ச‌லூன் க‌டை பெஞ்சு*** (12-11-2011)


 ம‌க்க‌ள் ந‌ல‌ப் ப‌ணியார்க‌ள் நீக்க‌ம் இது அம்மாவிடைய‌ ஆட்சியில் இர‌ண்டாவ‌து முறை இதிலும் முன்ன‌தைப் போன்ற‌ திமுக‌ ஆட்சியில் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்ற‌ ஒரே கார‌ண‌மாக‌வும் அதே நேர‌த்தில் காசுக் கொடுத்து வேலைக்கு சேர்ந்த‌தால் நீக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்றும் ப‌ர‌வ‌லான‌ பேச்சுக்க‌ள் உலா வ‌ருகின்ற‌ன‌ இது ந‌ம்ப‌த்த‌குந்த‌வையா என்ப‌து உங்க‌ளின் விருப்ப‌த்திற்கே விட்டுவிடுகிறேன் இதில் ம‌க்க‌ள் ந‌ல‌ப் ப‌ணியார்க‌ள் என்ப‌து என்ன‌ வ‌ரைய‌றைக்குள் வ‌ருகிற‌து என்று தேடிப்பார்த்தேன் இணைய‌த்தில் இதுவ‌ரைக்கும் கிடைக்க‌வில்லை ஒருவேளை நான் ச‌ரியாக‌த் தேட‌வில்லை போலும் ச‌ரி அதை விட்ருவோம்.இந்த‌ ப‌ணிநீக்க‌ம் தேவையில்லாத‌ ஒன்றுதான் இத‌னால் அர‌சுக்கு பெரும் இழ‌ப்புமில்லை இது இர‌ண்டாவ‌து முறை என்ப‌தைக் க‌வ‌னித்தால் ரெண்டு க‌ழ‌க‌ங்க‌ளும் இந்த‌ ம‌க்க‌ள் ந‌ல‌ப் ப‌ணியாள‌ர்க‌ளிட‌மும் அவ‌ர்க‌ளின் வாழ்க்கையிலும் ரொம்ப‌வும் ஏற்ற‌மும் இற‌க்க‌மும் கொடுத்து இருக்கிறார்க‌ள், வாயில் அடிப்ப‌தைவிட‌ வ‌யிற்றில் அடிப்ப‌து கொடுமை அதுவும் ரெண்டாவ‌து முறையும் அடித்திருக்கிறார்க‌ள் நிச்ச‌ய‌மாய் அத‌ன் தாக்க‌ம் க‌ண்டிப்பாய் இந்த‌ ஆட்சி மேலிட‌த்திற்க்கு எட்டும்..இந்த‌ விஷ‌ய‌த்தை கூர்ந்து பார்த்தால் நூல‌க‌ விஷ‌ய‌த்தில் இருக்கும் வேக‌ம்,எதிர்ப்பு,விம‌ர்ச‌ன‌ம் போன்ற‌வை இந்த‌ ம‌க்க‌ள்ந‌ல ப‌ணியாள‌ர்க‌ள் விஷ‌ய‌த்தில் அவ்வ‌ள‌வாக‌ இல்லை என்ப‌து ந‌ன்றாக‌ விள‌ங்குகிற‌து..ம் ச‌க‌ ம‌னுஷ‌னை விட‌ புத்த‌க‌ம் எல்லோருக்கும் ரொம்ப‌ முக்கிய‌மாய்ப் போச்சு..இப்போது இத‌ற்க்கும் கோர்ட்டு இடைக்கால‌ த‌டை விதித்து விட்ட‌து..
...........................................
த‌மிழக‌ காங்கிர‌ஸின் புதிய‌ த‌லைவ‌ராக‌ ஞான‌தேசிக‌ன் அவ‌ர்க‌ளை நிய‌மித்து இருக்கிறார்க‌ள் இவ‌ர் ராஜ்ய‌ச‌பா எம்பியும்கூட‌.சென்னையைத்தான்டி காங்கிர‌ஸ் க‌ட்சிக்கார‌ர்க‌ள் த‌விர்த்து யாருக்கும் இவ‌ரை அவ்வ‌ள‌வாக‌ தெரியுமா என்ப‌து முக்கிய‌ம். இனி தெரியும், தெரிஞ்சு என்னாக‌ப் போகுதுன்னு உங்க‌ மைன்ட் வாய்ஸ் கேக்குது..ஆற்காடு வீராசாமிக்கு அடுத்து த‌மிழ்நாட்ல‌ அதிக‌மாக‌ விம‌ர்சிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர் த‌ங்க‌பாலுதான் கிட்ட‌த்த‌ட்ட‌ அவ‌ரை வைத்து காமெடியே ந‌ட‌க்கும் ப‌ல‌ இட‌த்தில்..எத்த‌னைத் த‌லைவ‌ரை மாத்தினாலும் ஒவ்வொரு காங்கிர‌ஸ் த‌லைவ‌ர்க‌ளுடைய‌ கோஷ்டி எதிர் கோஷ்டியின் வேஷ்டியை உருவ‌ த‌யாராய் இருக்கும்போது எப்ப‌டி சாத்திய‌ம் க‌ட்சி வ‌ள‌ர‌. எல்லாக் க‌ட்சியும் த‌ங்க‌ள் க‌ட்சி மாநில‌ த‌லைவ‌ருக்கு பாராட்டு விழா ம‌ற்ற‌ ச‌ம்பிர‌தாய‌ம் எல்லாம் ந‌ட‌த்துவார்க‌ள் இங்கே யாரு,எப்ப‌,எப்ப‌டி,முத‌ல்ல‌ புதிய‌ த‌லைவ‌ரான‌ இவ‌ரை எப்ப‌டி விம‌ர்சிக்க‌ப் போறாங்க‌ன்னு பொறுத்திருந்துப் பார்ப்போம்..
........................................... 
'ந‌ம்ம‌ ப‌ட‌த்தோட‌ வில்ல‌ன் யாரு?'

'ப‌வ‌ர்க‌ட்தான்,அத‌னாலயே ஹீரோ அதிக‌மா புள்ளைய‌ பெத்துட்டு க‌ஷ்ட‌ப்ப‌டுறான்..


விக‌ட‌னில் வ‌ந்த‌ ஜோக்..சிரிச்சி சிரிச்சி..முடிய‌ல‌ :)))))
...........................................


ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்ப‌ர்வ‌ர்க‌ள் இந்த‌ அப்ளிகேஷ‌னை ட்ரை செஞ்சு பாருங்க‌.ரொம்ப‌வும் அருமையான‌ அப்ளிகேஷ‌ன் இது..பூனைப் போன்ற‌ உருவ‌த்தில் ஸ்கீரினில் தோன்றும் வில‌ங்கு நீங்க‌ என்ன‌ சொன்னாலும் அது எந்த‌ மொழி என்றாலும் உங்க‌ வாயிலிருந்து வ‌ரும் சின்ன‌ ஒலியைகூட‌ உள்வாங்கி அதே மாதிரி திருப்பிச் சொல்லும்போது வ‌யிற்றை புண்ணாக்குற‌ அள‌வுக்கு சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்துவிடுகிற‌து சின்ன‌ ப‌ச‌ங்க‌ளிட‌ம் போனைக் கொடுத்து பேச‌ வைங்க‌ ரொம்ப சூப்ப‌ரா இருக்கும் ஆனால் அவ்வ‌ள‌வு எளிதில் ஃபோனை அவ‌ர்க‌ளிட‌மிருந்து வாங்கிட‌முடியாது அத‌ன் ஸ்க்ரீன்ஷாட் கீழே..ட‌வுன்லோட‌ இந்த‌ லிங்கிற்கு செல்லுங்க‌ள் >> Taking Tom Cat

............................................
1:48 ல் ஆர‌ம்பிக்கும் இந்த‌ இசை ம‌ய‌க்க‌த்தை பாருங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் த‌பேலாவும் ரெண்டாவ‌தாக‌ (சேவிய‌ர்) கீபோர்டும்,நாலாவ‌தா வ‌ர்ற‌ லீட் கிடாரும்,அந்த‌ புல்லாங்குழ‌லும் என்னோட‌ பிக்..ம‌ன‌சை அப்ப‌டியே கொண்டு போயிருச்சு ராஜா ராஜாதான்..இசை சாம்ராஜ்ய‌ம்.கூகிள் ப‌ஸ்ஸில் 'ராஜா வ‌ன‌ஜ்' இதை ப‌கிர்ந்த‌து என் க‌வ‌னுத்துக்கும் வ‌ந்த‌து..செம‌..


மொக்கை ஷார்ட் பிலிம் எடுக்க‌லாம் மொக்கையையே க‌தையா எடுத்தா எப்ப‌டி இருக்கும் இப்ப‌டித்தான் இருக்கும் ஆனாலும் க்ளைமேக்ஸ் என‌க்கு அவ்வ‌ள‌வா இம்ப்ர‌ஸ் செய்ய‌லை.இடையில் வ‌ரும் இளைய‌ராஜா பாட்டும் க‌வுண்ட‌ம‌ணியின் வாய்ஸிம் ச‌ரியான‌ இட‌த்தில‌ வ‌ருவ‌து சூப்ப‌ர்.

...........................................
 ச‌மீப‌த்தில் என்னைக் க‌வ‌ர்ந்த‌ இர‌ண்டு புகைப்ப‌ட‌ங்க‌ள்..

முத‌லாவ‌து சென்னை கோட‌ம்பாக்க‌ம் மேம்பால‌ம் க்ளிக்கிய‌வ‌ர் : Jose
இர‌ண்டாவ‌து சென்னை சேப்பாக்க‌த்தில் ஒரு எம்80 க்ளிக்கிய‌வ‌ர் : Ravages


Post Comment

3 வம்புகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலந்து கட்டி, கலக்கிட்டீங்க.

r.v.saravanan said...

எல்லாமே கலக்கல் இர்ஷாத்

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates