நான் சொல்ல வந்தவை.....




புத்தகங்கள் படித்து
நான் கற்றதை
என் மகன் என் மூலம்
கற்று பெற்றான் கோப்பையை
பள்ளியில்.


ஆடம்பர உடை களைந்து
அழுக்கான ஆடையை
அணிந்தான் துணை நடிகன்.



அதீத ஆசையில் இனிப்பை
வாயில் வைத்து
சுவைக்கும் போது
சொல்லி வைத்தார்போல்
மறந்துவிடுகிறது சர்க்கரை வியாதி.



எதை சொல்லக்கூடாதென்று நான்
நினைப்பது தங்கு தடையின்றி சொல்ல
வேண்டிய இடத்திற்கு சென்று விடுகிறது
இதை சொல்லனும் என்று நினைப்பதை
எவ்வளவோ முயற்சி செய்தும்
சொல்ல முடியவில்லை.



Post Comment

17 வம்புகள்:

malar said...

ஓட்டு பட்டை இல்லை..அதை சேருங்கள்....

Ahamed irshad said...

சேர்த்துவிட்டேன்.நன்றி மலர்

திவ்யாஹரி said...

ஓட்டு பட்டையில் submit கொடுங்க நண்பா.. கவிதை ரொம்ப நல்லா இருக்கு

க.பாலாசி said...

//அதீத ஆசையில் இனிப்பை
வாயில் வைத்து
சுவைக்கும் போது
சொல்லி வைத்தார்போல்
மறந்துவிடுகிறது சர்க்கரை வியாதி.*//

உண்மைங்க... தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்துக்கள்....

அஷீதா said...

எதை சொல்லக்கூடாதென்று நான்
நினைப்பது தங்கு தடையின்றி சொல்ல
வேண்டிய இடத்திற்கு சென்று விடுகிறது
இதை சொல்லனும் என்று நினைப்பதை
எவ்வளவோ முயற்சி செய்தும்
சொல்ல முடியவில்லை.//

manidha iyalbu dhaane...

nanraaga irukiradhu ungal kavidhaigal.

Priya said...

மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!

Ahamed irshad said...

ஓட்டு பட்டையில் submit கொடுத்தாச்சு திவ்யாஹரி.உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

க.பாலாசி உங்கள் வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி.

அஷீதா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

உங்கள் வருகைக்கு நன்றி ப்ரியா.

வெங்கட் said...

அஹமத்..
கவிதைகள் அருமை..,!
முதல் கவிதை அப்படியே
என் அனுபவம்..,

ஒரு சின்ன Suggestion..,
இப்படி கலர்., கலராக
கவிதைகளை போடுவதை
விட ஒரே கலரில்
லதா Font use செய்தால்
Simple-ஆக பார்க்க நன்றாக
இருக்கும்..
முக்கியமாக Avoid
Red, Parrot Green Colors.

Ahamed irshad said...

நல்லது வெங்கட் அடுத்த முறை அவ்வாறு நடைமுறைப்படுத்துறேன். உங்கள் வருகைக்கு நன்றி.

மதுரை சரவணன் said...

சர்க்கரை கவிதை இனிக்கிறது. வாழ்த்துக்கள்

Ahamed irshad said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சரவணன்

Chitra said...

எதை சொல்லக்கூடாதென்று நான்
நினைப்பது தங்கு தடையின்றி சொல்ல
வேண்டிய இடத்திற்கு சென்று விடுகிறது
இதை சொல்லனும் என்று நினைப்பதை
எவ்வளவோ முயற்சி செய்தும்
சொல்ல முடியவில்லை.

...... இது பலருக்கும் ஏற்படும் அனுபவம். அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

Ahamed irshad said...

வாங்க சித்ரா வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

இராகவன் நைஜிரியா said...

// அதீத ஆசையில் இனிப்பை
வாயில் வைத்து
சுவைக்கும் போது
சொல்லி வைத்தார்போல்
மறந்துவிடுகிறது சர்க்கரை வியாதி.//

இதுக்குப் பேரு செலக்டிவ் அம்னீஷியா.

எல்லாம் சரிங்க ... இந்த அதிரையில் இருந்து வந்தாலே கலக்குவீங்களா?

Ahamed irshad said...

வருகைக்கு ரொம்ப நன்றி இராகவன் நைஜிரியா...

//இந்த அதிரையில் இருந்து வந்தாலே கலக்குவீங்களா?//

கமல் பாணியில சொன்னா "அது என்ன மாயமோ தெரியல"

cheena (சீனா) said...

ஆகா அஹமது

கவிதைகள் அருமை

நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates