ஹாட்மெயிலும் குழாயடியும்..


கையில் குடையோடு
முகத்தில் வாஞ்சையோடு
சைக்கிள் பில்லை
அடித்துக் கொண்டே
தபால் என்றழைக்கும்
தபால்காரரிடம் இருக்கும்
உயிர்ப்பு யாஹீவிடமோ
ஹாட்மெயிலிடமோ இருப்பதில்லை.


ஆறாயிரத்துக்கு புடவை
எடுத்துக் கொண்டு
வரும் வழியில்
அஞ்சு ரூபாய்
காய்கறிக்கு பேரம்
பேசுபவர்களை காணும்போது
கத்திரிக்காய்க்கும் மேக்கப் போடு
என்று சொல்ல தோன்றுகிறது
காய்கறிகாரரிடம்.


நதிநீர்
விஷயங்களை பேசும்
கணவரை ஆச்சரியமாக
பார்க்கிறாள் குழாயடியில்
சண்டைப் போட்டு
தன் பங்கு நீரை
குடத்தில் கொண்டு
வரும் மனைவி..


Post Comment

41 வம்புகள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் !

இந்த தபால் காரர் எதனையும் ஜங்க் மெயிலாக்குவதுல்லை !

Unknown said...

மூன்று கவிதைகளும் முத்தாய்ப்பு ,,,

அரபுத்தமிழன் said...

முதல் ரெண்டும் சூப்பரப்பூ.

Shameed said...

இப்போது எல்லாம் போஸ்ட் ஆபீஸ்சுக்கு ஜங்க் மெயில் இருக்குதோ இல்லையோ தெரியவில்லை? ஆனால் சங்கு ஊதியாச்சி என்பது உண்மை.

சாந்தி மாரியப்பன் said...

முதலாவது உணர்ச்சிகரம் என்றால் கடைசி ரெண்டும் நங்குன்னு குட்டு வெச்சமாதிரி இருக்கு :-))

சசிகுமார் said...

அருமை நண்பரே மூன்று கவிதையும் தூள் அதிலும் இந்த கத்தரிக்காய் மேக்கப் சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//தபால் என்றழைக்கும்
தபால்காரரிடம் இருக்கும்
உயிர்ப்பு யாஹீவிடமோ
ஹாட்மெயிலிடமோ இருப்பதில்லை.//

உண்மை உண்மை.

Anonymous said...

நல்லாருக்கு பாஸ்!
ரொம்ப உணர்ச்சிவசத்துல இருக்கிற மாதிரி இருக்கு.. உண்மையா?

Thenammai Lakshmanan said...

ஃபர்ஸ்டும் தேர்டும் சூப்பரோ சூப்பர் அஹமத்..:))

அப்துல்மாலிக் said...

உயிர்ப்பு யாஹீவிடமோ
ஹாட்மெயிலிடமோ இருப்பதில்லை./

செத்துப்போச்சுனே சொல்லலாம்

அருமை இர்ஷாத்

ZAKIR HUSSAIN said...

போட்டோவும் கவிதையும் ஒரு பூச்சரம் போல் தொகுக்கப்பட்டிருக்கிறது. இயற்கையை விரும்பும் உங்களைப்போல் உள்ளவர்களால்தான் இதுவெல்லாம் சாத்தியம்.

r.v.saravanan said...

முதல் இரண்டும் அசத்தல் இர்ஷாத்

vasu balaji said...

அடேங்கப்பா. டாப்பு

Chitra said...

முத்தான கவிதைகள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மூன்று புகைப்படங்களும் மிக அருமை இர்ஷாத்!
(அதாவது மூன்று புகைப்படங்களுக்கான
கவிதைகளும் அருமை என்று சொல்ல
வந்தேன்.)

குட்டிப்பையா|Kutipaiya said...

இரண்டாவது கவிதை நிதர்சனம்!
நல்லா இருக்கு!

Mugundan | முகுந்தன் said...

இர்சாத்,

'நச்" கவிதைகள்.

ஆனா அந்த தபால்காரர் புகைப்படம் பத்து வருசத்துக்கு முன்னாடி எடுத்ததா?

இப்ப தபால்காரர் எடுத்துவருவது தொலைபேசி
கட்டண அறிவிப்பும்,வங்கியின் கட்டாத "லோனுக்கான‌"
எச்சரிக்கை கடிதமுமே!

இமா க்றிஸ் said...

கவிதைகள் அசத்தல் இர்ஷாத்.

ஹேமா said...

ஒன்றுக்கொன்று குறையில்லாமல் மூன்றுமே தத்துவம் சொல்கிறது இர்ஷாத் !

Unknown said...

//ஆறாயிரத்துக்கு புடவை
எடுத்துக் கொண்டு
வரும் வழியில்
அஞ்சு ரூபாய்
காய்கறிக்கு பேரம்
பேசுபவர்களை காணும்போது
கத்திரிக்காய்க்கும் மேக்கப் போடு
என்று சொல்ல தோன்றுகிறது
காய்கறிகாரரிடம்.//

கவிதை அருமையாக இருக்கிறது..

நாடோடி said...

மூன்று க‌விதையும் ரெம்ப‌ ந‌ல்லா இருக்கு இர்ஷாத்.

Yasir said...

அருமையான கவிதைகள் சகோதரரே

"உழவன்" "Uzhavan" said...

அருமையான வரிகள்

ஸ்ரீராம். said...

மூன்று கவிதையுமே சூப்பர். தபால்காரரைப் பற்றி சொல்லி பழைய இன்லேன்ட், கார்ட் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்

சீமான்கனி said...

//தபால் என்றழைக்கும்
தபால்காரரிடம் இருக்கும்
உயிர்ப்பு யாஹீவிடமோ
ஹாட்மெயிலிடமோ இருப்பதில்லை.//

ரசனை வரிகள் ரசித்தேன் இர்ஷா..வாழ்த்துகள்...

ஜெயந்தி said...

சூப்பர்ப்பா. மூணு கவிதையும் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்லை.

ஹுஸைனம்மா said...

முதலும் கடைசியும் அருமை; ரெண்டாவதும் நல்லாருக்கு; கொஞ்சமா செயற்கையா இருக்கு.

ஜெய்லானி said...

நல்ல கவிதை வரிகள்..!!

Ahamed irshad said...

வாங்க அபூஇபுறாகிம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கே.ஆர்.பி.செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அரபுத்தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க Shahulhameed வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க ராமலக்ஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க Balaji saravana வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அப்படியும் இருக்கலாம் பாஸ்)


வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க அப்துல்மாலிக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ZAKIR HUSSAIN வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க Saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க NIZAMUDEEN வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க kutipaiya வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எண்ணத்துப்பூச்சி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க Menagasathia வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஜிஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க Yasir வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க உழவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜெயந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்
மூன்றுமே ( கவிதைகளும் படங்களும் ) சூப்பர் - நச்சுன்னு இருக்கு - தபால், பேரம், நதி நீர் அனைத்துமே அருமை
நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

ஸாதிகா said...

//கையில் குடையோடு
முகத்தில் வாஞ்சையோடு
சைக்கிள் பில்லை
அடித்துக் கொண்டே
தபால் என்றழைக்கும்
தபால்காரரிடம் இருக்கும்
உயிர்ப்பு யாஹீவிடமோ
ஹாட்மெயிலிடமோ இருப்பதில்லை.

//உண்மை வரிகள் இர்ஷாத் படங்களை எங்கு பிடித்தீர்கள் இர்ஷாத்?

வார்த்தை said...

மூணாவது "நச்".
என்னபண்றது கணவன் மனைவி ரெண்டு பேருமே மல்லுகட்டவேண்டியுள்ளது; மனைவி தனது பக்கத்து வீட்டு பெண்களிடமும், கணவன் தனது பக்கத்து மாநிலகாரருடனும்.‌

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates