கூகிள் பஸ்,ட்விட்டர்,ஃபேஸ்புக் இவற்றில் அவ்வப்போது கிறுக்கியது.
ஓட்டுக்கு பணம் வந்தா தேர்தலுக்கு கமிசன்,
வந்த பணத்த தடுத்தா அது தேர்தல் கமிஷன்..
புது பொன்மொழி :))
__________________________
தோளுக்கு மேல் வளர்ந்தா தோழன் அப்பிடின்னா..முட்டிக்கு மேல் வளர்ந்தா முல்லன்(அ)முடையனா?
இடுப்புக்கு மேல வளர்ந்தா இல்லன்(அ)இடையனா?
கழுத்துக்கு மேல வளர்ந்தா கள்ளன்?(அ)கடையனா?
தலைக்கு மேல் வளர்ந்தா தல்லன்(அ) தடையனா?
_________________________
கன்னத்துல அடிக்கிற பவுடர்'ல காட்ற கவனத்த கொஞ்சம் கட்சி மேலேயும் காட்டினா ஒண்ணாவது கிடைக்கும் # கார்த்திக்_________________________
Earthquake & Tsunami # Made in Japan :(((_________________________
தாய்நாடு 'ன்னு சொல்றது சரிதான் , தந்தையை பேச விட்டாதானே -- யூகிசேது # மகளிர் தினம்________________________
ஓனருக்கு தெரிந்தவரானால் அவரை ஸ்பெஷலா கவனிப்பா... அப்ப மத்தவங்களையெல்லாம் மட்டமா கவனிப்பீங்களா # ஓட்டல் டவுட்டு________________________
கலைஞர்,கலைஞர் டிவி,ராசா,என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..சி.பி.ஐ என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்!! # கரப்ஷன்_________________________
ஏண்டா என் தாலியறுக்கிறேன்னு சில ஆண்களும் சொல்றாய்ங்களே அவங்களுக்கு ஏது தாலி # நாங்களும் கேப்போம்'ல.._________________________
வேர்ல்ட் கப் வந்தால்தான் கென்யா'ன்ற ஒரு டீம் இருக்கிறது தெரியுது # கிர்ர்ர்ர்ரீக்கட்டு_________________________
ஸ்டாலின்,கலைஞர்,அழகிரி போட்டோவை ரவுண்டா ஒட்டிட்டு போற ஸ்கார்ப்பியாக்களின் எண்ணிக்கையை எண்ண முடியல# உல்லாச பிறப்புகள் = உ.பி_________________________
ராசா செய்தியில மீனவனை மறந்திறாதிங்கப்பா # தமிழக ஞாபமறதி சங்கம்.. _________________________
பர்ஸ 'Chase' பன்றதுதாலதான் பர்ஜேஸ்'ன்னு பெயர் வந்துருக்குமோ # வெகேஷன்_________________________
இணையத்தில் என்னத்த கிழிச்சேன்'னு யாராவது கேட்கட்டும் :)) இணைய காலண்டர்_________________________
பேருந்து கவிழுற மாதிரி கூட்டம் இருந்தாலும் நாம கால் கடுக்க நிற்கும்போது அடுத்த பஸ் ஸ்டாப்பில் ஏறும் சகாக்கள்ஏதோ எடம்போட்டு வெச்ச மாதிரி உள்ளே உள்ளே எட்டி பார்க்கிறாய்ங்களே(அந்த சமயத்தில் நமக்கு வர்ற கோபம் இருக்கே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஏன் அப்படி எக்காலத்துத் தோன்றியது இப் பழக்கம் # மாபெரும் டவுட்டு._________________________
அகில உலகத்தில் வாழும் என்.ஆர்.ஐ க்களை இந்த குறும்படம் மனதை கனக்க செய்யும்..________________________
பழைய ஃபெவிக்கால் மற்றும் எம்ஸீல் விளம்பரம்.. எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ!!
7 வம்புகள்:
எல்லா காணொளிகளும் சூப்பர்! ரசித்தேன். பகிர்வுக்கு நன்றிங்க.
ரொம்ப சூப்பர், அருமை
பகிர்வுக்கு நன்றி இர்ஷாத் நேரம் இருக்கும் போது என் தளத்திற்கும் வருகை தாருங்கள்
ரொம்ப நல்லா இருக்குங்க.
தம்பி இர்ஷாத் மிக அருமை,
இப்பதான் படித்தேன், காலகாத்தாலே புத்துணர்வுடன் வேலைக்கு செல்கிறேன் இந்த பதிவை படித்துவிட்டு.
இர்ஷாத் உங்கள் வலைப்பூ உண்மையிலேயே உயர்ந்த ரசனை உள்ளவர்களுக்கு மட்டும் என்று எழுதும் அளவுக்கு அழகாக வீடியோ / ஆர்டிக்கிள் என தொகுத்து வழங்குகிறீர்கள்.
அந்த குறும்படத்தில் வரும் பையன் பாஸ்போர்ட்டை காணடிப்பது [ தண்ணீரில் போடுவது???] ..பிறகு ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்பது சரியானதுதானா?/ [ உண்மையிலேயே ஒரு வாரத்தில் கிடைக்க லஞ்சம் இல்லாதா நாடாக இருந்தால்தான் உண்டு]
nice comments and videos...
Post a Comment