் சம்பளம் கொறவு வேல அதிகமுன்னு சொன்னாரு"
"ஆமா சில்லுதெரு பாய்வீட்டம்மாக்கூட அப்படித்தான் சொன்னிச்சு"
"பொண்டாட்டி புள்ள எல்லாத்தயும் விட்டுபுட்டு எப்பிடிமா உன்ற வுட்டுக்காரரெல்லாம் இருக்காங்க?"
"என்னா செய்றது வாழனுமே அதுக்கு வழி வெளிநாடுதானே,அவரு இங்க இருந்து நாலு காசு சம்பாரிச்சாலும் மிஞ்சுமா?"
"இல்லம்மா என்னதான் புள்ள கான்வன்டு'ல படிக்க வச்சாலும் புருசன் பொண்டாட்டி புள்ள எல்லாரும் ஒன்னா இருந்தா அதுல கெடக்கிற சந்தோசம் என்ன வெல கொடுத்தாலும் வருமா"
"வராதுதான் என்னா பன்றது?"
"இல்லமா கூலோ கஞ்சியோ குடிச்சாலும் புள்ள புருசனோட சந்தோசமாத்தான் இருக்கிறேன்.ஆனா சமூவம் எங்கல அன்டாடங்காச்சியாத்தான் பார்க்குது"
"ஆமா அதானே உண்மை"
இரும்மா,ஆனா உன்னய உயர்வாத்தான் பார்க்குது ஏன்னா உன் வுட்டுக்காரரு வெளிநாட்'ல இருக்கிறது நால"
"இப்ப நீ என்ன சொல்ல வர்றே?"
"ஏம்மா ஆத்திரப்படுறே,நாம வசதியாயிருந்த மதிக்கிற சமூவம் சூல்நில மாறினாலோ,இல்ல நம்ம வசதிப்படி வால நெனச்சாலோ மிதிக்குது. அதத்தான் சொன்னேன். அழுவையோ,சிரிப்போ எல்லாத்தையும் அவர்ட்டதான் சொல்வேன்,ஆனா உனக்கு போனுதான் எல்லாமே. சமூவத்துக்காக சந்தோசத்த வித்துட்டு நிக்கிறம்மா நீ..'
'நான் வரேன்மா...'
5 வம்புகள்:
ம்.. அசத்தல்..
யதார்த்த நடை இர்ஷாத்
உண்மையை உரக்க உரைக்க சொல்லியிருக்கீங்க
"நச்"
இர்ஷாத்..கதை நடை அருமையாக இருந்தாலும் //
"ஏம்மா ஆத்திரப்படுறே,நாம வசதியாயிருந்த மதிக்கிற சமூவம் சூல்நில மாறினாலோ,இல்ல நம்ம வசதிப்படி வால நெனச்சாலோ மிதிக்குது. அதத்தான் சொன்னேன். அழுவையோ,சிரிப்போ எல்லாத்தையும் அவர்ட்டதான் சொல்வேன்,ஆனா உனக்கு போனுதான் எல்லாமே. சமூவத்துக்காக சந்தோசத்த வித்துட்டு நிக்கிறம்மா நீ..'
// இதில் உடன் பாடில்லை.
உணமையில அவங்க சந்தோஷத்தை விக்கத்தன் செய்யறாங்க.கதை நல்லா இருக்கு.வட்டாரப் பேச்சுல எழுதி இருக்கீங்க.
Post a Comment