ம‌சாக்க‌ளியும் ப‌லூனும்..

நான் வ‌ழ‌க்க‌மா போகும் ச‌லூன் பூட்டியிருந்த‌து என்ன‌ பூட்டிட்டாய்ங்க‌ன்னு விசாரிச்சேன் அதிலிருந்த‌ ரெண்டு பேரும் வெகேஷ‌னில் போயிருப்ப‌தாக‌ சொன்னார் ப‌க்க‌த்து குரோஸ‌ரிக்கார‌ர் அதெப்ப‌டி ஒரே நேர‌த்தில் ரெண்டு பேரும் போவாங்க‌..! அங்கேயிருந்த‌ த‌மிழ்நாட்டுக்கார‌ரிட‌ம் முடிவெட்டினால்தான் என‌க்கு திருப்தி அதாவ‌து நான் சொல்ற‌மாதிரி என‌க்கேத்த‌ மாதிரி முடிவெட்டிவிடுற‌ அபூர்வ‌' முடிவெட்டி அவ‌ர்.இப்ப‌ என்ன‌டா ப‌ண்ற‌துன்னு யோசிக்கையில் ப‌த்து நிமிஷ‌ நடையில் ஒரு ச‌லூன் இருந்த‌து உள்ளே போய் முடிவெட்ட‌னும்னு சொன்னேன்..அநியாய‌த்திற்க்கு உய‌ர‌மா இருந்த‌வ‌ர் சால்வையை போர்த்தி த‌லைக்கு த‌ண்ணிதெளித்துவிட்டு க‌த்திரியை எடுக்க‌வும் நான் அவ‌ரை ஏறிட்டு,

'மீடிய‌மா வெட்டினா ம‌தி' (ம‌தி என்றால் அந்தாளு பேரு இல்லை ம‌லையாள‌த்தில் போதும்'ன்னு அர்த்த‌ம்..)

'ச‌ரின்னு சொல்லிட்டு அவ‌ர் முடிவெட்ட‌ தொட‌ங்கிய‌ ஒவ்வொரு மூணு நிமிட‌ங்க‌ளுக்கு பிற‌கும் இப்ப‌டி வெட்டினா ஓகேவா,அப்ப‌டி வெட்டினா ஓகேவா,கிருதாவை நீள‌மா வெக்க‌னுமா'ன்னு தொட‌ர்ந்து கேட்க‌வும் என‌க்கு பூரிப்பு தாங்க‌ல‌ எது செய்துற‌துன்னாலும் ந‌ம்ம‌கிட்ட‌ கேட்கிறாரேன்னு..ஒரு வ‌ழியா முடிவெட்டி முடிச்சாச்சு. ப‌ண‌ம் கொடுக்கையில்,

'நீங்க‌ எவிட‌?'

'ஞான் திருச்சுரான்னு'

'நீங்க‌ளு த‌மில்நாடா?'

ஆமாங்கிற‌ மாதிரி ம‌ண்டைய‌ ஆட்டினேன்.

'நீங்க‌ இவிட‌ வ‌ந்து எத்த‌ன‌ நாளாச்சு?'ன்னு நான் கேட்க‌வும்,

'ஒரு வார‌ம்தான்'

'அப்ப‌டின்னா நாட்'ல‌ எத்த‌ன‌ வ‌ருஷ‌ம் முடிவெட்டுறீங்க‌'ன்னு கேட்ட‌தும்,

'நாட்'ல‌ முடியெல்லாம் வெட்டின‌தில்ல‌ இந்த‌ தொழில் என‌க்கு புதுசு'ங்க‌வும்

என‌க்கு அடிச்ச‌ கிலி வில‌க‌வே இல்லை..அதான் அடிக்க‌டி இப்டி வெட்ட‌வா அப்டி வெட்ட‌வான்னு கேட்டானா அவ்வ்வ்வ்வ்வ்வ்...கிட்ட‌த்த‌ட்ட‌ த‌ப்பிச்சிட்டோம்டா.. ந‌ல்ல‌வேளை காதை வெட்டி கைல‌ த‌ந்து தெரியாம‌ வெட்டிட்டேன்னு சொல்லாம‌ இருந்தானே ச‌ண்டாள‌ன்..அடுத்த‌ சில‌ நாட்க‌ளில் அந்த‌ ச‌லூனிலிருந்து அல‌றிய‌டித்துக் கொண்டு யாரும் வ‌ர‌ வாய்ப்பு இருப்ப‌தால் நான் அந்த‌ப் ப‌க்க‌மே போவ‌தில்லை..

*******************************

நான் ஊரிலிருந்த‌ போது 150 ரூபாய்க்கு ரீசார்ஜ் ப‌ண்ணேன் கார்டு சிஸ்டமெல்லாம் போயி ஈஸி ரீசார்ஜ் முறையில்தான் ரீசார்ஜ் செய்கிறார்க‌ள்.ந‌ம்ப‌ரை எழுதி வாங்கிக்கொண்டு நீங்க‌ போங்க‌ பின்னாடியே மெஸேஜ் வ‌ரும் என்றார் அந்த‌க் க‌டையிலிருந்த‌வ‌ர், சொன்ன‌ மாதிரியே வ‌ந்த‌து கூட‌வே ஆப்பும். 150 ரூபாய்க்கு ஃபுல் டாக்வேல்யூ ஆகி ரெண்டு மூணு நிமிட‌ங்க‌ளில் ப‌ட‌க்கென்று 30 ரூபாய் காணாம‌ல் போயிருந்த‌து இது என்ன‌டா இது அப்ப‌டின்னு க‌ஸ்ட‌ம‌ர் கேருக்கு போன் போட்டு கேட்ட‌த‌ற்க்கு 'நீங்க‌ கேம்ஸ் ச‌ப்ஸ்கிரிப்ஷ‌ன் செஞ்சிருக்கீங்க‌ அத‌னால் முப்ப‌து ரூபாய் எடுத்தோம்'ன்னாரு க‌.கேர் பார்ட்டி.. நான் வீட்'ல‌ விசாரிச்ச‌தில் ஆம் என்று ப‌தில் வ‌ர‌வும் 'அந்த‌ கேம்ஸ் ச‌ப்ஸ்க்ரிப்ஷ‌னை ஸ்டாப் ப‌ன்னிடுங்க‌'ன்னு சொன்ன‌தும் 'ச‌ரிங்க‌ சார்'ன்னு சொல்லி அந்த‌ இணைப்பு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌து.ம‌றுப‌டியும் மெஸேஜ் என்னாடான்னு பார்த்தா க‌ஸ்ட‌ம‌ர் கேருக்கு பேசின‌துக்கு நிமிட‌த்துக்கு ஐம்ப‌து பைசாவாம்,, வெள‌ங்கீரும்..ரைட்டு விட்ருவோம்.அடுத்த‌ நாலாவ‌து நாள் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் ப‌ண்ணேன் ரீசார்ஜ் ஆன‌ சில‌ நொடிக‌ளிலேயே ம‌றுப‌டியும் 30 ரூபாய் ச‌ர்ரென்று ப‌ற‌ந்திருந்த‌ மெஸேஜை பார்த்த‌தும் என‌க்கு காண்டாகி திரும்ப‌ 'க‌ட்ட‌ண‌ க‌ஸ்ட‌ம‌ர் கேருக்கு போன் போட‌வும் 'நீங்க‌ கேம்ஸ் ச‌ப்ஸ்க்ரிப்ஷ‌ன் செஞ்சிருக்கீங்க‌ன்னு' அதே ப‌ல்ல‌வியை பாட‌வும் 'யோவ் இத‌ சொல்லித்தான் மூணு நாளைக்கு முன்னாடி 30 ரூபாய் எடுத்தீங்க‌ அப்ப‌வே நான் அந்த‌ கேம்ஸ் ச‌ப்ஸ்க்ரிப்ஷ‌னை கேன்ச‌ல் செய்ய‌ சொல்லிட்டேனே 'என்று எகிற‌வும் ம‌றுமுனை பார்ட்டி 'சார் நான் செக் ப‌ண்ணிட்டு சொல்றேன் லைனில் இருங்க‌ள்' என்ற‌தும்'ச‌ரி'ன்னு வெயிட் ப‌ன்ன‌தில்'சாரி சார் உங்க‌ அம‌வுண்ட் திரும்ப‌ வ‌ந்துரும்'ன்னு சொல்ல‌வும் நான் ஓக்கே'ன்னு வெச்சுட்டேன்.ஒரு ம‌ணி நேர‌த்தில் 30 ரூபாய் திரும்ப‌ வ‌ந்து ஒட்டிக்கொண்ட‌து..அதுக்க‌ப்புற‌மும் நான் ரீசார்ஜ் ப‌ண்ணுவேன்..அவிங்க‌ ரொம்ப‌வும் ஆணி புடுங்குவ‌தால் ரீசார்ஜ் என்ற‌ வார்த்தையே ம‌றந்திட்டேன்..

******************************

ந‌ண்ப‌னோடு பேசிக்கொண்டிருக்கையில் என் காலில் ஒரு முனையை குத்த‌கைக்கு எடுத்து க‌டித்துக்கொண்டிருந்த‌து கொசு..எவ்ளோ பெருசு!!! இதே அள‌வுள்ள‌ கொசுக்க‌ள் ஒரு நாலு பேர் கூட்ட‌ணி அமைச்சா ந‌ம்மையும் தூக்கிவிடும் அள‌வுக்கு ட‌புள்சைஸ் கொசுக்க‌ள்.இந்த‌ கொசுக்க‌ள் ப‌ற்றி ஜீவால‌ஜி தேர்டு இய‌ர் மாண‌வ‌ன் ஒருவ‌ர் சொன்ன‌து ஞாப‌க‌த்துக்கு வ‌ருது அது என்னான்னா, சில‌ கொசுக்க‌ள் நாம் கொசுவ‌ர்த்தி வெச்சாலும் அதை ச‌ட்டை செய்யாம‌ல் ந‌ம்மை வ‌ந்து க‌டிக்கும் இது எத‌னால் என்றால் அத‌ன் தாய் கொசுக்க‌ள் அந்த‌ கொசுவ‌ர்த்தியிலிருந்து வெளியாகும் எதிர்ப்பு புகையை முடிந்த‌வ‌ரை?? சுவாசிக்க‌ க‌ற்றுக்கொள்கிற‌தாம் அந்த‌ தாய் கொசுவே அப்ப‌டியிருப்ப‌தனால் அத‌ன் வாரிசுக‌ள் கொசுவ‌ர்த்தி ஸ்டாண்டிலேயே எட‌ம் போட்டு உட்கார்ற‌ அள‌வுக்கு ப‌டுதைரிய‌சாலியா வ‌ந்துவிடுதுன்னு சொன்னாரு..ம் ம் 'ன்னு த‌லையாட்டிவிட்டு ப‌டுஸ்டாராங்கான‌ கொசுவ‌ர்த்தி வாங்கிட்டு வீட்டுக்கு போனேன்..

******************************
ஏ.ஆர்.ர‌ஹ்மானின் இசையில் வ‌ந்த‌து..டெல்லி 6.. ம‌சாக்க‌ளி ம‌சாக்க‌ளி. அந்த‌ புறாவை த‌லையில் வைத்தப்ப‌டி ஆடும் இட‌த்திலும்,ஆர‌ம்ப‌த்திலேயே சிரித்தும் ம‌ய‌க்குறா இந்த‌ ம‌சாக்க‌ளி..


இசை,ப‌ட‌மாக்கிய‌வித‌ம்,இது எல்லாத்தையும் விட‌ அந்த‌ச் சிறுவ‌னின் முக‌பாவ‌னையும் அந்த‌ ப‌லூனிற்க்கு ஏங்கும் ஒவ்வொரு இட‌த்திலும் சிக்ஸ‌ர் அடிக்கிறான் க‌டைசியில் அழுது உடையும் இட‌த்தில் அபார‌ம்..


Post Comment

14 வம்புகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செமை இன்ட்ரஸ்ட் அனைத்து மேட்டர்ஸும்.
இப்பவும் ஈஸி ரீசார்ஜ் பண்றீங்களா?

A.R.ராஜகோபாலன் said...

ஆனந்தமான அபூர்வ அற்புத அனுபவ பகிர்வு
நன்றி நல்ல நகைச்சுவை நடைக்கு .............

A.R.ராஜகோபாலன் said...
This comment has been removed by the author.
இளங்கோ said...

நல்ல பகிர்வுகள். நன்றி

Chitra said...

முதல் சம்பவம் குறித்து வாசித்த போது, குசேலன் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் ஞாபகம் வந்துச்சு. ஹா,ஹா,ஹா,ஹா...

வடகரை வேலன் said...

:-)))))))))))))

Jabar said...

ரசிக்க வைத்த பகிர்வுகள்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

nice post

ராம்ஜி_யாஹூ said...

இர்ஷாத்

நீங்கள் எழுதி உள்ள அலைபேசி முப்பது ரூபாய் குறித்த கட்டுரையை இன்று பிசினெஸ் ஸ்டேண்டர்ட் நாளிதழில் அமெரிக்க வாழ் இந்தியரும் எழுதி உள்ளார்.

முப்பது கோடி அலைபேசி சந்தாதாரர்களிடம் இருந்து இப்படி மாதம் தொண்ணூறு கோடி வசூல் ஆகிறதாம்.

http://economictimes.indiatimes.com/opinion/comments-analysis/consumer-needs-more-protection/articleshow/8033485.cms

ஹேமா said...

நல்ல வேளை தலை தப்பிச்சா இர்ஷாத் !

Yoga.s.FR said...

அதான் சொல்லிட்டாருல்ல,அந்த ரீ சார்ஜ் என்ற வார்த்தையயே மறந்துட்டேன்னு?அப்புறம் என்ன கிண்டல்???

Unknown said...

ரசிக்க வைத்த நல்ல பகிர்வுகள். நன்றி

ஹுஸைனம்மா said...

பலூன் கதை நல்லாருந்துச்சு.
சலூன் கதையும் நல்லாருந்துருக்கும், எதாச்சும் எக்குதப்பா நடந்திருந்தா!! ;-))))

r.v.saravanan said...

very nice irshaad

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates