வெல்விஷ‌ர்ஸீம் 14 இட்லியும்..



பதிவுகள் படிக்கிறது கொஞ்சமா குறைஞ்சு இப்ப சுத்தமாய் யாருடைய பதிவையும் படிக்க முடியாத நிலைக்கு அளவுகடந்த ஆணியே காரணம்.. ஆபிஸ் பதிவுகளை? எக்ஸெல் ஷீட்டில் படிக்க/திருத்தவே நேரம் ச‌ரியாக இருக்கு.. நண்பர்கள் புரிந்து கொள்ள கடவ... நான் பூமியில் அவதரிச்ச நாளுக்காக முகநூல்,ட்விட்டர், ஆர்குட்,போனில் ,மெயிலில் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.. இதற்கிடையில் சமையல் அட்டகாசகங்கள் ஜலீலா அவர்களும், ஆஹா பக்கங்கள் அப்துல் காதர் அவர்களும் விருதுகூட கொடுத்திருந்தார்கள் அவர்களின் அன்புக்கு நன்றிகள்..    
____________________________________
சில நேரங்களில் நம் அடையாளங்கள் நம்மை சங்கடபடுத்திவிடும் எழுதுறது இன்னார்தான் இவர் இப்படிப்பட்ட ஆளோ என்று நம்மை தெரிந்த அன்பர்களே அவர்களுக்குள்ளாகவே தவறான மதிப்பீடுகள் போட்டு ப‌ன்னெடுங்கால‌த்துக்கும் காலத்துக்கும் இவர் இப்படிதான் என்ற முடிவை எடுத்துவிடுகின்றனர் ஒருத்தரின் எழுத்தை வைத்து இவர் இப்படிதான் என்பதை நான் நம்புவதில்லை.. இதான் சாக்கு என்ற வழியில் அட்வைஸ் மழை பொழியும் திலகங்களுக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை..வெல்விஷர் என்ற போர்வையில் வரும் இவர்கள் 'கொல்விஷர்கள்' ' போதும் இதோடு நிப்பாட்டிக்குவோம்.. 
_________________________________
கத்தாரில் சரவணா பவன் ஹோட்டலுக்கு முன்னமே போயிருந்தாலும் நேற்று போனது ஸ்பெஷல்.. எனக்கு ரொம்ப பிடித்த 14 இட்லியை ஆர்டர் செஞ்சுட்டு உட்கார்ந்திருந்த கொஞ்ச நேரத்தில் வந்தது..ஆஹா என்னே ருசி..இதுக்காகவே அண்ணாச்சியை வெளில விட்றலாம்.. இப்படி ஊர் ஊருக்கு கடை திறக்கும் HSB இன்னமும் வளர்க..
________________________________
அசத்தபோவது யாரு நிகழ்ச்சியில் சிறுவர்களை கொண்டு கணவன் மனைவி ஊடல் கூடல்களை சிரிப்பு என்ற பெயரில் பேச வைப்பது அபத்தத்தின் உச்ச‌ம்..சிறுவர்களை சிறுவர்களாகவே இருக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது.. பெரிய திரையும் அதற்க்கு விதிவிலக்கல்ல ..நகைச்சுவைக்கு விஷயம் கிடைக்காட்டி ஏ' நெடியில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி உதா'ரணம் '.
_______________________________
இந்த புத்தக கண்காட்சியில் ரொம்ப நாள் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற எஸ் ராவின் 'யாமம் ' நாவலும், சாருவின் தேகமும் வாங்கசொல்லி ந‌ண்பரிடம் சொல்லியிருக்கிறேன்..சம கால இலக்கிய சூழலில் இவ்விரண்டும் வெவ்வேறானவை என்றாலும் படிக்க வேண்டிய துள்ளலில் இருக்கிறது மனது.. இதுவரை ஒரு தடவை கூட புத்தக கண்காட்சிக்கு போனதில்லை போக வேண்டும் கிடைக்கும் அடுத்த சந்தர்ப்பத்தில்..
______________________________
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கைல கெடச்சான் செத்தான் 


ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில பொண்ணுங்களை பெத்த பாவத்திற்காக அப்பன்மார்களை திட்ட (அ) கடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் கவிஞர்கள் ..வழக்கம் போல சிம்பு பாட பாடல் ந‌ல்லா இருந்தாலும் வரிகள் சகிக்கலை.. சிம்புக்கு வரபோற மாமனார் செத்தா(ர்)ன் செத்தா(ர்)ன்...
_________________________________
My Tweets@Twitter


இதோடு இர‌ண்டு முறை 2010 என்றே எழுதி அடித்துவிட்டேன் # புது வ‌ருஷ‌ம்.


எப்ப‌வோ ச‌ப்ஸ்க்ரிப்ஸ‌ன் செய்த‌ 'ஜெமோவின் த‌ள‌ அப்டேட்க‌ள் எல்லாம் ஸ்பேம் மெஸேஜில் வ‌ருகின்ற‌ன‌ என‌க்கு # த‌குந்த‌ இட‌ம்தான்..


அநியாய‌ங்க‌ள் அனைத்தையும் ம‌ற‌ப்ப‌த‌ற்க்குத்தான் ம‌ற‌'த்த‌மிழ‌ன்'ன்னு பெய‌ர் வ‌ந்துச்சோ # ஞானோத‌ய‌ம்


'ஆணாதிக்க பதிவர்கள் வாழ்க' 'பெண்ணாதிக்க பதிவர்கள் வளர்க' மொத்தத்தில் பதிவுகள் சாக'.
___________________
My Facebook Status Msg's


ப‌ஸ் க‌விழுற‌ மாதிரி கூட்ட‌ம் இருந்தாலும் நாம‌ கால் க‌டுக்க‌ நிற்கும்போது அடுத்த‌ ப‌ஸ் ஸ்டாப்பில் ஏறும் ச‌காக்க‌ள் ஏதோ எட‌ம்போட்டு வெச்ச‌ மாதிரி உள்ளே உள்ளே எட்டி பார்க்கிறாய்ங்க‌ளே(அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ந‌ம‌க்கு வ‌ர்ற‌ கோப‌ம் இருக்கே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஏன் அப்ப‌டி எக்கால‌த்துத் தோன்றிய‌து இப் ப‌ழ‌க்க‌ம் # மாபெரும் ட‌வுட்டு


அக்மார்க் இல‌க்கிய‌வாதிக‌ள் ச‌ண்டை போட்டுக்கொள்ளுவ‌தை பார்க்க‌/ப‌டிக்க‌ அழ‌காயிருக்கிற‌து காத‌லியை கோப‌த்தில்கூட‌ நீ அழகா இருக்கே என்று சொல்வ‌துபோல் இருக்கிற‌து இவ‌ர்க‌ள் போடும் ச‌ண்டைக‌ள் என்னே வார்த்தை விளிப்புக‌ள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் # வேடிக்கை பார்ப்ப‌தையே ல‌ட்சிய‌மாக‌? கொண்ட‌ த‌மிழ‌ர்க‌ளில் ஒருவ‌னாய்.. .


ஆபிஸில் ஒருவ‌ன் ரொம்ப‌ குடைச்ச‌ல் குடுக்கிறான் மூக்கில் குத்த‌லாம் என்றால் என்கைக்கு மாவுக‌ட்டு போடும‌ள‌வுக்கு அவ‌ன் மூக்கு பெரிசா இருக்குது என்ன‌ செய்ய‌ # எனி ஐடியா'ஸ்.


த‌னியொரு ம‌னித‌னுக்கு உண‌வு இல்லையெனில் ஜ‌க‌த்தினை அழித்திடுவோம் என்றான் பார‌தி.. த‌னியொரு த‌மிழ‌னெனுக்கு அலுவ‌ல‌க‌த்தின் அருகிலேயோ ஹோட்ட‌ல்க‌ளே இல்லாட்டி எதை 'அழிக்கிற‌து' # கொல‌ ப‌சிக்கு 'ரெண்டு வாழைப்ப‌ழ‌ம் ஒரு ஃபிரெஷ் மில்க்கும்.


அவ்வ்வ்,என்ன‌ கைய‌புடிச்சு இழுத்தியா,ஆணி புடுங்கிற‌து'ன்னு இப்ப‌டி ப‌ல‌ க‌ருத்துக‌ள‌? வ‌டிவேலுக்கிட்ட‌தான் பெற‌ முடிஞ்ச‌து சொந்த‌ ச‌ர‌க்கு யார்க்கிட்டேயும் இல்லையா..


உங்க‌ள் வாக்கினை போட்டீங்க‌ளான்னு கேட்டு த‌மிழ்ம‌ண‌த்திலேர்ந்து கேட்கிறாங்க‌ # ட‌ப்பு வாங்காம‌ல் வாக்கு போட‌ இந்த‌ த‌மிழ‌னின்ம‌ன‌ம் த‌ய‌ங்குகிற‌து என்ப‌தை த‌மிழ்ம‌ண‌ம் உண‌ருமா # வ‌ர‌லாறு முக்கிய‌ம்'ல‌..


வ‌ந்தாரை வாழ‌வைக்கும் த‌மிழ்நாட்டை இத்துனூன்டு 'வெங்காய‌ம்' அழ‌ வைக்குது # கிர்ர்ர்ர் 


'Western Union Money Transfer' ல‌ கேர‌ளாக்கு ம‌ட்டும் ச‌ர்வீஸ் சார்ஜ் 18 ரியால் ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌ ந‌ம‌க்கு 25 ரியால்.. கேர‌ளாவை தாண்டி இந்தியா'ன்னு? ஏதாவ‌து இருக்கா # தூங்க‌ விடாத‌ ட‌வுட்டு.


இன்ப‌மும் துன்ப‌மும் க‌ல‌ந்துதான் வாழ்க்கை என்கிறார்க‌ள்.... இன்ப‌த்தைவிட‌ துன்ப‌மே அதிக‌ம் வ‌ந்தால் அத‌ற்க்கு பேர் என்னவாம் # ட‌வுட்டோ ட‌வுட்டு.


ம‌துரை தின‌க‌ர‌ன் ஆபிஸில் மூன்று உயிர்க‌ள் காலாவ‌தியான‌போது அங்கே போன‌ க‌லாநிதிமாற‌னுக்கும் இப்போ த‌யாநிதி அழ‌கிரி க‌ல்யாண‌த்திற்கு போகும் க‌லாநிதிமாற‌னுக்கும் ஆறு வித்தியாச‌ம் க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு? அவ‌ர்க‌ள் முக‌ப்புத்த‌க‌த்தில் எதை எழுதினாலும் 'லைக்க‌ப்ப‌டும்' என்ப‌தை தெரிவித்துக்கொ(ல்)ள்கிறேன் # க‌ண்க‌ள் ப‌ணித்த‌து இத‌ய‌ம் இனித்த‌து.
____________________________
வாய்ஸீம் முக‌பாவ‌னையும் அழகாய் பொருந்துகிற‌ இந்த‌ சிறுமி பாடும் பாட‌ல் ஏ ஒன்.. அதுவும் ஏ.ஆர்.ர‌ஹ்மானின் பாட‌ல் ஒரு அஞ்சு நிமிஷ‌த்திற்க்கு ம‌ன‌ச‌ வாட‌கைக்கு விட்ற‌வேண்டிய‌துதான்..



______________________________
இந்த‌ பாட‌லை ந‌ன்றாக‌ க‌வ‌னியுங்க‌ள் முக்கிய‌மாய் ர‌ஜினியின் கையை..இவ்ளோ செல‌வு செய்த‌வ‌ர்க‌ள் இதை எப்ப‌டி கோட்டை விட்டார்க‌ள்..


______________________________

Post Comment

19 வம்புகள்:

ஹுஸைனம்மா said...

கையில என்னான்னு தெரீல. நீங்களே சொல்லிடுக்கோ.. நானெல்லாம் பாட்டு, ஃபைட்டை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி பாக்கிற ஆள்!!

14 இட்லிக்காக அண்ணாச்சிக்கு இப்படி ஆதரவா மாறிட்டீங்களே? பசி வந்தா பத்தும் பறக்குமு இதத்தான் சொல்லுவாய்ங்களோ?

Thenammai Lakshmanan said...

இவர்கள் 'கொல்விஷர்கள்' ' போதும் இதோடு நிப்பாட்டிக்குவோம்..
//

ஹுசைனம்மா சொல்றதும்சரியாதான் இருக்கு..:))

ஆனந்தி.. said...

எனக்கும் அந்த கை மேட்டர் என்னனு தெரில..அது டூப்பு ஆடுரார்னு மட்டும் புரியுது...)) ஒரு வேளை glouse டாக்டர் ரஜினிக்கும் போட்டு விட்டு இருக்காங்களோ???:))

சுசி said...

:))))

அரபுத்தமிழன் said...

தம்பி, பதிவு,ட்வீட்ஸ்,முக நூல் கமெண்ட்ஸ்
அத்தனையும் இளமைத் துள்ளல்(லொள்ளல்) ரகம். :))

புல்லாங்குழல் said...

அற்புதமான அலசல்கள். விரைவில் புத்தகமாக ( கதை, கட்டுரை) வெளி வர வாழ்த்துகள். நிச்சயம் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

ஸ்ரீராம். said...

இன்று ஏகப் பட்ட மேட்டர் தட்டி விட்டுருக்கீங்க...படம் மட்டும் பார்க்கவில்லை. பஃபர் ரொம்ப லேட் ஆகுது...!

r.v.saravanan said...

நல்ல அலசல் இர்ஷாத்

ஸாதிகா said...

// ஒருத்தரின் எழுத்தை வைத்து இவர் இப்படிதான் என்பதை நான் நம்புவதில்லை.//ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

//..இதுக்காகவே அண்ணாச்சியை வெளில விட்றலாம்// ஏங்க அண்ணச்சி இன்னுமா உள்ளே இருக்கார்ன்னு நினைத்துக்கொண்டு இருக்கீங்க?

//கணவன் மனைவி ஊடல் கூடல்களை சிரிப்பு என்ற பெயரில் பேச வைப்பது அபத்தத்தின் உச்ச‌ம்.// அசிங்கத்தின் உச்ச கட்டம் என்று சொல்லுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

//சிம்புக்கு வரபோற மாமனார் செத்தா(ர்)ன் செத்தா(ர்)ன்...// ஹா..ஹா..ஹா

பனித்துளி சங்கர் said...

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவு என்றாலும் கடந்த அனுபவங்கள் அனைத்தும் கரைத்து சென்றது மனதை தோழரே . அருமை . பகிர்வுக்கு நன்றி

ராஜவம்சம் said...

அருசுவை கலக்கல் நண்பா.

ராஜவம்சம் said...

ஹுஸைனம்மா அப்படியே கதையையும் ஓட்டிவிட்டிங்கன்னா நிம்மதியா தூக்கம் வரும் இல்லாட்டி தலைவலிதான் வரும்.

ஆயிஷா said...

நல்ல அலசல் சகோ,

சசிகுமார் said...

அருமை வாழ்துக்கள்

சமுத்ரா said...

nalla padhivu

Kanmani said...

கலக்கல் இர்ஷாத்.

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான அலசல்கள்.

Asiya Omar said...

நல்ல ரசித்து படித்தேன்.பகிர்வு,அலசல் அருமை சகோ.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates