தேவ‌தை குடித்த‌ ச‌ர்ப‌த்...  
Photo License: Elina   
...... 
 
ரில் விஓவாக‌ சுத்திக்கொண்டிருந்த‌ நேர‌ம் த‌வ‌றாம‌ல் காலையில் இட்லி,ச‌ட்னி எக்ஸ்ட்ராவாக‌ அரிசிப் பொடி தொட்டுச் சாப்பிடும் கால‌ங்க‌ள் அறையின் த‌ரையில் வெயில் ப‌ட்டு எறும்பெல்லாம் துடிக்கும் ச‌ம‌ய‌ங்க‌ளில்தான் போர்வையை வில‌க்கி விடிஞ்சிருச்சான்னு பார்க்கும் ப‌ருவ‌ங்க‌ள்.நான் த‌மிழன் என்ப‌தால் காலை,மாலையில் டீ குடிச்சாத்தான் உயிரோட‌ இருப்ப‌த‌ற்கான‌ அர்த்த‌ம் அத‌னால் டீ'யை அநியாய‌த்துக்கு ஆற‌ விட்டுத்தான் குடிப்பேன் அதென்னவோ அறிவாளிக‌ள் எல்லாம் சூடா எதுவுமே குடிக்க‌மாட்டாய்ங்க‌ளாமே (யாருங்க‌ அங்க‌ தும்முற‌து) ச‌ரி அதை விட்ருவோம்,மொத்த‌த்தில் ஃப்யூச்ச‌ர் அதாம்பா எதிர்கால‌ம் ப‌த்தின‌ யோச‌னையில் வ‌ட‌க்கு பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த‌ நேர‌ங்க‌ள்.நான் பொதுவாக‌ போட்டியில் ப‌ங்கேற்க்கும் ஆர்வ‌முடைய‌வ‌ன் பி.டீ.உஷா மாதிரி மூச்சிரைக்க ஓடி வாங்கிற‌ ஓட்ட‌ப்ப‌ந்தயப் போட்டியோ,அம்ப‌து கிலோ குண்டான‌ என்ன‌மோ தூக்கி எறிவாய்ங்க‌ளே அது மாதிரியான‌ போட்டியோ என‌ நீங்க‌ள் நினைத்தால் அது த‌ப்பு.பேப்ப‌ர்,நாளித‌ழ்'ல‌ வ‌ரும்மே அம்மாதிரியான‌ நோகாம‌ல் நோம்புகிற‌ போட்டிகள் அதான் என‌க்கு ச‌ரியா வ‌ரும் அம்மாதிரியான‌ போட்டிக‌ளில் குங்கும‌த்தில் வ‌ந்த‌ செல்ஃபோன் போட்டியில் வென்று ஒரு செல்ஃபோனை கைப்ப‌ற்றி இருக்கிறேன் என்ப‌து வ‌ர‌லாறு.அப்ப‌டி ஒரு ஆர்வ‌த்திலிருந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஒரு வார‌யித‌ழில் ஒரு போட்டி சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு அப்ப‌டின்னு ஒரு அரைப்ப‌க்க‌ விள‌ம்ப‌ர‌ம் அது ஒரு த‌னியார் ரிய‌ல் எஸ்டேட்க்காரய்ங்க‌ கொடுத்திருந்த‌து ப‌ரிசு ஒரு ம‌னை இத்த‌னை ஸ்கொய‌ர்க்கு இத்த‌னை ஸ்கொய‌ர் என‌ வ‌லை விரிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து..இந்திய‌ ஜ‌னாதிப‌தி யார்?,எட்டுக்கால் பூச்சிக்கு எத்த‌னை கால் என்ப‌து மாதிரி ஒண்ணாப்பு,அஞ்சாப்பு வ‌கை கேள்விக‌ள் உட‌னே விடையை டிக் செஞ்சி அஞ்சு ரூபாய் க‌வ‌ர்'ல‌ உள்ளே வெச்சு அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அட்ர‌ஸ்க்கு அனுப்பியாச்சு.மேற்க‌ன்ட‌ குங்கும‌ம் ப‌ரிசில் வ‌ந்த‌ ந‌ம்பிக்கை ச‌ங்க‌ர் சிமெண்ட் அள‌வுக்கு ப‌டுஸ்ட்ராங்கா இருந்த‌து இந்த‌ போட்டியிலும்..அதை குறிப்பிட்ட‌ கால‌த்தில் ம‌ற‌ந்தேவிட்டேன்.திடீரென்று ஒருநாள் வீட்டில் ஒரே ப‌ர‌ப‌ர‌ப்பு நான் அப்ப‌தான் நுழைகிறேன் என் முன்னே இன்லான்ட் லெட்ட‌ர் கொண்டுவ‌ர‌ப்ப‌டுகிற‌து..விஷ‌ய‌ம் இதான்..நீங்க‌ள் அதிர்ஷ்ட‌சாலி உங்க‌ளுக்காக‌ ம‌னை வெயிட்டிங் என்ற‌ இனிப்பு ப்ள்ஸ் ஜாங்கிரி வார்த்தைக‌ள் அந்த‌ ஒரு ரூபாய் இன்லான்ட் லெட்ட‌ரை அல‌ங்க‌ரித்த‌ன‌ ச‌ந்தோஷ‌ம் கொப்பளித்த‌து என‌க்கு உட்ப‌ட‌ எல்லோருக்கும். ம‌ன‌சுக்குள்ளே ஒரு ப்ராக்கெட் போட்டு யோச‌னை உன‌க்குள்ளும் அதிர்ஷ்ட‌ தேவ‌தை உள்ளே ச‌ர்ப‌த் குடிக்கிறாடான்னு..கால‌ரை தூக்கிவிடாத‌ குறைதான் ஆமா இருக்காதா பின்னே..ப‌ரீட்சையில‌ பாஸானாலே அல‌ப்ப‌றை கொடுக்கிற‌வ‌ன் இதுக்கு சொல்ல‌வா வேனும் செம‌ அல‌ப்ப‌றையை கொடுத்தாச்சு..இதெல்லாம் வீட்டுக்குள்ள‌ ம‌ட்டும்தான்..வெளியில் இல்லை வெளியில் கொஞ்ச‌ம் அட‌க்க‌ம்தான்..அந்த‌ இன்லான்ட் போட்டிருந்த‌ நிப‌ந்த‌னைக‌ள் ப‌டித்தேன் பொதுவாக‌ நிப‌ந்த‌னைக‌ள் கொஞ்ச‌ம் அல‌ட்டும் இதில் அந்த‌ அல‌ட்ட‌ல் க‌ம்மியா இருந்த‌து அதாவ‌து ம‌னையை பார்க்க‌ நீங்க‌ள் வ‌ந்தாலும் உங்க‌ கூட‌ யார்வ‌ந்தாலும் த‌லைக்கு நூறு ரூபாய் என்றிருந்த‌து அந்த‌ நேர‌த்தில் என‌க்கு பெரிசா தெரிந்தாலும் நாம என்ன‌ மாநாட்டுக்கா ஆளு கூட்டிப்போக‌ போறோம் ஒரே ஒருத்த‌ன் ந‌ண்ப‌ன் அவ‌னை ம‌ட்டும்தான் கூப்பிட‌ப் போறோம் என்றொரு எண்ண‌ம் இதை என் ந‌ண்ப‌னிட‌மும் சொல்லி கூட்டிட்டு போக‌ ச‌ரியென‌ ச‌ம்ம‌தித்தும் விட்டான் ஆக‌ அந்த‌ இன்லான்ட் லெட்ட‌ரோடு புற‌ப்ப‌ட்டோம் அந்த‌ அட்ர‌ஸில் குறிப்பிட்டு இருக்கும் அலுவ‌ல‌க‌ம் நோக்கி....
                                                                                             ---வரும்..

Post Comment

1 வம்புகள்:

ZAKIR HUSSAIN said...

பி கேர்ஃபுல்.....

நான் என்னெசொன்னேன்......

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates