சரியான பசி மணி ஒன்று இருபது. அலுவலகத்தில் எதிரில்'Choose The Best Hotel' அப்படின்ற மாதிரி ஒன்றுக்கொன்று குறைவில்லாமல் இரண்டு ஹோட்டல்கள் இருந்தது இந்த நேரத்தில் அங்க நல்லாருக்கும் இங்க நல்லாருக்கும்'னு பட்டிமன்றமா வைக்க முடியும் இடது பக்கமுள்ள ஹோட்டலுக்கு போய் சிக்கன் பிரியாணி ஆர்டர் பன்னிட்டு உட்கார்ந்திருந்ததில் மூன்று நிமிஷத்தில் வந்தது சி.பி.... வெயிலோட அருமை நிழல்'ல தான் தெரியும்ங்கிறமாதிரி பசியோட அருமை சிக்கன் லெக் பீஸில் தெரிந்தது எனக்கு. நல்லா சாப்பிட்டுவிட்டு முடியும் தருவாயில் 'ஏலக்காய்' என்ற வஸ்து உள்ளே போனது தெரியாமல் வாய்க்கு வந்த வேகத்தில் கடித்துவிட்டேன் ருசியாய் சாப்பிட்ட ஒட்டுமொத்த சுவையுணர்வும் 'ஹோல்சேலாவே' என் வாயைவிட்டு பறந்துவிட்டது..அந்த சம்பவத்திலிருந்து எந்த பிரியாணி சாப்பிட்டாலும் பிரித்தெடுத்தல் பணி? முடிஞ்சதும் தான் சாப்பாடு கோஸ் டூ வாய்..
ஏலக்காய் மணத்திற்குதான் பிரியாணியில் போடுவதாக அந்த சர்வர் சொல்ல கேள்விப்பட்டேன். ங்கொய்யால அப்ப என்ன எழவுக்குடா கசக்குதுன்னு கேட்க மறந்துட்டேன்.. நீங்களாவது சொல்லுங்களேன்.
அலுவலகத்தில் பிலிப்பைனியின் மொபைலில் 'ஜெய்ஹோ' பாட்டு ஓடிக்கொண்டிருந்தது..பெருமை தாங்கல எனக்கு தமிழன் ரஹ்மான் போட்ட பாட்டை உலகெங்கிலும் கேட்கப்படுவதே அதற்குக் காரணம்.அந்த பாட்டு ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் என் அலுவலகத்திலிருந்து மலையாளி ரஹ்மானை பற்றி ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தான் பிலிப்பைனிகளிடம்.. எல்லாத்தையும் சொன்னவன் கடைசியில் ரஹ்மான் ஒரு மலையாளி'ன்னு சொல்லிட்டான் எனக்கு வீரம் வந்து 'அவன் பொய் சொல்றான் ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளி இல்லை அவன் ஒரு இந்தியன் அப்படின்னு சொன்னேன் மலையாளிக்கு பேச் மூச் இல்லை..யாருகிட்ட...
இப்ப உதாரணமா என்கிட்ட வந்து ஒருத்தர் 'Where Are From?' அப்படின்னு கேட்டால் நான் இந்தியா'ன்னு சொல்வேன் ஆனா மளி(ஷார்ட் பார்ம்)மட்டும் 'ஐ ம் ஃப்ரம் கேரளா' அப்படின்னு சொல்வார்கள்.அப்படி என்னய்யா ஊர் பாசம்..ஊர் பாசம்தான் ஆனா ஒரு பய ஊரில் இருக்கிறதில்லை..
ஜோடி நம்பர் 2 சீசன் அப்படின்ற மாதிரி மீனவர்களை அடிக்கும் அடுத்த சீசனை பக்கத்து நாட்டு கடற்படை வெற்றிக்கரமாக துவங்கிவிட்டது. மீனவர்கள் போறதும், அடிவாங்கிறதும் சில சமயம் உயிரே போறதும் வெல்டன்... நடத்துங்க.ஐயாகிட்ட போய் முறையிடுங்க உடனே கடிதம் எழுதலாம் எழுதனும் போன உயிர்களைவிட எழுதின கடிதம்தான் ஜாஸ்தி...
வங்ககடலில் இப்ப உருவாகியுள்ள புயலுக்கு 'ஜல்' ன்னு பெயர் வைத்திருக்கிறார்கள். பெயர் வைக்கிறதுல்ல நம்மாட்களை அடிச்சிக்க அடிச்சிக்க ஆளே இல்லை.டிவியில ரமணன் வந்தாலே வீட்டுபிள்ளைங்களுக்கு கொண்டாட்டம்தான் கிட்டத்தட்ட நியூஸ் ரீடராக மாறிவிட்ட அவர் மழை அடிக்கும்'னு சொன்னாலே பள்ளிகளுக்கு திண்டுக்கல் பூட்டுதான்..பாவம் ஆந்திர & ஒரிசா மக்கள் இங்க அடிக்கும்னு சொன்ன அங்கதான் அடிக்கும் என்ன கொடுமை சரவணா..
41 வம்புகள்:
ஜல் புயலின் ஆட்டம் தொடங்கிவிட்டது .. அருமையாக தாண்டவம் ஆடிக் கொண்ண்டு உள்ளது இர்ஷாத்
ஜல்லு வேலயக் காமிக்குது இர்ஷாத் - அப்புறம் ஏலக்கா மணக்குதுன்னு சொன்னா மூக்குக்கு அது - வாயிலே போட்டா என்ன பண்றது ......கசக்கத்தான் செய்யும். நல்லாருக்கு நல்வாழ்த்துகள் இர்ஷாத் நட்புடன் சீனா
ஒரு சிலர் சாப்பாட்டிலிருந்து கடுகையே பிரிச்சு எடுக்கிறாங்க... ஏலக்காய் எடுக்கிறதெல்லாம் பெரிய விசயமா..!!!
@@@
உங்கள் கோபம் நியாமானது தான் நண்பரே... வர வர இவர்கள் பண்ணும் அலும்பு தாங்க முடியல.. கேட்டா கேரளா.. தெய்வத்தோட சொந்தம் நாடாம்...
இந்த புயலுக்கேல்லாம் யாரு பேரூ வைக்கிறது!!!!
ஏலக்்் ்டஎ்்
elkkaaya eduthu poddddu sapdanu
mm A.R,rahman hi aikiraan thamizan
ம்ம்ம் பிரியாணி ஆசையை கிளப்பிட்டீங்க,,,,
//ஏலக்காய் மணத்திற்குதான் பிரியாணியில் போடுவதாக//
இது தெரியாதா உங்களுக்கு நாம 'உனக்கு எனக்கு எனப் போடும் நிஜாம் பாக்கு மாதிரி வெறும் 'ஏலக்காயைவே' மெல்லுறவங்களப் பாத்திருக்கேன். உங்கள மாதிரித்தான் என் நண்பன், இது என்னவோ 'ஆண்மைக்கு'ப் பங்கம் விளைவிக்கும் என்று கேள்விப்பட்டு ஏலக்காய் வாயில் பட்டால் போதும்,
மூஞ்சி இஞ்சி தின்ன குரங்காய் மாறிவிடும் :)
ஷொட்டு:)
அருமை சகோதரரே....நகைச்சுவையும் நக்கலும் கலந்த நோட்டீஸ் நீங்கள் ஒட்டி இருப்பது....எலக்காய் ரொம்ப கெடுதலை பிடித்தது (நாம எப்பவும் கவனம் தான் ) எப்போதும் கடைசி வாய் சோறுக்குவந்து சாப்பிட்ட சுவையையேல்லாம் பாழ்படுத்திவிடும்
//அவன் ஒரு இந்தியன் அப்படின்னு சொன்னேன் மலையாளிக்கு பேச் மூச் இல்லை..யாருகிட்ட...//
கலக்கிட்டீங்க நண்பா!
//'ஐ ம் ஃப்ரம் கேரளா' அப்படின்னு சொல்வார்கள்.அப்படி என்னய்யா ஊர் பாசம்..ஊர் பாசம்தான் ஆனா ஒரு பய ஊரில் இருக்கிறதில்லை//
குத்துங்க எஜமான்..குத்துங்க..இந்த மலையாளிங்களே இப்படித்தான்....
ஆமாம் இர்ஷா இந்த மல்லு பண்ற லொள்ளு தானகவே முடியல....
ஒவ்வொரு சம்பவத்தையும் நறுக்கென்று நாலு வரிகளில் சொல்லி அசத்திவிட்டீர்கள்.
ஒவ்வொன்றும் அருமை.
ஏலக்காய் கடிபட்டா கொடுமைதான் :)
அலுவலகத்தில இருக்கிற கேரளாக்காரர் 15 நாட்கள் அவரச விடுமுறை கேட்டார் சொன்ன காரணம் ஊரில் யாருமே இல்லையாம் உதவிக்கு !
இரண்டு நாட்கள் கழித்து ஒரு மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய தருனம் வந்தது அங்கே என்னுடைய கார்டை கொடுத்ததும் அதனைப் பார்த்த அந்தச் செவிலி சரியான உபசரிப்பு..
" " கம்பெனிலா பணி ? அவடதானே மை ஹஸ்பண்டுக்கு பணி" அங்கேதான் வேலை செய்கிறார்னு சொன்னார், யாருன்னு கேட்டதும் அந்த விடுமுறை பார்ட்டி பெயரைச் சொன்னார் அந்த செவிலி
உடனே நான் "நீங்க போகலையா" ன்னு கேட்டேன்
"எவடே" என்றார்
"ஊருக்குத்தான்"
"சேட்டன் நாட்டுக்கு போயிட்டுல்ல"
"எவட போயி அயாலு?
"பெங்களூரு"ன்னு பரஞ்சதும்
"அதுசரி மற்ற பெண்ணு கானாம் போயில்ல மேரேஜுக்கு" சொன்னதும் முகத்துல ஈயாடல..
நல்ல தொகுப்பு. ஜெய்ஹோ:)!
//ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளி இல்லை அவன் ஒரு இந்தியன் அப்படின்னு சொன்னேன் மலையாளிக்கு பேச் மூச் இல்லை..யாருகிட்ட...//
அப்படி போடுங்க பாஸ்! :)
ரமணன் பத்தி சொன்னது ரொம்ப உண்மைங்க..:) அவரு வாயத்தொறந்தாலே கொட்டோ கொட்டுன்னு கொட்டுது..
ரமணன் பத்தி சொன்னது ரொம்ப உண்மைங்க..:) அவரு வாயத்தொறந்தாலே கொட்டோ கொட்டுன்னு கொட்டுது..
Nice
இர்ஷாத் சுவராஸ்யமா சொல்றீங்க அருமையான தொகுப்பு.
இர்ஷாத்...இதுக்கெல்லாம் கோபப்படாம தன்மையா எடுத்துச் சொல்லணும்.ஏலக்காய் வாசனை கூடினாலும் சரில்லத்தான் !
அருமை...
Back to form Irshaadh...!
மின்னுவதெல்லாம் பொன்னல்ல; மணப்பதெல்லாம் இனிப்பல்லன்னு ஏலக்காய் பாடம் கத்துக் கொடுத்துச்சாக்கும்!!
மலையாளிகளில் ஒரே ஒரு நல்லவர்கூட உங்க கண்ணில படலையாக்கும் இதுவரைக்கும்!!
மசாலா நல்லாருக்கு :)
irshath rocks again :))))))
இர்ஷாத் சுவாரஸ்யமா இருக்கு
பாவம் ஆந்திர & ஒரிசா மக்கள் இங்க அடிக்கும்னு சொன்ன அங்கதான் அடிக்கும் என்ன கொடுமை சரவணா..
கொடுமை தான் ஹா ஹா
ஏழைக்காய் பணக்காரக்காய் எல்லாம் நமக்கு தெரியாதுங்னா. நாம நடுத்தர வர்க்கமுங்க. நீங்க பதிவ அருமையா எழுதி இருந்தீங்கா. பார்க்க படிக்க ஹீ.. ஹீ.. நல்ல இருந்ததுங்க!!
ரமணன் பேச்சைக் கேட்டு என்றைக்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கிறார்களோ, அன்றெல்லாம் பெய்யும் மழை நின்று விடுகிறது கவனித்தீர்களா!
ரமணன் வந்து மழை பெய்யும் என்று அறிவிப்பு கொடுப்பார்.ஆனால் மழை பெய்யாது.பிள்ளைகளுக்கு கொண்ட்டாட்டமா போச்சு.பெற்றோர்களுக்கு திண்டாட்டமாக போச்சு.
சீனா ஐயா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ஆஹா சரியான விளக்கம்..ரைட்டு..)
வெறும்பய@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிவா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி( தெரியல சிவா)
கார்த்திக்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Jaleela Kamal @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தமிழரசி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அரபுத்தமிழன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாலா சார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Yasir@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமினா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ZAKIR HUSSAIN@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(குத்திருவோம்)
சீமான்கனி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அபுல் பசர்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சுசிஅக்கா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அபுஇபுறாஹிம் @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(சரியாப் போச்சு போங்க...)
ராமலக்ஷ்மி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Balaji saravana@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முத்துலெட்சுமி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சசிகுமார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Kanmani@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹேமா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(கோபமெல்லாம் இல்லை ஹேமா..)
ஸ்ரீராம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹுஸைனம்மா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(இன்னும் படலைங்கோ..)
நேசமித்ரன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Mc karthy @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
r.v.saravanan@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்துல் காதர்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ஏழைக்கும் ஏலக்காய்க்கும் முடிச்சு போட்ட ஓரே ஆளு நீங்கதாங்க..ஹைய்யோ ஹைய்யோ..)
சென்னை பித்தன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ம் சில நேரங்களில்..)
ஸாதிகா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்படி என்னய்யா ஊர் பாசம்..ஊர் பாசம்தான் ஆனா ஒரு பய ஊரில் இருக்கிறதில்லை..//
ஹாஹாஹா உண்மை..
ஆமா ஏன் ஏலக்காய் சனியன் கசந்து ருசியை கெடுக்குது..:))
Post a Comment