Showing posts with label சிறுகதை கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label சிறுகதை கிறுக்கல்கள். Show all posts

உயிரின் வலி.......


ஐந்து நட்சத்திர ஹோட்டலின் டிஸ்கொதே கிளப்....

"ஹேய் லோகேஷ் ஆர் யூ ஃப்ரீ டுமாரோ?"

"ஒய் டார்லிங்"?

"இல்லடா எனக்கு ஜீவல்ஸ் வாங்கனும் அப்பாவும் அம்மாவும் பிஸினஸ் ட்ரிப் போயிருக்காங்க அதான்"

"ஓகே ஐ கேன் ட்ரை டு கம் வித் யூ"

               "ஹேய் ரொம்ப குடிக்காதேடா அப்புறம் எப்டிடா வண்டி ஓட்டுவே?"

                   "ஃபுல் ரவுண்ட் அடிச்சாலும் நான் ஸ்டெடி மைன்ட்'ல தான் இருப்பேன் யூ டோண்ட் வொர்ரி"

                   "ஓகே லெட் அஸ் கோ"

பி.எம்.டபிள்யூ காரை லோகேஷ் ஓட்ட வண்டி கிளம்பியது.

பத்தாவது நிமிஷம்..

ரோடு கூட்டும் தொழிலாளி மேல் லோகேஷின் வண்டி மோதியதில் அவர் தூக்கியெறியப்பட்டு விழுந்து கிடந்தார்.ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அவரை ஜி.ஹெச்சுக்கு கொண்டு சென்றார்கள்.

அந்த ஏரியா எஸ்.ஐ விமலன் ஸ்பாட்டுக்கு வந்தார்.

"ஹேய் யார் நீ ட்ரன்க்டு டிரைவிங் கூடாது தெரியுமில்ல"

அதற்குள் ஏட்டு ஒருவன் எஸ்.ஐ காதில்,

"சார் பையன் யாரு தெரியுதா ஆளுங்கட்சி காண்ட்ராக்டர் 
ஜோதிவர்மனோட புள்ள, கைய கிய்ய வெச்சா ஏடாகூடாமாயிடும் சார்"

         "ஓகே ஓகே டிராஃபிக் க்ளீயர் பன்னு"

ஒரு வழியாக டிராஃபிக்கை "க்ளீயர்" செய்தார்கள்...

ரூமில் இருந்தான் லோகேஷ்.அப்போது வேகமாக வந்த ஜோதிவர்மன் லோகேஷின் கன்னத்தில் அறைந்து,

"ஏண்டா காஸ்ட்லி காரைக் கொண்டா மோதுவே 45 லட்சம் ருபா கார் டேமேஜ் ஆயிடுச்சு பாரு"

"அப்பா நான் ஒன்னும் வேனும்னே மோதல,இன்னிக்கு ரவுண்டு ஜாஸ்தியாயிடுச்சு அதான்"

                    "சரி சரி சாப்பிட்டியா?"

                   "இல்ல"

                  "போ போய் சாப்பிடு"

அடுத்த நாள்.....

ஹாலில் உட்கார்ந்து நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருந்த ஜோதிவர்மன் காலிங் பெல் சத்தத்தை கேட்டு எழுந்துப் போய் கதவை திறந்தார்.
வெளியில் மெக்கானிக் மாணிக்கம்.

"ஐயா இன்னிக்க நம்ம சுகுணாம்மா வண்டிய கொண்டு வந்தாங்களாம்"

               "சரி அதுக்கென்ன இப்ப"

"இல்லீங்கய்யா என் பொஞ்சாதிக்கு உடம்பு சரியில்லைன்னு புதுசா வேலைக்கு சேர்த்த பையனை வெச்சுட்டு நான் ஆசுபத்திரிக்குப் போய்ட்டேன்"

                       "சரி"

"பையன் வண்டிய ஒழுங்கா பார்த்தானா இல்லையான்னு கேட்டுட்டு போலாம்'னு வந்தேங்கய்யா"

            "சுகுணா வந்ததும் சொல்லி அனுப்புறேன்"

            " சரிங்கய்யா நான் வரேன்ங்க"

சரியாக அதே பத்தாவது நிமிஷம்...

காண்ட்ராக்டர் ஜோதிவர்மனோட மகள் சுகுணாவின் கார் தாறுமாறாக ஓடி லாரியில் மோதியதில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி டி.வி.யில் ஸ்க்ரோலிங்காக ஓடிக்கொண்டிருந்தது.......

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates