Showing posts with label மீள்ப‌திவு. Show all posts
Showing posts with label மீள்ப‌திவு. Show all posts

Haste Makes Waste...

Thanks to Google For Pic. 


'அம்மா நாம போற வழியில என் கொலுச கொடுத்துட்டு வேற மாத்திரலாமா'

'அதுக்கெல்லாம் நேரம் கிடைக்குமான்னு யோசிச்சுப்பாரு பேங்க்ல எவ்வளவு கூட்டமோ அதெல்லாம் முடியாது இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்'

'ஏம்மா புலம்புற அதெல்லாம் சீக்கிரம் பேங்க் வேலையை முடிச்சிட்டு கொலுசு கடைக்கு போயிறலாம்'

'அதெல்லாம் வேண்டாம் சொன்னாக் கேளு உனக்காக நாளைக்கு வேணாப் போய்க்கலாம்'

 'அப்ப கண்டிப்பா நீ நாளைக்கு வரனும்மா'

 'சரி சரி நீ கெளம்புற வேலையைப் பாரு உன் அப்பா இன்னிக்கே எடுக்க சொல்லியிருக்காரு'

 'இதோ ரெண்டு நிமிஷத்துலேயே வந்துடுறேன்' ரெண்டு நிமிஷம் ஐந்து நிமிஷமானது.

 வெளிநாட்டிலிருக்கிற அப்பா செல்வராஜ் அனுப்பிய பணத்தை எடுக்க சுந்தரியும்,    வெண்ணிலாவும் கிளம்பினார்கள்.

 'அம்மா ஆட்டோ பிடிக்கலாம்மா எனக்கு ரொம்ப தூரம் நடக்க முடியாது'

  'சரி புலம்பாதே அந்த பஸ் ஸ்டாப்புல போய் ஆட்டோவ பிடிக்கலாம் வா'

 கொஞ்ச தூரத்திலிருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து அதை அடைந்தார்கள்.

ஆட்டோக்காரரிடம் பேரம் பேசவும்,ஆட்டோ பேங்கை அடையவும் இருபது நிமிடங்கள் கழன்டு ஓடியிருந்தன.

சொல்லி வைத்ததற்கேற்ப பேங்கில் மாநாடு போல் இருந்தது கூட்டம்.

ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே போன அதே நேரம்.....

வெண்ணிலா கொலுசைப் போட்டுக் கொண்டு வந்த துணிப்பையும்,

சுந்தரி செக், பாங்க் பாஸ்புக் போட்டு வைத்திருந்த அதே மாதிரியான 

துணிப்பையும் இடம்மாறி செக் உள்ள பை அலமாரிக்கு பக்கத்திலுள்ள ஆணியில் 

ரொம்ப 'பத்திரமாய்' தொங்கிக் கொண்டிருந்தது...


Post Comment

MOTOROLA L6..

Kumbakonam Bus Stand..
 --

சென்னை செல்வதற்காக பட்டுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் ஏறினேன்.நல்ல குஷன் பேக் சிஸ்டெமெல்லாம் இருந்து டிவியில் கார்த்திக்கும் அவரது நண்பர்களும் ஏதோ பாடிக் கொண்டிருந்தார்கள். ஜன்னலோர சீட் வாய்த்ததால் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.அரை மணி நேரத்தில் வண்டி கிளம்பியது. கிளைமேட் வேற நல்லா இருந்ததால் அந்தப் பேருந்தில் போவது ஏதோ ஒரு மகிழ்ச்சியை தந்தது. சில்லென்ற காற்று முகத்தில் அறைந்துக்கொண்டே இருந்தது வாங்கிய அறையெல்லாம் போதும் என்ற நிலையில் ஜன்னலை மூடிவிட்டேன்...வண்டி கிளம்பிய கால் மணி நேரத்தில் பக்கத்திலிருந்தவர் தூங்கிவிட்டார்!!! எப்படித்தான் சில பேருக்கு உடனேயே தூக்கம் வருகிறது என்பதை யாராவது பி.ஹெச்.டி செய்தால் நலம். குறட்டை,தோள்'ல சாய்றது போன்ற தொந்தரவு இல்லாத‌து என் பாக்கியம்.மதுக்கூர்,மன்னார்குடி,வலங்கைமான் வழியாக கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்வதற்குள் மூணு மணி நேரம் அவுட்'டாகியிருந்தது.பத்து நிமிஷம் வண்டி நிற்கும் என கண்டக்டர் திருவாய் மலர்ந்ததால் நான் கீழே இறங்கி வாழைப்பழமும்,வாட்டர் பாட்டிலும் வாங்கிவிட்டு என் சீட்டிற்கு வந்துவிட்டேன்.நான் சீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த ஒருவன் பதற்றத்துடன் 'சார் உங்க மொபைலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுக்கமுடியுமா அவசரம் சார் என் ஃப்ரெண்டுக்கு அடிப்பட்ருச்சு ப்ளீஸ் சார்'   நமக்குதான் இரக்க குணமாச்சே!' சரி நம்பரை குடுங்க என்றேன்.. இதோ தர்றேன் என்றவன் ' குடுங்க சார் நான் அடிக்கிறேன் என்றவனை நம்பி மொபைலைக் கொடுத்ததும், 'ஹலோ ஹலோ ஹலோ'ன்னு அவன் பேசியபடியே பஸ்ஸீக்கு பின்னாடி போனதும் எனக்கு பொறி தட்டியது, ஆஹா ஏதோ தில்லுமுல்லுன்னு நினைத்து பஸ்ஸை விட்டு இறங்கி தேடினேன் P.T. உஷாவுக்கு கும்பகோணத்துல ரசிகர் மன்றம்? வெச்சிருப்பான் போல, மின்னல் மாதிரி பறந்துட்டான்.. என்ன பண்றதுன்னே தெரியல,என் கவனக்குறைவுக்கு அது சாட்டையடி என நினைத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் வாங்கி கொண்டார்கள்.அங்கே என்னோடு இன்னொருத்தரும் நின்றிருந்தார் அவரது பெட்டியை எவனோ ஆட்டைய போட்டுட்டானாம்.. நல்லவேளை நான் பெட்டி கொண்டு வரவில்லை..அந்த சம்பவத்திலிருந்து அறிமுகமில்லாதவர் யாரும் ஏதும் கேட்டால் அந்த இடத்தில் நான் "பே பே பே' தான்..

Post Comment

ச‌ந்தோஷ‌மும் வாழ்க்கையும்...

Thanks For Photo : Vivek 

"என்னா சாலாட்சி நாலஞ்சி நாளா எங்கே போனே?"

"இல்லம்மா வுட்டுக்காரருக்கு உடம்பு சரியில்ல அதான் வரமுடியல" 

"என்னா பண்ணுது?" 

"காய்ச்சதான் எப்பவும் ஒன்னு ரெண்டு நாள்'ல எந்திருச்சி ஆட்டோவ எடுத்துட்டு வேலக்கி போவாரு' இந்த வாட்டி நாலு நாளா எந்திரிக்கக்கூட முடியல"

 "டாக்ட்ரு என்னா சொன்னாரு"?     

"காய்ச்சதான், மாத்தர,சிவப்பு டப்பி எல்லாம் எலுதி தந்தாரு முன்னூறு ரூவா செலவாச்சி"   

"சரிம்மா உன் வுட்டுக்காரரு போனு கீனு பன்னாரா?"           

"நேத்துதான் பண்ணாங்க,வெளிநாடு முன்னமாதிரி இல்லயாம் சம்பளம் கொறவு வேல அதிகமுன்னு சொன்னாரு"

"ஆமா சில்லுதெரு பாய்வீட்டம்மாக்கூட அப்படித்தான் சொன்னிச்சு"

"பொண்டாட்டி புள்ள எல்லாத்தயும் விட்டுபுட்டு எப்பிடிமா உன்ற வுட்டுக்காரரெல்லாம் இருக்காங்க?"

"என்னா செய்றது வாழனுமே அதுக்கு வழி வெளிநாடுதானே,அவரு இங்க இருந்து நாலு காசு சம்பாரிச்சாலும் மிஞ்சுமா?"

"இல்லம்மா என்னதான் புள்ள கான்வன்டு'ல படிக்க வச்சாலும் புருசன் பொண்டாட்டி புள்ள எல்லாரும் ஒன்னா இருந்தா அதுல  கெடக்கிற சந்தோசம் என்ன வெல கொடுத்தாலும் வருமா"

"வராதுதான் என்னா பன்றது?"

"இல்லமா கூலோ கஞ்சியோ குடிச்சாலும் புள்ள புருசனோட சந்தோசமாத்தான் இருக்கிறேன்.ஆனா சமூவம் எங்கல அன்டாடங்காச்சியாத்தான் பார்க்குது"

"ஆமா அதானே உண்மை"

இரும்மா,ஆனா உன்னய உயர்வாத்தான் பார்க்குது ஏன்னா உன் வுட்டுக்காரரு வெளிநாட்'ல இருக்கிறது நால"

"இப்ப நீ என்ன சொல்ல வர்றே?"

"ஏம்மா ஆத்திரப்படுறே,நாம வசதியாயிருந்த மதிக்கிற சமூவம் சூல்நில மாறினாலோ,இல்ல நம்ம வசதிப்படி வால நெனச்சாலோ மிதிக்குது. அதத்தான் சொன்னேன். அழுவையோ,சிரிப்போ எல்லாத்தையும் அவர்ட்டதான் சொல்வேன்,ஆனா உனக்கு போனுதான் எல்லாமே. சமூவத்துக்காக சந்தோசத்த வித்துட்டு நிக்கிறம்மா நீ..'

'நான் வரேன்மா...'


Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates