திருச்சிக்கு போகவேண்டி இருந்தது ஒரு வேலை நிமித்தமாக.. நண்பனுடன் தஞ்சாவூரிலிருந்து பகல் சாப்பாட்டுக்குப்பின் பேருந்து ஏறினோம் ஓரளவு கூட்டம் ஜன்னலோர கம்பிகள் துருப்பிடித்து கையோடு வந்துவிடும் விபரீதம் இருப்பதால் நண்பனை அந்தப் பக்கம் உட்காரசொல்லிவிட்டு இருக்க ஆறேழு நிமிஷத்தில் லேசான உறுமலோடு வண்டி புறப்பட்டது.. தஞ்சாவூர் புதிய பேருந்துநிலையத்திலிருந்து வல்லம் வரை சுமாரான வேகத்தோடு போன பேருந்து அதற்க்கப்புறம் எடுத்த வேகம் குறுக்கே எது வந்தாலும் எலும்பு கூட மிஞ்சாத அளவுக்கு அளவுகடந்த வேகம் பளிச்சென்று சொன்னால் 'மரணவேகம்.. என்னாச்சு'ன்னு யோசிக்க கூட நேரமில்லாத அளவுக்கு எல்லோரும் டிரைவரைப் பார்த்து சத்தம் போட எதையுமே கண்டுகொள்ளாத மாதிரி அதே வேகத்தை மெயின்டெய்ன் பண்ணிக்கொண்டிருந்தார். டிக்கெட்டுக்கு மட்டும் திருவாய் மலர்ந்த கண்டக்டர் டோட்டலாக ஷட்டவுனில் இருக்க, ஒருவழியாய் துவாக்குடி வரவும் வண்டியின் வேகம் சற்று குறைந்தது. மத்திய பேருந்து நிலையம் வரவும்தான் விஷயமே தெரிந்தது..டிரைவர் சாப்பிடலையாம். அதுக்காக இப்படியா!! பசிவந்தால் பத்தும் பறக்கும்'னு கேள்விப்பட்டிருக்கிறேன் இப்படி ஒரு பஸ்ஸே பறக்கும்'னு தெரியாமப் போச்சே..
இதனால் அறியப்படும் நீதி : டிரைவர் சாப்பிட்டாரா என்று விசாரித்துவிட்டு ஏறுவது நலம்.. அதுலகூட அன்லிமிடெட் மீல்ஸ் அடிப்பவரென்றால் தூங்கிவிட்டு எல்லோரையும் மொத்தமாக 'வழியனுப்பிவிடும் 'அபாயமும் இருக்கிறது..
இதனால் அறியப்படும் நீதி : டிரைவர் சாப்பிட்டாரா என்று விசாரித்துவிட்டு ஏறுவது நலம்.. அதுலகூட அன்லிமிடெட் மீல்ஸ் அடிப்பவரென்றால் தூங்கிவிட்டு எல்லோரையும் மொத்தமாக 'வழியனுப்பிவிடும் 'அபாயமும் இருக்கிறது..
______________________________________
ரேஷன் கார்டு சம்பந்தமாக தாலுக்கா அலுவலகத்திற்கு போனபோது லேசான தூறல் போட்டது.பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன் 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற எழுத்தை விட போர்டு அநியாயத்திற்கு மங்கி போயிருந்தது எழுத்திலுள்ள வாசகத்தை மங்க விடாம பார்த்து கொண்டாலே போதும்.வெளியே தூறல் போட்ட விஷயம் உள்ளே போனதும்தான் தெரிந்தது பத்து மணிக்கெல்லாம் முடிந்தளவு எல்லா அலுவலர்களும் வந்திருந்தார்கள் வழக்கமான இழுத்தடிப்புகள் இல்லாமல் சீக்கிரமாகவே எனக்கு வேலை முடிந்தது..உஜாலாவுக்கு மாறின மாதிரி ஏன் இப்படி இங்கு திடீர் மாற்றம்'னு நான் சொல்லமாட்டேன்.. தேர்தல் வருதல் அதனால் வந்த மாறுதல்..
___________________________________
___________________________________
அரசுடையாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை காலை பத்தரை மணிக்கு போனேன் வாசலில் உள்ள செக்யூரிட்டி பேங்க் உள் கேட்டில் நின்றுகொண்டு எவரையும் உள்ளே விட மறுத்தார் ஏன்'னு கேட்டால் வங்கியில் ஒரே ஒரு அலுவலர் மட்டும் இருக்கிறார் மற்ற நாலு பேர் ஒரு கல்யாணத்திற்க்கு?? போயிருக்கிறார்கள் என்றார்..அப்படியே அசந்து போயிட்டேன் அதெப்படி வேலை நேரத்தில் அவர்கள் போவார்கள் என்று ஒருவர் ஏகத்துக்கும் கொந்தளித்துக் கொண்டிருக்க தேய்ந்த ரெக்கார்ட் போல் அதையே திரும்ப அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார் செக்யூரிட்டி. மணியும் 12 ஆக பேங்க் டைம் முடிந்துவிட்டு என்று கேட்டை இழுத்து மூடிவிட்டார்கள்..கொந்தளித்த மனிதர் பக்கத்தில் இருந்த சர்பத் கடையில் நன்னாரியை வாங்கி குடித்து தன்னைதானே சாந்தப்படத்தி கொண்டார்..கிழமை வேற சனி'யாகி இருந்தது எவ்ளோதான் திங் பண்ணாலும் திங்கள்கிழமைதான் வேலை முடிந்தது..
___________________________________
___________________________________
நான் எழுதிய 'ஒரிஜினல் ஒரிஜினல்தான்' என்ற கதை இந்த வார தினகரன் வசந்தம் இதழில் 17 ஆம் பக்கத்தில் 'ஓடிப்போனவர்கள்' என்ற பெயரில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சி..வெளியிட்ட தினகரன் நிர்வாகத்தாருக்கும்,ஊக்கம் கொடுக்கும் அனைத்து நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அதன் லிங்க்
தினகரன் வசந்தம்.
தினகரன் வசந்தம்.
14 வம்புகள்:
//பசிவந்தால் பத்தும் பறக்கும்'னு கேள்விப்பட்டிருக்கிறேன் இப்படி ஒரு பஸ்ஸே பறக்கும்'னு தெரியாமப் போச்சே.//அசத்தல் ஷாட்.
படத்தில் இருக்கும் கிராமத்தின் பெயர் என்ன. ரம்மியமா இருக்கு
good photo
vaalthukkal irshaad
நல்ல தொகுப்பு.
கதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
ஏங்க தேர்தல் வந்தா அரசு ஊழியர்களுக்கு என்ன லாபம்,எதனால அவங்க உங்க வேலைய சீக்கிரம் முடிக்கனும்... ஏன் நாளைக்கு அவங்க தான் தேர்தல்-ல நிற்க போறாங்களா? ஒரு இடத்தில் ஒழுங்கா வேலை நடந்தா முடிஞ்சா பாராட்டுங்க இல்ல சும்மா இருங்க..அதை விட்டு அதனால தான் ஒழுங்கா நடக்குதுனு நீங்களா கற்பனை பண்ணாதீங்க..தேர்தல் நேரத்தில் தேர்தல் பணியில் இந்த வருவாய் துறையினற் படும் பாடு வேற யாரும் பட மாட்டாங்க..
வங்கி-யில போய் உங்க பணத்தை போடவோ எடுக்கவோ போறீங்க அங்க போய் கால் கடுக்க நிக்கறீங்க அவனவன் வீட்டு வேலை-ய முடிக்கிற வரைக்கும்... ஆனா வருவாய் துறை-யை திட்ட முன்னாடி வந்திடறீங்க..என்ன உலகம் அப்பா..
வேகமாகசென்ற பஸ்ஸில் நாங்களும் பயணித்தது போன்றதொரு உணர்வு .யாதார்த்தமாக எழுதுகின்றீர்கள் இர்ஷாத்.தினகரனில் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பா.
//அன்லிமிடெட் மீல்ஸ் அடிப்பவரென்றால் தூங்கிவிட்டு எல்லோரையும் மொத்தமாக 'வழியனுப்பிவிடும் 'அபாயமும் இருக்கிறது.. //
ha ha ha ha ha
படத்தின் அழகு மனதை கொள்ளை கொள்கிறது.
இந்தியாவில்தான் இருக்கிறீர்களா...
வசந்தத்தில் உங்கள் கதை வந்ததற்கு வாழ்த்துக்கள்.
படம் அழகென்றால்பதிவு அதைவிட அழகு.
நல்ல அனுபவம்,எழுதிய விதம் அருமை,கதைக்கு வாழ்த்துக்கள்.
இர்ஷாத் கதையை படிக்கலாம்னு தினகரன் வசந்தம் 17-ம் பக்கம் போய் zoom செய்து வாசிக்கப்போனால் இடையில் indian abroad chat now என்று விளம்பரம் தான் வந்து நிற்கிறது,கதையை இங்கே கொடுத்தால் வாசித்திருப்பேன்,சகோ.எப்படியும் வாசித்து விடுகிறேன்.
நீங்க வேற !!! வல்லத்தில் இருந்து துவாக்குடி வரைக்கும் ரோடு வேற சுத்தமா இருக்கும். துவாக்குடி தாண்டினதும் நம்ம திருச்சி ட்ராபிக் ஆரம்பிச்சுடும் அப்புறம் எங்கே வேகமா ஒட்டறது... இல்லாட்டி மத்திய பேருந்து நிலையம் வரைக்கும் ரேஸ் ஓடி இருப்பார் சாரதி. ஆனாலும் அவங்களும் மனுசன் தானே !!! சாப்பிடமா வேலை செஞ்சா எரிச்சல் தானே வரும்.... அவங்களும் பாவம் தான்..
யதார்த்தமாக எழுதுகின்றீர்கள் இர்ஷாத்.
தினகரனில் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்
/மணியும் 12 ஆக பேங்க் டைம் முடிந்துவிட்டு என்று கேட்டை இழுத்து மூடிவிட்டார்கள்../
ஈசி. தகவலறியும் சட்டத்துல அந்த தேதில எத்தனை ட்ரான்ஸாக்ஷன் நடந்துச்சு. எவ்ளோ செக் கிளியர் ஆச்சு. எத்தன ஸ்டாஃப் வந்திருந்தாங்க. கேஷ் செஸ்ட்ல இருந்து எவ்வளவு பணம் எடுத்தாங்க. எவ்வளவு பணம் திரும்ப வச்சாங்கன்னு வெவரமா கேட்டு, அதெப்புடு அன்னைக்கு மட்டும் ஒருத்தருமே பேங்குக்கு வரலைன்னு விளக்கமும் கேட்டா இருக்கு ஆப்பு.:)
Post a Comment