காத்தாடிப் போல....


இந்த படத்தோடு கவிதையும் என்னுடையதல்ல..(இந்த கவிதையோடுள்ள படத்தின் உரிமையாளருக்கு நன்றி) காத்தாடிக்கு தேவையான படத்த தேடுறதுக்குள்ள சட்னியாகிட்டேன்..அதுவுமில்லாம 'காத்தாடி ராமமூர்த்தி' அவரு ஃபோட்டோதான் அதிகமாக வருது.. நான் பார்த்த அளவுக்கு அவரு மனைவிகூட அவரு முகத்தை பார்த்து இருக்கமாட்டாங்க..

1. இங்கே வெயில் அதிகமா இருப்பதால் ஜாஸ்தி பறக்கமுடியாது.

2. காத்தாடியாக இருப்பதால் குடும்பம்,குட்டிகள் கிடையாது அதில பெரிய நிம்மதி?!

3. தமிழ் காத்தாடி? என்பதால் அங்கங்க அடி விழும். அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளனும்.(என்ன பண்றது)

4. இந்தியாக்குள்ளேயே அதுவும் தமிழ்நாட்டிலே பறக்க ஆசை.(அப்படியாவது ஊரில் இருக்கலாமே.. விடமாட்டீங்களே)

5. மெரீனா பீச்சில் பறக்கலாம் ஆனா 'டீல்' போட்டுவிடுவார்கள்.(உடம்பு தாங்காது)

6. ஆனா எப்பவுமே வாழ்க்கையின் உயரத்தில்! இருக்கலாம்.(பணம் தேவையில்லை)

7. ரொம்ப களைப்பாக இருக்கும் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணம் வரும் ஆனா முடிவு ஓனர்? கையில் இருப்பதால் அதுவும் முடியாது.

8. நம்ம நண்பர்? காற்று சுமாராகவே அடித்தால் நலம் கோபப்பட்டால் நாம காலி.

9. காத்தாடியாக இருப்பதால் விஜய் படம் பார்க்க தேவையில்லை அநியாய தலைவலி மிச்சம்.

10. இதில் பெருங்கவலை ஓட்டு போடவும்(அதுவா முக்கியம்) ஓட்டுக்கும் பணமும் வாங்கமுடியாது.

என்னை காத்தாடி பற்றி எழுத அழைத்த சகா சீமான்கனி(நறநற) அவருக்கு நன்றி..நேரக்குறைவு அதனால் பதிவு ரொம்ப குறைவு..

இந்த மாதிரி ஏதாவது தலைப்பை எடுத்து தொடர நான் அழைப்பது.


Post Comment

31 வம்புகள்:

Thenammai Lakshmanan said...

10. இதில் பெருங்கவலை ஓட்டு போடவும்(அதுவா முக்கியம்) ஓட்டுக்கும் பணமும் வாங்கமுடியாது//

ஹாஹாஹா ரொம்ப முக்கியம் அஹமத்..:)))

soundr said...

//நான் பார்த்த அளவுக்கு அவரு மனைவிகூட அவரு முகத்தை பார்த்து இருக்கமாட்டாங்க.//

:)



http://vaarththai.wordpress.com

Unknown said...

பட்டத்தை நன்றாக பரக்கவிட்டிருக்கிறீர்கள்.
படித்து பட்டம் வாங்குகிரமோ இல்லையோ பட்டத்தை பறக்க விட்டாவது சந்தோசப் பட்டுகொள்வோம்.
வாழ்த்துக்கள்.

நாடோடி said...

மாஞ்சா த‌ட‌விய‌தா‌ காத்தாடியா? த‌ட‌வாத‌ காத்தாடியா?...

மகேஷ் : ரசிகன் said...

:)

Madumitha said...

ஒரு காத்தாடியை வைத்து
இவ்வளவு சிந்தனையா?
வாழ்த்துக்கள் இர்ஷாத்.

விஜய் said...

வாழ்த்துக்கள் தம்பி

தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்

விஜய்

ஜெய்லானி said...

////நான் பார்த்த அளவுக்கு அவரு மனைவிகூட அவரு முகத்தை பார்த்து இருக்கமாட்டாங்க.//

ஹா..ஹா..அனுபவம் பேசுது..அந்த அளவுக்கு அடியா கிடைக்குது.

:-))

Mc karthy said...

//நான் பார்த்த அளவுக்கு அவரு மனைவிகூட அவரு முகத்தை பார்த்து இருக்கமாட்டாங்க.///

:))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அப்படியாவது ஊரில் இருக்கலாமே//

இந்த வார்த்தைகளில் தொனித்த ஏக்கம் என்னை உலுக்கியது.

ஸ்ரீராம். said...

பட்டம் பற்றிய 'எங்கள்' இடுகையைப் பார்க்க கீழே லிங்க். நாங்கள் அப்போது 'பட்ட வாரம்' கொண்டாடினோம்!!!




http://engalblog.blogspot.com/2010/01/blog-post_3498.html

சிநேகிதன் அக்பர் said...

நல்ல சிந்தனை வாழ்த்துகள் இர்ஷாத்.

//மாஞ்சா த‌ட‌விய‌தா‌ காத்தாடியா? த‌ட‌வாத‌ காத்தாடியா?...//

ஏன் தல டீலிங்ல விடவா :)

பட்டம் உயரே பறக்கட்டும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

காத்தாடி இப்படித்தான் சிந்திக்குமோ?
நல்லா பறக்க விட்டிருக்கீங்க, காத்தாடியை,
அதாவது சிந்தனையை!

சாந்தி மாரியப்பன் said...

காத்தாடி நல்லாவே பறக்குது..

'பரிவை' சே.குமார் said...

பட்டத்தை நன்றாக பரக்கவிட்டிருக்கிறீர்கள்.

சீமான்கனி said...

அழைப்பை ஏற்று சுவையாக தந்த பகிர்வுக்கு நன்றி நீங்களும் ரெண்டுபேர அழைக்கணும் மறந்துடீங்களா??இது தொடர் பதிவு இர்ஷா...மக்களை சிந்திக்கவைக்கலாம்னு மாப்பிளே வசந்து பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீணா போயிரும் போல....

ஹேமா said...

இர்ஷாத்...க்கு "காத்தாடி இர்ஷாத்"ன்னு பட்டம் பின்னூட்டம் போட்ட எல்லார் சார்பிலயும் கொடுக்கிறேன் !குடுக்கலாமா நண்பர்களே !

நீங்க பாத்தவர்
உங்களைப் பாத்தாரா இர்ஷாத் !

ஜெயந்த் கிருஷ்ணா said...

காத்தாடி நல்லாவே பறக்குது..

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

//2. காத்தாடியாக இருப்பதால் குடும்பம்,குட்டிகள் கிடையாது அதில பெரிய நிம்மதி// என்ன இர்ஷாத் இப்படி சொல்லிட்டீங்க..!!!!!!!!!!!!

Yasir said...

//2. காத்தாடியாக இருப்பதால் குடும்பம்,குட்டிகள் கிடையாது அதில பெரிய நிம்மதி// என்ன இர்ஷாத் இப்படி சொல்லிட்டீங்க..!!!!!!!!!!!!...///இர்ஷாத் ரொம்பவுதான் கஷ்டப்பர்ரார்ண்டு நினைக்கிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

காத்தாடி தங்குத்தடையில்லாம நல்லாவே பறக்கட்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பட்டம் பேசிக்கிட்டே பறக்குது.

பேசுற இந்த காத்தாடி கத்ரீனா புயல் அடித்தாலும் ஸ்டாங்கா பறக்கும் போல தெரியுது.

நல்ல கற்பனை வாழ்த்துக்கள் தம்பி இர்ஷாத்.

Menaga Sathia said...

காத்தாடி சூப்பரா பறக்குது...

எம் அப்துல் காதர் said...

//நேரக்குறைவு அதனால் பதிவு ரொம்ப குறைவு.. //

இப்படி சொன்ன எப்படி பாஸ்

ராஜவம்சம் said...

நக்கலில் சில உண்மைகள்.
அருமை சகோ.

r.v.saravanan said...

காத்தாடி நல்லா பறக்கட்டும் அஹமத்

//நான் பார்த்த அளவுக்கு அவரு மனைவிகூட அவரு முகத்தை பார்த்து இருக்கமாட்டாங்க.//

ஹாஹா

Unknown said...

தலைப்பே கவிதைங்க...

Shameed said...

ஆத்தாடி காத்தாடிய பத்தி இத்தனை மேடர

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பா

Ahamed irshad said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி....

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates