அஜின‌மோட்டாவும் ம‌ந்திர‌ப்புன்ன‌கையும்..


நான் துபாயிலிருந்தபோது ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு....ப‌க‌ல் இர‌ண்டு ம‌ணி இருக்கும் விடுமுறை தின‌மென்று நினைக்கிறேன் ல‌ஞ்ச் முடிச்சிட்டு த‌ங்கியிருந்த‌ ரூமிற்க்கு எதிரில் மூணு நிமிஷ‌ ந‌டையில்(Grocery)ம‌ளிகை க‌டையிருந்து அங்கே போய் வாழைப்ப‌ழ‌ம் சாப்பிட‌லாம் என்று போனால் வாழைப்ப‌ழ‌ம் இல்லை அதுசரி நாம் நினைக்கிறாத‌வ‌து ந‌ட‌க்கற‌தாவ‌துன்னு, அஜின‌மோட்டா ஏக‌த்துக்கும் ராஜ்ஜிய‌ம் ந‌ட‌த்துற‌ சிப்ஸ் ஒன்று வாங்கி கொறித்துக் கொண்டிருந்தேன்.. என்னுட‌ன் அந்த‌க் க‌டையில் ரெண்டு பேர் நின்றிருப்பார்க‌ள்.மிக‌ச்ச‌ரியாக‌ ஐந்து நிமிஷ‌த்தில் 'ப‌ல‌தியா 'என‌ப்ப‌டும் முனிசிபாலிட்டி வேன் வ‌ந்து அதிலிருந்து இற‌ங்கிய‌ ஒருவ‌ர் க‌டை ஓன‌ரிட‌ம் ஏதோ சொல்லிவிட்டு அவ‌ரின் ஐடி ந‌ம்ப‌ரைக் குறித்துக்கொண்டு சென்றுவிட்டார்..விஷ‌ய‌ம் என்..ன்ன்னான்ன்ன்ன்ன்னா,, நான் க‌டைக்கு போற‌துக்கு முன்னாடி ஏதோ ஒரு வ‌ளைகுடா நாட்டைச் சேர்ந்த‌வ‌ர் 'Fresh Milk' என‌ப்ப‌டும் பாட்டிலில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ பாலை வாங்கி சென்றிருக்கிறார் வாங்கிய‌ பால் எக்ஸ்பைரி முடிந்து ஒரு நாள் ஆகிவிட்ட‌ப‌டியால் போனை எடுத்து புகார் செய்துவிட்ட‌ப‌டியால் மேற்ப‌டி ஐடி எண் குறிப்பு...அடிச்ச ஃபைன் துபாய் திர்ஹ‌ம் ப‌த்தாயிர‌ம் இத்துனூன்டு ஒன்ற‌ரை திர்ஹ‌ பாலுக்கு...இந்த‌ மாதிரி இந்தியாவில் ந‌ட‌க்குமான்னு க‌ன‌வு கூட‌ வ‌ர‌மாட்டேங்குது....
#################################################################
லிவிங் டூ கெத‌ர்'ல‌ வாழ்வ‌ற‌ங்க‌ளால் கூட‌ இவ்வ‌ள‌வு ச‌ல‌ச‌ல‌ப்பு இருக்காது ஆனா இந்த‌ வ‌லைவாசிக‌ள் வைக்கிற‌ விவாத‌ங்க‌ள் ஆரோக்கிய‌த்துல‌ ஆர‌ம்பித்து ஆரோக்கிய‌மில்லாத‌ வார்த்தைக‌ளில் முடிகிற‌து.. கூகிள் ப‌ஸ்ஸிலும் ச‌ரி ப‌திவுக‌ளிலும் ச‌ரி எல்லோரும் தான் சொல்ற‌துதான் ச‌ரிங்க‌'ற‌ புள்ளியிலே முடிக்கிறாங்க‌. வ‌ருஷா வ‌ருஷம் ஒரு கிறுக்க‌ன் ந‌ம்ம‌கிட்ட‌ வ‌ந்துர்றானே அப்ப‌டின்னு வ‌டிவேலு சொல்ற‌ மாதிரி மாசா மாச‌ம் ப‌திவுக‌ளுக்கு விஷ‌ய‌ம் கிடைத்துவிடுகிற‌து..
#################################################################
காட்சிமொழியை உறுதிப்ப‌டுத்தியிருக்கிறார் மிஷ்கின். குளோச‌ப் ஷாட்க‌ளில் பார்த்து பார்த்து ச‌லித்த‌ ந‌ம‌க்கு லோ ஆங்கிள் ஷாட்டில் அதிக‌ காட்சியை காட்டிய‌ ப‌ட‌ங்க‌ளில் இதுதான் முத‌லிட‌த்தில் இருக்கும்..சிறுவ‌னை எங்கேப்பா பிடிச்சீங்க‌ தைரிய‌மா நேஷ்ன‌ல் அவார்டுக்கு பைய‌ன் வ‌ருவான் உட‌ல்மொழியில் இத்த‌னை சிற‌ப்பாக‌ ந‌டிக்க‌ எளிதில் ஆகிற‌ காரிய‌ம‌ல்ல‌ ந‌ன்றாக‌ ந‌டித்திருக்கிறான் சிறுவ‌ன்..போலீஸிட‌ம் ஆங்கில‌த்தில் பேசி ம‌ட‌க்குவ‌தும், எல்லோரையும் மாமா என்ற‌ழைப்ப‌தும் ஏதோ ந‌ம்மையும் அதே போல் அழைப்ப‌துபோன்ற‌ உண‌ர்வை கொண்டு வ‌ந்துவிட்டான்.மிஷ்கின் இந்த‌ க‌தாபாத்திர‌த்துக்கு ந‌ன்றாக‌ பொருந்துகிறார்.அம்மாவைப் பார்த்து அழுவ‌திலும்,சிறுவ‌ன் மென்ட‌ல் என்று சொன்ன‌தும் அந்த‌ இட‌த்தில் அழுவ‌தும் மிக‌ச்சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார். இதையெல்லாத்தைவிட‌ சொல்ல‌ வேண்டிய‌து இளைய‌ராஜாவை சில‌ காட்சிக‌ளில் இவ‌ர‌து இசையே எல்லாத்தையும் செய்துவிடுகிற‌து ஹேட்ஸ் ஆஃப் ராஜா சார் 2010 லும் இருக்கிறேன் என்று அடையாள‌ப்புள்ளியை வ‌லுவாக‌ ப‌தித்திருக்கிறார் இசையில். இந்த‌ ப‌ட‌த்தில் எல்லாக் காட்சியிலும் மிஷ்கினும் அந்த‌ சிறுவ‌னும் த‌லையை குனிந்தே இருப்ப‌து ஒருவேளை 'ஜ‌ப்பானிய‌' முறைப்ப‌டி க‌தையின் மூல‌த்திற்கு ந‌ன்றி செலுத்துவ‌த‌ற்காக‌வோ என்ன‌வோ என‌ தோன்றுவ‌தை த‌டுக்க‌ முடிவ‌தில்லை...
#################################################################
ம‌ந்திர‌ப்புன்ன‌கை க‌ரு.ப‌ழ‌னிய‌ப்ப‌ன் த‌ம்'மில் ஆர‌ம்பித்து அருந்த‌தி ராய் வ‌ரைக்கும் நான் ஸ்டாப் பேச்சு இவ‌ரிட‌ம் இப்ப‌டியொரு ப‌டைப்பை? எதிர்பார்க்க‌வில்லை என்பதே எல்லோருக்கும் தோன்றுகிற‌து..

'ம‌னித‌ன் இருக்கிற‌ இட‌த்திலேயே பேச‌ வ‌ச‌தியாக‌த்தான் செல்போனை க‌ண்டுபிடிச்சான் ஆனா போன் வ‌ந்தா எடுத்துக்கிட்டு வெளில‌ போய் பேசுறாங்க‌'

'டாஸ்மாக் நின்னுக்கிட்டு குடிக்க‌ ம‌து கேட்க‌ப்போது ச‌த்த‌மா கேட்கிற‌ நீங்க‌ ஏன் காண்ட‌ம் வாங்கும்போது ம‌ட்டும் ஏன் த‌ய‌க்க‌ம் வெட்க‌ம் கெட்ட‌த‌ற்கு ச‌த்த‌மா கேட்கும்போது ந‌ல்ல‌த‌ற்கு த‌ய‌க்க‌ம் கூடாது'என்று மெடிக்க‌ல் ஷாப்பில் ச‌த்த‌மாக‌ காண்ட‌ம் கேட்கும் இட‌த்தில் அப்ளாஸ்..

'ப‌டிக்காத‌வ‌ங்க‌ மாடு க‌ழுத்துல‌ க‌யிறைக் க‌ட்டி மாடு மேய்ப்பாங்க‌,ப‌டிச்ச‌வ‌ங்க‌ நாய் க‌ழுத்தில‌ ச‌ங்கிலிய‌ க‌ட்டி நாயை மேய்க்கிறாய்ங்க‌'

பாஸ்க‌ர் ச‌க்தியின் வ‌ச‌ன‌ங்க‌ள் ப‌டு ஷார்ப்பாக‌ இருக்கிற‌து..இதுக்கெல்லாம் முத்தாய்ப்பாக‌ ஒரு காட்சியில் ஒரு சித்தாள் த‌ன் குழ‌ந்தைக்கு பால் ஊட்டிக்கொண்டிருக்க‌,

'இங்க‌ என்ன‌மா ப‌ண்றே?'

'குழ‌ந்தைக்கு ப‌சியாத்துறேங்க‌'

'ம் முத‌ல்ல‌ குழ்ந்தைக்கு ப‌சியாத்துவே அப்புற‌ம் புருஷ‌னுக்கு ப‌சியாத்துற‌ மாதிரி வ‌ரும் போய் வேலையைப் பாரும்மா' 
என்று சொல்லும் இட‌த்தில் ஓட்டுமொத்த‌ தாய்க்குல‌ங்க‌ளின் எதிர்ப்பை நிச்சய‌ம் வாங்கியிருக்க‌வேண்டும்..இந்த‌ மாதிரி கொச்சையான‌ ஆபாச‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் கொடிக்க‌ட்டி ப‌ற‌ப்ப‌து நல்ல‌த‌ல்ல‌, லாஜிக் விஷய‌த்தில் ஏக‌ப்ப‌ட்ட‌ ஓட்டைக‌ள்.. க‌ரு.ப‌ழ‌னிய‌ப்பா பெய‌ர்'ல‌ இருக்கிற‌ க‌ரு ப‌ட‌த்தி'ல‌ க‌ம்மிய‌ப்பா.
#################################################################
ப‌திவு எழுதினா நாம விருது கொடுப்போம் ஆனா இவ‌ங்க‌ ஒரு ப‌டி இல்ல‌ ப‌ல‌ ப‌டிபோய் ஒரு ல‌ட்ச‌ம் கொடுக்க‌ப்போறாங்க‌ளாம்..
#################################################################

Post Comment

34 வம்புகள்:

vasu balaji said...

இங்கயும் கம்ப்ளெயிண்ட் பண்ணலாமே. ஆட்டோ வரும் பர்வால்லியா?

Ahamed irshad said...

பாலாண்ணே ஹி ஹி..

Joe said...

//
ம‌னித‌ன் இருக்கிற‌ இட‌த்திலேயே பேச‌ வ‌ச‌தியாக‌த்தான் செல்போனை க‌ண்டுபிடிச்சான் ஆனா போன் வ‌ந்தா எடுத்துக்கிட்டு வெளில‌ போய் பேசுறாங்க‌
//
இருக்கிற இடத்திலேயே பேசினா அது landline.
எங்க வேணும்னாலும் எடுத்துக்கிட்டு போய் பேச முடியும்னா தான் cellphone.

எப்படி அவரோட பாணியிலேயே பதில் சொன்னோம்ல? ;-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த‌ மாதிரி இந்தியாவில் ந‌ட‌க்குமான்னு க‌ன‌வு கூட‌ வ‌ர‌மாட்டேங்குது.
//

அதுக்குதான் , எலெக்‌ஷன் டைம்ல பணமா கொடுக்கிறாங்களே பிரதர்..


:-)

r.v.saravanan said...

க‌ரு.ப‌ழ‌னிய‌ப்பா பெய‌ர்'ல‌ இருக்கிற‌ க‌ரு ப‌ட‌த்தி'ல‌ க‌ம்மிய‌ப்பா

super

சுசி said...

//இந்த‌ மாதிரி இந்தியாவில் ந‌ட‌க்குமான்னு க‌ன‌வு கூட‌ வ‌ர‌மாட்டேங்குது....//

ஹிஹிஹி..

நல்லா எழுதி இருக்கீங்க படங்கள் பத்தி..

Madurai pandi said...

இந்த‌ மாதிரி இந்தியாவில் ந‌ட‌க்குமான்னு க‌ன‌வு கூட‌ வ‌ர‌மாட்டேங்குது.
//

Aasai dhaan!!!

ராஜவம்சம் said...

//கூகிள் ப‌ஸ்ஸிலும் ச‌ரி ப‌திவுக‌ளிலும் ச‌ரி எல்லோரும் தான் சொல்ற‌துதான் ச‌ரிங்க‌'ற‌ புள்ளியிலே முடிக்கிறாங்க‌.//

விவாதம் என்பதே விவாதித்து எது சரியோ அதை தேர்ந்தெடுப்பது தான் முடிவு எடுத்ததுக்கு அப்புரம் எதுக்கு விவாதம்.

எஸ்.கே said...

நன்றாக உள்ளது!

Thenammai Lakshmanan said...

பகிர்வு அருமை அஹமத்..:))

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க.

குறையொன்றுமில்லை. said...

பதிவு அர்மையா இருக்கு, நன்றாக எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பகிர்வு அருமை இர்ஷாத்.

puduvaisiva said...

'மிஷ்கினும் அந்த‌ சிறுவ‌னும் த‌லையை குனிந்தே இருப்ப‌து ஒருவேளை 'ஜ‌ப்பானிய‌' முறைப்ப‌டி க‌தையின் மூல‌த்திற்கு ந‌ன்றி செலுத்துவ‌த‌ற்காக‌வோ என்ன‌வோ என‌ தோன்றுவ‌தை த‌டுக்க‌ முடிவ‌தில்லை'

:-)

Jaleela Kamal said...

எப்போதும் எக்ஸ்பரி டேட் செக் செய்து வாங்குவது நல்லது .
இல்லை என்றால் ஏதாவது ஃபுட் பாயிசன் ஆகிடுமே.

கல்வை வம்பு நல்ல இருக்கு

ஹேமா said...

அஜினமோட்டோவும் மந்திரப்புன்னகையும் நல்லாவேயிருக்கு இர்ஷாத் !

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத் - அருமை அருமை - காலாவதியான பாலா - இங்கே மாத்திரை மருந்தெல்லாம் விக்கறானுங்க - நீங்க வேற - மிஷ்கினும் பையனும் தலை குனியறதுக்கு ஒரு காரணம் கண்டு பிடிச்சாச்சா - பலே பலே - எப்பொழுதும் வலை உலகில் எழுதுபவர் அவர் சொல்வது தான் சரி என்பார் - இது இயல்பு தானே ! நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஆமினா said...

இதுக்குலாம் பெரிய பனிஷ்மெண்டா?

எங்க ஊர்ல கம்ப்ளைன் பண்ணா ஒரு வாரத்துல என்னைய ஊரவிட்டு தொறத்திடுவாக :))

ஸ்ரீராம். said...

//"மிஷ்கினும் அந்த‌ சிறுவ‌னும் த‌லையை குனிந்தே இருப்ப‌து ஒருவேளை 'ஜ‌ப்பானிய‌' முறைப்ப‌டி க‌தையின் மூல‌த்திற்கு ந‌ன்றி செலுத்துவ‌த‌ற்காக‌வோ என்ன‌வோ.."//

ஹா...ஹா...

tausif said...

semma review! a true one!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சும்மா சில்லரையச் சிதறவிட்டா மாதிரி
சகல விஷயங்களும் கல...கல...கல...
ஆனால், அந்த ஒரு இலட்சம் விஷயம்
இன்னும் சைலன்ட்டாவே இருக்கே...
எப்போ?

Anonymous said...

good sharing irshad..

Kanmani said...

இந்த‌ மாதிரி இந்தியாவில் ந‌ட‌க்குமான்னு க‌ன‌வு கூட‌ வ‌ர‌மாட்டேங்குது//

வ‌ரும் ஆனா வ‌ராது.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

"லஞ்சம் வாங்கினோம் கைது செய்தார்கள்
லஞ்சம் கொடுத்தோம் விட்டு விட்டார்கள்"
இதுதான் இந்தியாவில் நடக்கிறது

ம.தி.சுதா said...

அழகான பார்வை ஒன்றும் ஆழமான பதிவு ஒன்றும் அருமை சகோதரா...
வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Ahamed irshad said...

சசிகுமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

வானம்பாடிகள்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Joe@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(ஜோ அச்சே முடிய‌ல‌ எப்படிங்க‌ இப்ப‌டி!!!)

Ahamed irshad said...

பட்டாபட்டி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

r.v.saravanan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

சுசிக்கா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

மதுரை பாண்டி @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


ராஜவம்சம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


எஸ்.கே@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

தேனம்மை லெக்ஷ்மணன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Chitra@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Lakshmi@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

ஸ்டார்ஜன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

புதுவை சிவா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Jaleela Kamal@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

ஹேமா @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

சீனா ஐயா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஆமினா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(இப்ப‌டி தொற‌த்தி தொற‌த்தி இப்ப‌ எந்த‌ ஊர்'ல‌ இருக்கிறீங்க‌?)

Ahamed irshad said...

ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

tausif@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

NIZAMUDEEN@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(விரைவில் வ‌ரும்)

Ahamed irshad said...

தமிழரசி @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Kanmani@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(லொள்ளா)

வித்யா சுப்ரமணியம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(வாங்க‌ எழுத்தாள‌ரே..!!!!!)

சுதா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates