Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

மூக்குத்தியும் ம‌ழையும்...

Thanks to Art : ilayaraja 

 ...

மூக்குப் பொட்டு
குத்திக் கொள்ள‌வா
என்று கேட்டாள்
அம்மாக்காரி
வேண்டாமென்றேன்
ஏதும் சொல்லாம‌ல்
வில‌கிய‌ அவ‌ள்
என்மீது வைத்துள்ள‌
அன்பென‌ நினைத்து
பெருமை கொண்ட‌
சுவ‌டு ஆற‌வில்லை
த‌ன் ம‌க‌ளின்
அழுகையை கூட‌
பொருட்ப‌டுத்தாம‌ல்
ம‌க‌ளின் மூக்கில்
பொட்டைகுத்தி
என்மீதுள்ள‌
த‌ன் கோப‌த்தை
த‌ணித்து கொண்டாள்..


........



 
வெள்ளிக்கிழ‌மை 12 ம‌ணி வாக்கில் வெள‌க்காரியிட‌ம் பேர‌ம்பேசி மூணு கீத்து மாங்காயை பொடி வைத்து திண்ப‌தில் இருக்கும் சொக‌ம் ம்ம்ம்.. ம‌ஞ்ச‌ளும் அல்லாம‌ல் அத‌ற்கு இடைப்ப‌ட்ட‌ க‌ல‌ரில் இருக்கும் மாங்காயில் ஒவ்வொரு கீத்தாக‌ ந‌றுக்கி அதை ப‌டுக்க‌ப்போட்டு சின்ன‌ சின்ன‌தாக‌ கொத்தி அத‌ன் மேல் அரிசி,உப்பு,மிள‌காய்தூள் க‌ல‌ந்த‌ பொடியை தூவிய‌தும் அதை போட்டிபோட்டு வாங்கும் ந‌ண்ப‌ர்க‌ள் அதை ருசிப்ப‌திலும் போட்டி போடும் வித‌ம்..சொக‌ம்..

லூலூ ஹைப‌ரில் ஃப்ரிட்ஜ‌ரில் இருந்து மாம்ப‌ழ‌த்தை எடுத்து ருசிக்கும்போது வ‌ர‌வில்லை அந்த‌ ருசி....:(


.......................................................

AADHAR CARD

இந்திய‌ அர‌சாங்க‌ம் ம‌க்க‌ளுக்கு ஃபோட்டோவுட‌ன் கூடிய‌ அடையாள‌ அட்டை த‌ர‌ப்போறாங்க..அதுக்கான‌ விண்ண‌ப்ப‌ம் இது, பூர்த்தி செய்து அனுப்ப‌வேண்டும். Buzz'ல் ப‌கிர்ந்த‌ விஜிக்கு ந‌ன்றி..

 ......................................

ட்விட்ட‌ரில் ஃபேஸ்புக்கில் கிறுக்கிய‌து..

பேருந்தில்இவ்ளோஎட‌ம் காலியாக‌ இருந்தும் க‌டைசிபெஞ்சில் வ‌ந்து என்ன‌ருகில்உட்காரும் ப‌ச்சை ச‌ட்டைகார‌ரை எதைக்கொண்டு அடிப்ப‌து # புல‌ம்ப‌ல்'ஸ்

ஹ‌சாரேவுக்கு ஆத‌ர‌வாக‌ திரைஉல‌கின‌ர் போர‌ட்ட‌ம் # பேசாம‌ சிவாஜி தி பாஸ்'ஸை ரெண்டு த‌ட‌வை பார்த்துட்டு க‌ம்'னு கிட‌க்காம‌ ங்கொய்ய‌ல‌ இதுவேற‌..

இனி.. 'த‌ங்க‌ம்' அப்ப‌டின்னு கேள்விப்ப‌ட‌மட்டுத்தான் முடியும் போல‌ :(

வ‌ண‌க்க‌ம் நான் விஜ‌ய‌காந்த் பேசுறேன் நீங்க‌ கேட்டுக்கிட்டு இருக்கிற‌து ஹ‌லோ எஃப் எம்..ஆங்..# எத‌ம‌ற‌ந்தாலும் ஆங்'னு சொல்ற‌தை ம‌ற‌க்க‌மாட்டாருப்போல‌..

மொபைலில் லவுட் ஸ்பீக்க‌ரை ஆன் செஞ்சு ஜ‌ன்ன‌லில் வைக்க‌ச்சொல்லி அந்த‌ ம‌ழைச்சார‌லை ர‌சித்தேன் இன்று # ஊரில் ம‌ழையாம்..

ராக்கி என்கிற‌ வ‌ட‌க்கு விஷ‌ய‌த்தை ப‌த்தி பேசுற‌தில் நாம் த‌மிழ‌ர்க‌ள், ஆனாலும் இந்தி ஒழிக‌ ஒழிக‌தான் # முர‌ண்.

பாட்டை முழுசா அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு கேட்க‌விட்டுத்தான் மொபைலை அட்ட‌ன் செய்கிறார்க‌ள் # ரிங்டோன்..

ஒரு க‌ருத்தை சொன்னால் உட‌னே கைத‌ட்டி, ந‌ல்லா யோசிச்சுக்கிட்டு இருந்த‌வ‌னையும் யோசிக்க‌வைக்க‌ முடியாம‌ல் செய்வ‌து த‌மிழ‌ர் ப‌ண்பாடு..

வெங்காய‌ விலைக்கு ச‌வுண்ட் வுடும்போது கோல்டு விலையேற்ற‌த்துக்கு ஏன் எல்லோருமே ஒன்னுக்கு ரெண்டு பிளாஸ்திரி'ய‌ வாயில‌ ஒட்டிடுறாங்க‌...

ல‌ஞ்ச‌ம் என்றாலே என‌க்கு முத‌ல்'ல‌ நினைவுக்கு வ‌ர்ற‌து ரேஷ‌ன் கார்டு.. # என‌க்கு ம‌ட்டுந்தானா இப்ப‌டி..

புது ம‌னைவி துணிகாய‌ப்போடும்போது ரொமான்ஸ் வ‌ர்ற‌மாதிரி காட்ற‌ சீனை ஆர‌ம்பிச்சு வெச்ச‌ டைர‌க்ட‌ர் கிடைச்சா ச‌ங்குதான் # நோ ரொமான்ஸ் ஒன்லி விய‌ர்வைதான் :( 

விள‌ம்ப‌ர‌த்துக்கும் காத‌லுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்..

விள‌ம்ப‌ர‌த்துல‌ இனிப்பான‌ செய்திய‌ பெருசா போட்டு க‌ண்டிஷ‌ன் அப்ளை'ங்கிற‌ ஆப்பை சின்ன‌தா போட்ருப்பானுங்க‌..


காத‌லில் க‌ண்டிஷ‌ன் அப்ளை வ‌ண்டி வ‌ண்டியாய் வ‌ந்து இனிப்புங்கிற‌ மேட்ட‌ர் ஒளிஞ்சிருக்கும்..



ச‌மீப‌த்தில் குமுத‌த்தில் வ‌ந்த‌ ஒரு ஜோக்..வ‌யிற்றை புண்ணாக்கிவிட்ட‌து.. :))

'என்ன‌ங்க‌  பின்னாடி இருக்கிற‌வ‌ன் என் காலை சுர‌ண்டுறான்'

'நீ திரும்பி உன் மூஞ்சீ'ய‌ காட்டு,ஏன்டா இப்ப‌டி செஞ்சோம்'னு சாக‌ட்டும், த‌றுத‌லை..'

................................................................

  ஏர்டெல் சூப்ப‌ர் ஸிங்க‌ர் விறுவிறுப்பான‌ க‌ட்ட‌த்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிற‌து.. க‌டைசி வைல்ட் கார்ட் ர‌வுண்ட்டில் 'ஸ்ரீநிவாஸ்' பாடிய‌ ஆரோமேலே பாட‌ல் ந‌ன்றாக‌ இருந்த‌து..ஓப்ப‌ன் ஸ்டேஜில் இப்ப‌டியொரு பெர்ஃபாமென்ஸ் ரிய‌லி சூப்ப‌ர்..



ம‌ழை..இறைவ‌ன் த‌ந்த‌ கொடை.. அந்த‌ ம‌ழையில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ வீடியோவை பாருங்க‌ள்.. ம‌ன‌தைக் கொள்ளைக் கொள்ளும் என்ப‌து நிச்ச‌ய‌ம்..ரொம்ப‌வும் ர‌சிச்ச‌ வீடியோ இது..



 
Cartoon Mania.. :))






வாணி ஜெய‌ராமின் வ‌சீக‌ர‌ குர‌லில் நீங்க‌ளும் ம‌ய‌ங்குங்க‌ள் இந்த‌ பாட்டைக் கேட்டு...




Post Comment

அப்பாவும் ரத்தமும்.....


சில நேரங்களில்
சில விஷயங்களில்
அப்பாவை பிடித்ததில்லை
அப்போது
பல நேரங்களில்
பல விஷயங்களில்
என்ன காரணமென்று
அப்பாவாய் ஆனபோது புரிந்தது
இப்போது........

எனது உளமார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்...


வெ.மாப்பிள்ளை மோகம்

கனவுகளுக்கு ஆசைப்பட்டு
நிஜங்களுக்கு வாக்கப்பட்டு
நகரங்களுக்கு ஆனந்தப்பட்டதனால்
நரகமாகிப் போனது
வாழ்க்கை...

தீர்ப்பு...(மன்னாங்கட்டி)

ரெண்டாயிரம் பேரை
சாகடிச்சவனுக்கு ரெண்டு
வருஷ தண்டனை
மனித ரத்தமும்
பேனாவின் மையும் சிவப்பு
என்பதாலோ இப்படி வந்துவிட்டதோ
தீர்ப்பு....

மனது வெந்து எழுதியது...அதே சிவப்பு மையினால்........

Post Comment

தமிழனும் விளம்பரமும்...

விளம்பர உண்மை

ப்ளக்ஸ் போர்டில் சாப்பிடுகிறது
வெளிநாட்டுக்குழந்தை 
அதே போர்டின் கீழ்
பிச்சையெடுக்கிறது 
இந்தியக்குழந்தை...
                                                                      
முன்னேற்றம்

தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
சொன்னவர்கள் முன்னேறிவிட்டார்கள்
சொல்லப்பட்டவர்கள் முன்னேறவில்லை...


இந்த ஓவியம் ரோட்டில் தத்ரூபமாக வரையப்பட்டது..



ஆகாயத்துல போய்க்கொண்டிருந்த விமானுத்துல கோளாறு. உடனே பைலட் சொன்னாரு, இந்த விமானுத்துல இருக்கிற 10 பேர் கீழே குதிச்சாத்தான் விமானம் விபத்துக்குள்ளாம இருக்கும்,அதனால உடனடியா பத்து பேர் கீழே குதிக்கனும்னு சொல்லிட்டாரு. முதல்ல ரஷ்யாக்காரன் "லெனின் வாழ்க அப்பிடின்னு சொல்லிட்டே கீழே குதிச்சுட்டான்,அடுத்து இங்கிலாந்துக்காரன் "எலிசபெத் ராணி வாழ்க" அப்பிடின்னு சொல்லிட்டே கீழே குதிச்சுட்டான், இப்படியே ஒவ்வொரு நாட்டுக்காரனா குதிச்சக்கப்புறம் நம்மாளு வந்து " காந்தி வாழ்க,நேரு வாழ்க" சொல்லிட்டு பக்கத்துல இருந்த ஜப்பான்க்காரன தள்ளிவிட்டுட்டான்...


(எங்ககிட்டேவா.. இந்த ஜோக் வழக்கம்போல் மதுரை முத்து சொன்னது)


வேண்டுகோள்அல்லது அழைப்பு
கத்தாரில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் ஒரு முறையாவது சந்தித்து பேச வேண்டும் என்பது எனது ஆவல்..அப்படி கத்தாரில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் ஒன்றுகூடி சந்திக்க விருப்பமெனில் பின்னூட்டத்தில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates