'டேய் கிருஷ்ணமூர்த்தி இட்லி ஆர்றது பார்'
'தோ வர்றேம்மா '
அரைமணிநேரமா இவன் பார்த்த கண்ணாடிக்கு கண்டிப்பா ரசம் போயிரும்..
'அம்மா கிருஷ்ணமூர்த்தி'ன்னு கூப்பிடாத ஷார்ட்டா 'கிருஷ்'ன்னு கூப்பிடு'
' கிருஷ் பிரெஷ்'ன்னெல்லாம் கூப்பிட முடியாது அது உங்க தாத்தா பேரு'
'அப்பாக்கே வயசு ஐம்பதைத் தொடுது அவரோட அப்பா பேரு
' டூ ஓல்டு நேம் ஐ டோண்ட் லைக் இட்'
'இனி நான் கிருஷ் ' ஒருமனதாய் தீர்மானம் நிறைவேற்றியது மனது...
'ஏம்மா எப்ப பார்த்தாலும் இட்லி'ய போட்டு சாவடிக்கிற'
'டேய் ரொம்ப பேசாதே இதுக்கெல்லாம் சேர்த்தார் போல ஒருத்தி உனக்கு வரத்தானே போறா' பார்வதி சொன்ன வினாடியில் நேற்று பெசன்ட் நகர் டிப்போவில் பார்த்த பெண்ணின் இல்லை இல்லை தேவதையின் முகம் மனதில் நிழலாடியது .இன்னிக்கும் எப்படியும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் மகிழ்ச்சியில் வழக்கமாய் போகும் ஐந்து இட்லியில் ரெண்டு இட்லி போக மறுத்து ஸ்ட்ரைக் பண்ணியது..
'என்ன கலர் சட்டை போடலாம்?'
'இந்த சட்டைக்கு வாட்ச் போடலாமா வேண்டாமா ?'
'இன்னிக்கு ஜீன்ஸ் போடக்கூடாது'? இவன் எலியாகவும் மனசு பூனையாகவும் இருந்தது..
ஒரு உதையிலேயே பைக் ஸ்டார்ட் ஆக அவன் கற்பனை குதிரையையும் சேர்ந்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தது..அன்னிக்கு எல்லோரும் நல்லவர்களாக தெரிந்தார்கள் எதிர்ப்பட்ட பிச்சைக்காரனுக்கு இருபது ரூபாய் போட்டது கொஞ்சம் அதிகம்தான்..
இதோ இன்னும் கால்மணி நேரத்திற்குள் போயிரலாம் எப்படியும் அவள் வருவாள் அட்லீஸ்ட் மொபைல் நம்பராவது வாங்கிடனும் 'உறுதிமொழி படுஸ்ட்ராங்கா இருந்தது..
கிறிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் பட்...
கற்பனையிலே வந்தவனுக்கு எதிரில் வந்த சைக்கிள்காரனை தெரியவில்லை மோதியதில் கையில் கிளை பிரித்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது..
சைக்கிள்காரன் 'சாவுக்கிராக்கியில்' ஆரம்பித்து 'நாசமாபோக' வரைக்கும் திட்டிக் கொண்டே சென்றான்..
கைவலியோடு மொபைலில் சுரேஷைக் கூப்பிட்டதும் பத்து நிமிஷத்தில் வந்தான்.பைக்கில் போய்க் கொண்டிருக்கும்போதே 'டாக்டர் விஷ்ணுப்பிரியன்'என்ற க்ளினிக் கண்ணில்பட அங்கே போனார்கள்..
'ஒரு இன் ஜக் ஷன் எழுதுறேன் அதோடு ரெண்டு டேப்ளட்.. மெடிக்கல்'ல வாங்கிட்டு வெயிட் பன்னுங்க' சுரேஷ் போய் வாங்கி வந்தான்.
'இங்க யாரு கிருஷ்'?
குரல் வந்த திசையை பார்த்தான்..
பளிச் பளிச் மின்னல்.... இடி...... மாறி மாறி அடித்தது மனசுக்குள்.... பஸ் டிப்போவில் பார்த்த அதே பொண்ணு ஸாரி தேவதை.. இவள் நர்ஸா?
'உள்ள வாங்க'........ போனான்.
'அந்த கட்டில்'ல படுங்க'
'எதுக்கு?'
'எதுக்கா இன் ஜக் ஷன் போட வேண்டாமா?'
'கையில போடுங்க'
'நீங்க ரொம்ப ஓல்லியா இருக்கீங்க உங்க உடம்புக்கு இடுப்புல தான் போட முடியும் இடுப்பக் காட்டுங்க'
சைட் அடிக்க வந்த பொண்ணே நர்ஸா.......... அதுவும் இடுப்புல ஊசி....
எ..ன்ன்ன கொடு..ம்ம்ம சார் இது.............

27 வம்புகள்:
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.
பாவம்ங்க. :-))
வார்த்தை தேவையில்லாத வாதம் என்றே இதை எண்ணுகிறேன்.. கதையோ கவிதையோ எதிலேயும் மதம்,ஜாதி இதையெல்லாம் திணிக்காதீங்க...உங்களின் அந்த பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது..
நல்லா இருக்கு நண்பரே...
ஹா ஹா..
ஊசி போட்டு முடிச்சதும் என்ன சொல்லிருப்பான் கிருஷ்? :) # டவுட்டு
//வார்த்தை தேவையில்லாத வாதம் என்றே இதை எண்ணுகிறேன்.. கதையோ கவிதையோ எதிலேயும் மதம்,ஜாதி இதையெல்லாம் திணிக்காதீங்க...உங்களின் அந்த பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது..//
பரவாயில்லை அஹமது. என்னுடைய ஆவல் ஒன்றைத்தான் உங்களுக்கு தெரியப்படுத்தினேன்.
மற்றபடி, வாதமோ திணிப்போ என் மனதில் கிடையாது.
அந்த பின்னூட்டம், ஏதேனும் ஒரு வகையில் கூட உங்களை பதட்டமடையவோ, எரிச்சலடையவோ தூண்டியிருக்குமாயின் உங்கள் மன்னிப்பை கோருகிறேன்.
ஊசி குத்துனது *சுருக்*கா ஒல்லின்னு சொன்னது *சுருக்*கா:))
அருமை!
Nice
அப்படின்னா ஊசிப் போ(ன)ட்ட உடம்பா "கிருஷ்"க்கு ! :)
சைட் அடிக்க வந்த பொண்ணே நர்ஸா.......... அதுவும் இடுப்புல ஊசி....
ஹா ஹா
சூப்பர் இர்ஷாத்
கதை அருமை. ஆனாலும் கிருஷ்க்கு இப்படி இடி விழுந்திருக்கக்கூடாது. பாவம் அவன்.
அருமை,இர்ஷாத்,உங்கள் கற்பனை அம்மாடி சூப்பர்.
:-))!!
ஊசி போல ஒடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மசின்னுல்ல சொன்னாய்ங்க.
காலையில் அம்மாவை 'நறுக்'கியதால் வந்த வினை
நர்ஸ வடிவில் கெடச்ச 'சுருக்'
super story
abdul naseer
அது சரி ஊசிப்பபோட்டபிறகு மொபைல் நம்பரை வாங்கினாரா ? இல்லையா ?....நல்ல கதை இர்ஷாத் வாழ்த்துக்கள்
அருமை இர்ஷாத்!!
வார்த்தை@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Lakshmi@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Chitra@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ஹி ஹி)
வெறும்பய@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Balaji saravana@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வானம்பாடிகள்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ரெண்டுக்குமிருக்கலாம்..)
எஸ்.கே@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சசிகுமார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
அபுஇபுறாஹிம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
r.v.saravanan@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஸ்டார்ஜன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
asiya omar@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தெய்வசுகந்தி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
அரபுத்தமிழன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
mohamed@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Yasir @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Kanmani@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
இர்ஷாத்..என்னே கற்பனை வளம்.தொடர்ந்து இது போல் இனி சிறுகதைகளை உங்க்களிடம் இருந்ட்து எதிர்பார்க்கறோம்..
என்ன திருப்பம்...ஆனால் இருந்தால்தான் என்ன? எங்காவது காதல் ஸ்டார்ட் ஆகட்டுமே...!
ஸாதிகா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீராம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment