இன்டர்வியூம் திருட்டு முழியும்..


'அம்மா சீக்கிரம் இட்லிய வைம்மா' சரவணன் கத்தினான்.

'இருடா இட்லி வேகவேண்டாமா எப்ப பாரு கால்ல றெக்கை'ய கட்டிகிட்டு'

'சகுந்தலா இன்னைக்கு அவனுக்கு இன்டர்வியூ சீக்கிரம் வை' ஈஸிச்சேரிலிருந்து அப்பா சுந்தரம்.

சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இன்டர்வியூ.. பேருந்துக்காக நிற்கயில் எதிர்த்தாப்பில் அவன் காதலிக்கும் ப்ரியா ரோட்டைக் க்ராஸ் பன்னுகையில் அவள் பின்னால் வந்த கார் அவள் மீது மோதியதில் கிழே விழுந்தாள்.

காரிலிருந்தவர் ப்ரியாவை நோக்கி 'ஐயம் சாரிம்மா' என்பதற்குள் சரவணன் வேகமாக போய் 

'யோவ் உனக்கு காரு இருந்தா யார் மேலேயும் மோதுவியா ங்கொய்யால அடிச்சேன்னா செத்துருவே'

'வேண்டாம் சரவணா விட்ரு என் மேலேயும் தவறு உண்டு'

'ம்ஹீம் நீ சும்மா இரு ப்ரியா இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது செருப்பால அடிக்கனும்'

'விடு விடு சரவணா வா போகலாம்'

வலுகட்டாயமாக நம்ம ஹீரோவை கூட்டிட்டுப் போனாள்.

"இதுல யாரு சரவணன்" ப்யூன் கூப்பிட,

'நாந்தாங்க'

'போங்க உள்ளே'

உள்ளே ங்கொய்யாலன்னு சொன்ன, செருப்பால் அடிப்பேன்னு சொன்ன, சும்மா விடக்கூடாதுன்னு சொன்ன, அடிச்சா செத்துருவேன்ன சொன்னவரு உயிருடன் மேனேஜராய்..............
#################################################

துணிக்கடையில்

1)ஏம்மா எவ்ளோ துணிதான் பார்ப்பே எதுவுமே உனக்கு மேட்சே இல்லமா'

(கணவனை பார்த்தபடி)'ஆமா ஆமா எதுவுமே எனக்கு மேட்சா இல்ல'



2)முன்பு ஜன்னலுக்கு முன்னாடி பெண்கள் இருப்பார்கள்
இப்ப பெண்களுக்கு பின்னாடி ஜன்னல் இருக்கிறது.

3)குழந்தை வளர்ப்புக்கு வெளிநாடுதான் உதாரணம்.நம்ம ஊரில் அடேயப்பா

'பாரு அப்பன மாதிரியே அதே திருட்டு முழி'

'சீக்கிரம் எழுந்திருக்கிறானா அப்பன மாதிரியே எட்டு மணி வரை தூங்குறதுன்னு' எல்லாத்துக்குமே அப்பன்'தான்..

(இந்த ஜோக்குகள் வழக்கம்போல் மதுரை முத்து சொன்னது)

Post Comment

50 வம்புகள்:

தூயவனின் அடிமை said...

சிறு கதை அருமையகம் உள்ளது.

நாடோடி said...

க‌தையும் ஜோக்கும் ந‌ல்லா இருந்த‌து இர்ஷாத்.

Riyas said...

நல்லாயிருக்குங்க..

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:)! ஜொக்ஸ் சரி. கதை உங்களுடையதுதானே?

vasu balaji said...

இதான் கலக்கல்.:)

Ahamed irshad said...

ராமலக்ஷ்மி said...
நல்ல பகிர்வு:)! ஜொக்ஸ் சரி. கதை உங்களுடையதுதானே?////


யாருமே என்ன நம்பமாட்டேங்கிறாங்க ஏன் இப்படி?

பத்மா said...

சரி சரி இர்ஷாத் கதை நீங்க தான் எழுதி இருக்கீங்க .ஒத்துகிட்டோம் .:))
நல்ல கலவை

Swengnr said...

அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!

சௌந்தர் said...

சூப்பர் நல்லாயிருக்கு...

ஸாதிகா said...

குட்டிக்கதை சூப்பர்.

எம் அப்துல் காதர் said...

//கதை உங்களுடையதுதானே?////

//யாருமே என்ன நம்பமாட்டேங்கிறாங்க ஏன் இப்படி?//

கதை உங்களுடையது சரி அக்செப்டட்... வசனம் யாருது?

கதைக்கு செலக்ட் செய்த படம் அருமை இர்ஷாத்!

வழக்கம் போலவே உங்கள் கதைக்கு ஒரு ஓட்டும், மதுரை முத்துவின் காமெடிக்கு ஒரு ஓட்டும், போட்டு விட்டு அபீட்..

Unknown said...

கதை மட்டும் எழுதுங்கள் அல்லது ஜோக் எழுதுங்கள்..

கதை நன்றாக இருக்கிறது, குமுதத்துக்கு அனுப்புகிறீர்களா?

Unknown said...

கதை மட்டும் எழுதுங்கள் அல்லது ஜோக் எழுதுங்கள்..

கதை நன்றாக இருக்கிறது, குமுதத்துக்கு அனுப்புகிறீர்களா?

Menaga Sathia said...

கதை சூப்பர்!!

Ahamed irshad said...

This comment has been removed by the author.

சாந்தி மாரியப்பன் said...

சிறுகதை அருமை.. சொந்தக்கதையோ :-)))

சீமான்கனி said...

இர்ஷா எந்த ''மண்டபம்'' பக்கமும் போகலை என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்...

இனிமேல் எந்த மண்டபம் பக்கமும் போக மாட்டார் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்...

ஜோக்ஸ் நல்லா இருக்கு இர்ஷா...வாழ்த்துகள்...

பனித்துளி சங்கர் said...

////////1)ஏம்மா எவ்ளோ துணிதான் பார்ப்பே எதுவுமே உனக்கு மேட்சே இல்லமா'

(கணவனை பார்த்தபடி)'ஆமா ஆமா எதுவுமே எனக்கு மேட்சா இல்ல'

/////


ஹா ஹா ஹா கலக்கல்

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா.... கதையும் படமும் நல்லா இருக்குங்க.....

அப்புறம்:
(இந்த ஜோக்குகள் வழக்கம்போல் மதுரை முத்து சொன்னது)
..... I heard that he collects all these jokes from old magazines. Is it true?

Madumitha said...

வேலை கிடைச்சுச்சா இல்லையா?
சிரிப்புகள் நன்று.

Mc karthy said...

கதை அருமை..ஆமா தலைப்பு வைக்கிறதுக்கு ரூம் போட்டு யோசிப்பிங்களோ...

Shameed said...

வலை தளத்தை கொஞ்சம் சரி செய்து கொடுங்களேன்

Ahamed irshad said...

shahulhameed said...
வலை தளத்தை கொஞ்சம் சரி செய்து கொடுங்களேன்///

சரி மெயில் பன்னுங்க..

sajjithas@gmail.com

ஹேமா said...

பிந்தி வந்திட்டேன்.
இர்ஷாத் மூஞ்சில குத்திடாதீங்க.

"எனக்கு எதுவுமே மேட்சா இல்ல"

எப்பத்தான் எதிலதான் திருப்தியா இருக்காங்கன்னு சொல்றீங்க !

Yasir said...

இர்ஷாத..கதை அருமை...பாரத மாதா தலையில் கை வேச்சு சொல்லுங்க...இதே மாதிரி பிரபு தேவா, ரோஜா நடித்த படத்தில் வேறு கருத்துள்ள சம்பவம் வரலேண்டு....சிரியஸ் இல்லா சிரிப்புகாதான்

ஜில்தண்ணி said...

குட்டிக் கதை பக்கா பக்கா
அது என்ன இனைப்பா ஒரு ஜோக்கு அதுவும் நல்லா இருக்கு

Asiya Omar said...

கதை கலக்கலாக இருக்கு.ஜோக்ஸ் நல்லாயிருக்கு.

ஸ்ரீராம். said...

கதை நல்லா இருக்கு...ஆனால் இதே ஸீன் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடித்த கதாநாயகன் படத்தில் இடம் பெற்றுள்ளதே...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//உள்ளே ங்கொய்யாலன்னு சொன்ன, செருப்பால் அடிப்பேன்னு சொன்ன, சும்மா விடக்கூடாதுன்னு சொன்ன, அடிச்சா செத்துருவேன்ன சொன்னவரு உயிருடன் மேனேஜராய்..............//

இதுக்கு தான் சும்மா சும்மா சவுண்ட் விடகூடாதுங்கறது....ஹி ஹி ஹி

//(கணவனை பார்த்தபடி)'ஆமா ஆமா எதுவுமே எனக்கு மேட்சா இல்ல'//
இது first க்ளாஸ் ... ஹா ஹா ஹா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மேலே சொன்னது கதையல்ல நிஜம், எனக்கும் இது மாதிரி அனுபவம், அவசரமா ஒரு மீட்டிங் போயிக்கிட்டிருந்தப்போ துபாயில் என் office பிரண்டு கார்ல பின்னடி ஒருத்தார் அவர் காரால இடிச்சிட்டாரு, நாணும் என் பிரண்டும் அவரை அடிக்காத குறையா போட்டு தாளிச்சி எடுத்திட்டோம், பிறகு இரண்டும் நாள் கழித்து ஒரு வியாபர விசையமா துபாய் அல் குஸ் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு போனால், நான் சந்திக்க வேண்டிய ஆள் SALES MANAGER பிரண்டு கார்ல இடிச்ச அதே ஆள்.ரோட்ல நடந்த விசைத்தை மனுசன் ஆப்பிஸ்ல காட்டல, ஆனா அந்த மனுசன் ரொம்ப நல்லவருங்க...

இன்டர்விவ் எடுத்தவர் என்ன செய்தாரோ... பாவம் சரவணன்..

எங்கள் அதிரை முத்து... கலக்கிக்கிட்டே இருக்காருங்கோ... வாழ்த்துக்கள் தம்பி இர்ஸாத்..

Mythees said...

கதை அருமையகம் உள்ளது வாழ்த்துகள் :)

கண்ணா.. said...

ஜோக்ஸ் கலெக்‌ஷன் அருமை

செண்டர் அலைன்னிற்கு பதில் லெப்ஃட் அலைன் பண்ணுங்கள் ஃபாண்ட் படிக்க வசதியாக இருக்கும்.

கதை கரு அருமை..

எல் கே said...

palaya sv sekar padam nyabgam varuthu thambi

Ahamed irshad said...

வாங்க இளம்தூயவன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ரியாஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க ராமலஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க வானம்பாடிகள் அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க பத்மா நீங்க ஒத்துக்கிட்டா சரிங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க Software Engineer உங்கள் பக்கத்துக்கு வந்து பார்க்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க சவுந்தர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ஸாதிகா அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க அப்துல் காதர்,ஏங்க வசனத்துக்கு வேற ஆளா போடமுடியும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க கேஆர்பி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமுதம் ஐடி உங்களிடம் இருந்தால் அனுப்புங்களேன்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க மேனகா அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க அமைதிச்சாரல் இது சொந்தகதையெல்லாம் இல்லீங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க சீமான்கனி அது என்னங்க 'மண்டபம்' உண்மையிலேயே எனக்கு புரியலை.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாங்க !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க சித்ரா ஆமா அதேதான் அவர் பழைய புத்தகங்களிலிருந்துதான் அந்த ஜோக்ஸையெல்லாம் எடுக்கிறாரு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஃபோட்டோவை பார்த்தும் இப்படி கேட்கிறீங்களே மது.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க சாகுல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ஹேமா நீங்க எப்ப வந்தாலும் வரவேற்புதான்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க யாசர் நீங்க எந்த படத்தை சொல்றீங்கன்னு புரியலை வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க ஜில்தண்ணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ஆசியாக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ஸ்ரீராம் கதாநாயகன் பட சி.டி ஒன்னு கத்தாருக்கு பார்சல் நானும் அதைப் பார்க்கனும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க தங்கமணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க ப்ரதர் தாஜீதீன் உங்களுக்கும் இந்த மாதிரி சம்பவம் நடந்துச்சா அது சரி.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க மைதீஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க கண்ணா நீங்க சொன்ன மாதிரியே அடுத்த பதிவ எழுதிடலாம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.


வாங்க எல்.கே முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Vijayashankar said...

:-)

மகேஷ் : ரசிகன் said...

// அப்படியே அப்பன் போல! //


:))))))))))))))))))))

Abu Khadijah said...

கலக்குங்க, நல்லா சிரித்தேன் :))))

அஷீதா said...

ha ha ha nice kutty kadhai :))

Ahamed irshad said...

வாங்க விஜய்சங்கர் வருகைக்கு மிக்க நன்றி...

நண்பா மகேஷ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க நண்பர் மன்சூர் முதல்) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாங்க அஷிதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Unknown said...

குட்டி கதை சூப்பர்

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates