Showing posts with label புனைவு சிறுகதை. Show all posts
Showing posts with label புனைவு சிறுகதை. Show all posts

இன்டர்வியூம் திருட்டு முழியும்..


'அம்மா சீக்கிரம் இட்லிய வைம்மா' சரவணன் கத்தினான்.

'இருடா இட்லி வேகவேண்டாமா எப்ப பாரு கால்ல றெக்கை'ய கட்டிகிட்டு'

'சகுந்தலா இன்னைக்கு அவனுக்கு இன்டர்வியூ சீக்கிரம் வை' ஈஸிச்சேரிலிருந்து அப்பா சுந்தரம்.

சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இன்டர்வியூ.. பேருந்துக்காக நிற்கயில் எதிர்த்தாப்பில் அவன் காதலிக்கும் ப்ரியா ரோட்டைக் க்ராஸ் பன்னுகையில் அவள் பின்னால் வந்த கார் அவள் மீது மோதியதில் கிழே விழுந்தாள்.

காரிலிருந்தவர் ப்ரியாவை நோக்கி 'ஐயம் சாரிம்மா' என்பதற்குள் சரவணன் வேகமாக போய் 

'யோவ் உனக்கு காரு இருந்தா யார் மேலேயும் மோதுவியா ங்கொய்யால அடிச்சேன்னா செத்துருவே'

'வேண்டாம் சரவணா விட்ரு என் மேலேயும் தவறு உண்டு'

'ம்ஹீம் நீ சும்மா இரு ப்ரியா இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது செருப்பால அடிக்கனும்'

'விடு விடு சரவணா வா போகலாம்'

வலுகட்டாயமாக நம்ம ஹீரோவை கூட்டிட்டுப் போனாள்.

"இதுல யாரு சரவணன்" ப்யூன் கூப்பிட,

'நாந்தாங்க'

'போங்க உள்ளே'

உள்ளே ங்கொய்யாலன்னு சொன்ன, செருப்பால் அடிப்பேன்னு சொன்ன, சும்மா விடக்கூடாதுன்னு சொன்ன, அடிச்சா செத்துருவேன்ன சொன்னவரு உயிருடன் மேனேஜராய்..............
#################################################

துணிக்கடையில்

1)ஏம்மா எவ்ளோ துணிதான் பார்ப்பே எதுவுமே உனக்கு மேட்சே இல்லமா'

(கணவனை பார்த்தபடி)'ஆமா ஆமா எதுவுமே எனக்கு மேட்சா இல்ல'



2)முன்பு ஜன்னலுக்கு முன்னாடி பெண்கள் இருப்பார்கள்
இப்ப பெண்களுக்கு பின்னாடி ஜன்னல் இருக்கிறது.

3)குழந்தை வளர்ப்புக்கு வெளிநாடுதான் உதாரணம்.நம்ம ஊரில் அடேயப்பா

'பாரு அப்பன மாதிரியே அதே திருட்டு முழி'

'சீக்கிரம் எழுந்திருக்கிறானா அப்பன மாதிரியே எட்டு மணி வரை தூங்குறதுன்னு' எல்லாத்துக்குமே அப்பன்'தான்..

(இந்த ஜோக்குகள் வழக்கம்போல் மதுரை முத்து சொன்னது)

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates