இமிடேட்டும் தற்காலமும்..

கால ஓட்டங்களில்  அதிவேகத்தில் இருக்கிறது தற்காலம். ஒரு வருஷத்துக்கு அப்புறம் நான் ஒட்டடை அடிக்கிறேன் இங்கே. மறக்கவில்லை,ஆனாலும் நேரமின்மை ஒரு காரணம். அந்த நேரம்  எழுதுற உணர்வு வரனும், விரைவில் கட்டுரை ஒன்றோடு வருகிறேன்.. அதுவரை,
.
இந்த அனிமேஷன் ஷார்ட் ஃபிலிம் மூன்றே நிமிஷம் தான். 25'க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான விருதுகளை குவித்து இருக்கிறது..! மிகச்சிறிய ஷார்ட் ஃபிலிம் என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை! நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
 

மிழில் இமிடேட் வகையில் சொல்லி அடிக்கிறார்கள். துல்லியமாக இமிடேட் செய்யும்போது ரசிக்கும்படி இருக்கனும் அப்பத்தான் பத்து நிமிஷத்திற்கு மேல் ஓடும் காணொளியை பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த வேலு ப்ரோ' அட்டகாசம் செஞ்சி இருக்கார். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் ஆக்ட் செஞ்சி அப்ளாசை அள்ளிட்டார்! சுவராஸ்யமான காணொளி!

Post Comment

ஈரம் அன்றி வேறில்லை.....

தினைந்து நாள் ஷார்ட் வெக்கேஷனில் ரெண்டே நாள் நண்பரோடு குற்றாலம் என இங்கிருந்து கிளம்பும்போதே ப்ளான் போட்டுத்தான் கிளம்பினேன்... ஏனென்றால் சீசன் களைகட்டியிருந்ததாக எங்க பார்த்தாலும் நியூஸ்... மனதும் மனது சார்ந்தவைகளும் ரெஃப்ரஷ் ஆக இப்படி ஒரு ரெண்டு நாள் அவசியம் தேவைப்படுகிறது..கார் பயணத்தை தவிர்த்துவிட்டு இந்த தடவை பேருந்து பயணம்தான் என்பது ஏற்கனவே முடிவான ஒன்று.. தஞ்சாவூர், மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் வரை இருக்கும் அனல் கடையநல்லூரை நெருங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாய் போக தொடங்கி தென்காசியை அடைந்ததும் மொத்தமாய் போய்விட்டது... குற்றாலம் போகும் பேருந்தில் ஏறிய கொஞ்ச நேரத்திலேயே குற்றாலம் வந்துவிட்டது...விவரிக்க முடியாத அளவுக்கு சரியான க்ளைமேட்... முடிவெட்டியதும் கழுத்து, தலை பகுதியில் வாட்டர் ஸ்ப்ரே அடிப்பார்கள் தெரியுமா அதே மாதிரி சிலிர்க்கும்படியான ச்சில்லிப்பான வானிலை..
லோக்கல் ஸ்லாங்கும் எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று.... ‘வந்துருவாம்ல... தெங்காசில பஸ்ஸ புடிச்சிட்டியளா...’ ஏதோ ஒரு உரிமையானவர் பேசுறது மாதிரியான வட்டார வழக்கு அது... அந்த ஊர்க்காரர்களிடம் வேனும்னே பேச்சை கொடுத்து அவர்களை பேசும் பாங்கை, அந்த வட்டார வழக்கை ரசித்துட்டு இருப்பேன்...
பேருந்தில் வந்து களைப்பு, சீசன் நேரம் என்பதால் எல்லா லாட்ஜும் மேக்ஸிமம் ஃபுல்... போனதும் ரெண்டு உள்ளங்கையை விரிக்கிறார்கள்.. ரூம் இல்லை... அந்த மெயின் அருவி ரோட்லேர்ந்து நடந்து நடந்து கொஞ்சம் தூரம் வந்ததும் வீடு மாதிரியான லாட்ஜில் ரூம் கிடைத்தது...

ரெண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு கழுத்தில் துண்டை போட்டுட்டு கெளம்பியாச்சு.... முதலில் பழைய குற்றாலம் போகனும்... அங்கே போய் ஆசை தீர குளியலை போட்டுட்டு திரும்பலாம் என்ற ப்ளான்... முட்டி தெரிய டவுசரை போட எனக்கு விருப்பமில்லை... நிறைய பேர் அப்படித்தான் அலைந்தார்கள்... நண்பரும் முட்டி தெரிந்த வஸ்து தான் போட்டிருந்தார்...பழைய குற்றாலம் போயாச்சு... ஜனத்திரள் அதிகம்... அதுவும் மேடான ரோடு அது... அதில் போய் முடியும்வரை வந்துக்கொண்டே இருக்கிறார்கள்..  அருவியில் பனியனோடு போய் கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே புகுந்து தலையை காட்டி....பிரமாதமான ஃபீல்... எத்தனையோ முறை வந்தாலும் அந்த நேரத்து அனுபவம் குற்றாலத்தை பொறுத்து புதுசுதான்...


நான் ஏன் பனியோடு உள்ளே போனேன் என்றால் சக குளியர்கள் எண்ணெய்யை தன் உடம்பில் தேய்த்து வந்துவிட்டு நம் உடம்புகளுக்கு தவணை முறையில் எக்சேஞ்ச் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்... இந்த படுமோசமான எக்ஸ்ப்ரீயன்ஸ் பொதுவா எல்லோருக்கும் இருக்கும்.. அதனால் பனியன் உடுத்தி அல்லது போர்த்தி குளித்து தடுத்தேன் எண்ணெய்களை.. உச்சந்தலையில் விழும் தண்ணீரின் இன்பமான பாரம் எவ்ளோ நேரம் வேண்டுமானாலும் தாங்ககூடியதுதான்... சரியான குளியல்... ஊறியாச்சு...போகவே மனசில்லை... நேரமாச்சுன்னு நண்பர் சொல்லியதால் அந்த பழைய குற்றால மலைப்பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தோம்... மென் தூறல் வேற உடம்பில் பட்டு பட்டு தெறித்தது.... 
மாங்காய் கீத்துகளை நறுக்கி உப்பு கார பொடி தடவி செம்மஞ்சள் கலரில் கூடையில் படுக்க வைத்து விற்பனை செய்துக்கொண்டிருந்தவரிடம் பத்து கீத்துகளை வாங்கி சாப்பிட்டுக்கிட்டே நடந்து வந்துட்டே இருந்தோம்...அந்த க்ளைமேட்டுக்கும் அங்கிருந்த பச்சை பசேல் சூழலுக்கும், மென் தூறலுக்கும், குளித்து முடிந்த பசியில் சாப்பிடும் மாங்காய் கீத்து’களின் ருசிக்கும் அன்றைய தேதியில் அதான் பாஸ் ஆஸெம்... ஆஸெம்.... ஹ்ஹம்ம்ம்... மெயின் ரோடு வந்ததும் ஷேர் ஆட்டோவில் ஏறி குற்றாலம் வந்தடைந்தோம்.. பக்கத்திலிருந்து ஓட்டலில் நான் வெஜ் சாப்பாடு... ரைஸ் வித் மட்டன் குழம்போடு ஆம்லேட்... நண்பர் பரோட்டா சாப்பிட்டார்.. மலை வாழைப்பழம் சாப்பிட்டுட்டு ரெண்டு மணி நேரம் தூக்கம்..மறுபடியும் குளியலுக்கு ரெடி... பேரருவிக்கு போலாமா ஐந்தருவிக்கு போலாமான்னு விவாதத்திற்க்கு பிறகு ஐந்தருவி என முடிவானது... பக்கத்தில் உள்ளவற்றை நாளைக்கு பார்த்துப்போம் தூரத்தில் உள்ளவைகளை முதலில் முடிப்போம் என்பது சரியான முடிவுதான்... 
ஐந்தருவியிலும் தண்ணீர் தாராளமாய் கொட்டியது.. மக்கள் கூட்டமாய் இருந்தார்கள்... இருக்கத்தானெ செய்வார்கள்... இங்கே ஐந்தருவியில் மேற்படி பழைய குற்றால குளியல் டெக்னிக்லேயே பனியனோடுதான் பாத் என்ற கொள்கையோடு உள்ளே புகுந்து குளிக்க ஆரம்பிச்சாச்சு... இங்கே நண்பர் பனியோடு குளிக்க வந்திருந்தார்... ஒரு வண்டி எண்ணெய்யை தடவிட்டாங்க போல ப.குற்றால அருவியில் குளிக்கும்போது... பட்டாத்தான் தெரியும் பட்டாளத்தானுக்கு என்ற பழமொழியை அவர்கிட்ட சொல்லலை...உங்ககிட்ட சொல்றேன்.. ஐந்தருவியில் இருந்த போலீஸ்க்காரரின் கெடுபிடி அதிகமாக இருந்தது...நல்லதுதான்... கண்டிப்புதான் ஒழுங்குப்படுத்தும்...பிரமாதமான, அதிக நேர குளியல் ஐந்தருவியில்... அங்கே குளித்துமுடித்துவிட்டு கொஞ்ச தூரம் ரோட்டில் நடந்து போய் பிறகு போவோம் என்று நடந்தபடியே பேசிட்டு போனோம்...அடுத்த வருஷம் இதே ரெண்டு நாளை நாலு நாளா மாத்தி வரனும் அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன் நண்பரிடம்...ஆமோதித்தார்...
அன்றைய முதல் நாள் குளியல் + குளியல் + குளியல் என்றபடி கடும் ஈரத்தோடு அமோகமாய் அற்புதமாய் போனது... டூரிஸ்ட் ப்ளேஸ் என்றால் ஏடிஎம் கொஞ்சம் கூடுதலாய் வைத்திருக்கலாம்... நாங்க தங்கியிருந்த லாட்ஜ்க்கு பக்கத்தில் இருந்த ஏடிஎம் ஒர்க் ஆகவில்லை என்று பேருந்து நிலையம் வரை போகவேண்டியிருந்தது அடுத்த ஏடிஎம்க்கு.... இது ஒரு மைனஸ்...ரெண்டாவது நாளில் பனை ஓலையில் பின்னி மடிக்கப்பட்ட சிறிய பாக்ஸில் பனங்கல்கண்டு கருப்பட்டியில் ஆரம்பித்தது முதல் பர்சேஸ்... அப்படியே தொடர்ந்து கிர்னி பழம் என தொடர்ந்து ஒரு மணி நேரம் தொடர் பர்சேஸ்.... பத்து மணிக்கு காலை சாப்பாட்டை முட்டை தோசை சட்னியோடு முடித்தாச்சு... அந்த அடாத்து மு.தோசையை ரோஸ்ட் என்று வேறு எழுதிவைத்திருந்தார்கள் அந்த ஓட்டலில்.. ரோஸ்ட்’ஐ ஃபோட்டோ எடுத்துட்டு போய் காட்டனும்.. 
இப்போது மெயின் அருவிக்கு போயிடலாம் என கிளம்பினோம்.. பேருந்து நிலையத்தை ஒட்டியே இருக்கும் அந்த அருவிக்கு நடையிலேயே போயாச்சு... இந்த அருவியில்தான் எண்ணெய் குளியர்கள் மெஜாரிட்டியுடன் இருந்தார்கள்... வேற வழியில்லை இது பொது... குளித்துதான் ஆகனும் என்று வந்தாச்சு... இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது இருத்தல் அவசியம் என்ற கருத்து மேலோங்கியது... மெயின் அருவி என்பதால் நினைத்ததை விட கூட்டம் அதிகம் இருந்தது.. நன்றாக குளித்தோம்... ஒரு கும்பல் கத்திக்கொண்டே இருந்தது... அந்த சூழலில் தண்ணீரின் இறைச்சலில் அந்த கும்பல் கத்தியது பிடித்தது...சொல்லப்போனால் சேர்ந்து கத்தினோம்... நல்ல ஃபீல் அது... மொத்தமாய் கவனித்தால் மத்த அருவியில் குளித்து ஊறியதைவிட மெயின் அருவியில் குளித்ததுதான் அதிக நேரம்.... ஏனென்றால் இரண்டாம் நாள் முடிவில் இன்னும் ஒரு அருவி மட்டுமே பாக்கி என்ற நிலை... ஆகவே வந்தவரை விடக்கூடாது என்ற மனநிலை ஓங்க குளியலை விட்டு வெளி வர மனமில்லை...
ஒருவழியாக ஒன்றரை மணி நேர குளியலுக்கு பிறகு மெயின் அருவிலேர்ந்து பேருந்து நிலையம் வரை வரும் ரோட்டில் நடந்தோம்.... அப்போது நடந்து வருகையில் பழாச்சுளை மற்றும் அதே செம்மஞ்சள் மாங்காய் கீத்துகளை  சைக்கிளில் கூடைவைத்து அந்த சைக்கிளை ஸ்டாண்டு போட்டு வைத்திருந்து நின்றபடியே விற்றுக்கொண்டிருந்தார்... சொல்லவா வேண்டும்... வாங்கியாச்சு.. கண்டிப்பா அந்த பழாச்சுளை செம டேஸ்ட்.... இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாம்ன்னு ரூம் கிட்ட வந்தபோது தோன்றியது.. திரும்பி போக மனமில்லை.. கால்களின் முட்டி ரெண்டும் லீவுல போயிருந்தது... முறையான வலி...பகல் ஒரு மணிக்கு ரூம் வந்தாச்சு... மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு மறுபடியும் குளியலுக்கு ரெடி... கடைசியாக பேரருவி மட்டுமே பாக்கியிருந்ததால் சீக்கிரமே போயாச்சு... அங்கேயும் கணிசமான கூட்டம் இருந்தது... ஒரு மணி நேரம் பத்து நிமிஷம் குளித்து இருப்போம்... குத்துமதிப்பான நேரம்தான் அது.... பேரருவி தண்ணீரின் ஃபோர்ஸ் கொஞ்சம் கூடுதலாய் இருந்தது... மழைத்தூறல் வேற.. அன்றைய தினம் பயணம் என்பதால் அந்த கடைசி பேரருவி குளியலின் ஈரம் இன்னும் ஞாபகமிருக்கிறது...
குளியல் முடித்து ரூமிற்க்கு வருகையில் ’அசல் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மற்றும் பால் பொருட்கள் பண்ணையிலிருந்து நேரடி விற்பனை’ என்ற போர்டு கண்டேன்... அந்த குற்றால பயணத்தின் கடைசி பர்சேஸ்’ஆக நெய்யினால் செய்யப்பட்ட பால்கோவா’வை வாங்கிட்டு ரூம்’க்கு வந்தாச்சு... மணி நான்கரை’க்கு மேல் ஆகிவிட்டிருந்தது... வெளியில் சிறுதூறல்...எப்படியப்பா இந்த ஊரை விட்டு போறதுன்னு சின்னப்புள்ளைத்தனமான பிடிவாதத்துடன் கெளம்பியாச்சு... குற்றாலம் பேருந்து நிலையத்தில் தென்காசி பேருந்துக்கு வெயிட்டிங்... நாங்க நின்றபோது தூறல் வேற... ஒரு பேருந்தும் இல்லை...அப்புறம் ஒரு மினிபேருந்து வந்தது... எனக்கு தயக்கம்...ஆனால் நண்பர்.. இதை விட்டா தூறலில் நனைய முடியாது... வாங்க போவோம்ன்னார்... அதுவும் சரிதான்னு இரண்டு நாள் குற்றாலத்திற்கு விடை கொடுத்தது போல் கிளம்பியது மினிபஸ்... அந்த மினிபேருந்தில் ஏறியது எவ்ளோ நல்லதுன்னு பிறகுதான் புரிஞ்சது... ஏனென்றால் அந்த குற்றால சுற்றுவட்டாரமே பார்க்க கண்கொள்ளா காட்சிகளை அளித்தது.. மலையும் மலையை கிழிக்கும் மேக உரசலும்னு ரெண்டு கண்களும் நம்பகிட்ட இல்லை... அதிலும் அந்த மினிபஸ் போன வழியெல்லாம் மிகப்பிரமாதமான வழி... ‘இலஞ்சி' என்னும் அருமையான ஊர்வழியாக சுற்றிதான் கூட்டிப்போனார்கள்... அதுவும் மிக நல்லதா போயிருச்சு... பார்க்க பார்க்க பிடிக்கும் படியான பச்சை பசேல் வண்ணங்களை தீட்டியது போலான நிலப்பரப்பு... அட்டகாசமான உணர்வு... ப்ச்... சூப்பர்.... ஆக இப்படியாக இரண்டு நாள் பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது... 

Disclaimer: இந்த ஆக்கத்திற்க்கு தேவைப்பட்டமையால் இணையத்திலிருந்த மேற்கண்ட படங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. 

என்றும் அன்புடன்
அஹமத் இர்ஷாத்

Post Comment

க்ராவிட்டியும் சித்ரகாரும்..

மீபத்தில் நீயா நானாவில் பெண்ணியம் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார்கள்…எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடிப்பவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி ஊடகத்துறை,கவிஞர் என சிலர் ஒரு குரூப்பாகவும் அதற்க்கு மாற்றான ஒரு குரூப்பும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்…பொதுவான ஒரு நிகழ்ச்சியில் ஒரு டாபிக்’ஐ எடுத்து பேசும்போது அது இரண்டு தரப்பும் என்ற ஒரு நிலைதானே தவிர பிரபலமானவர்கள், பிரபலமில்லாதவர்கள் என்ற பாகுபாடு கிடையாது இருக்ககூடாது...கோபி ஒரு தரப்பை பார்த்து இவர்களெல்லாம் யார்ன்னு தெரியுதான்னு கேட்கிறார்... அவசியமில்லாத விளம்பரம் இது...அதுபோக குட்டி ரேவதி என்பவர் இடையிடேயே ‘கோபி’ கோபி’ன்னு சொல்லி இடைமறித்து பேசும்போது அது ஒரு தரப்பினருக்கான நிகழ்ச்சியோ என்ற எண்ணம் வராமலில்லை... குட்டி ரேவதிக்கு கோபி தெரிந்தவரென்றால் ரோட்ல பார்த்தோ இல்ல வேற ஏதாவது நிகழ்ச்சியிலோ அப்படி கூப்பிட்டு பேசினால் அது நண்பர்கள் என்ற போர்வையில் போயிவிடும்.... இவர் கோபி’ கோபின்னு கூப்பிட்டு கூப்பிட்டு ஒட்டுமொத்த ஸ்கோப்பையும் எடுத்து கொள்வது சரியென படவில்லை பார்த்த பார்வையாளர்களுக்கு..
எல்லாந் தெரிந்த ஏகாம்பரம் போல் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் அதிமேதாவித்தனம்தான் வெளிப்பட்டது அந்த பெண்ணியம் என்ற குரூப்பிலிருந்த ஒரு சிலரிடம்..இதில் கவிஞர் சல்மா உச்சமாய் ஒன்று சொன்னார் அது என்னான்னா’ கணவனுக்கு பிடித்த விஷயத்தை மனைவி செய்யும்போது மனைவியை கணவன் பாராட்டுவது அவளை அடிமைப்படுத்தும் முதல் படி என்றாரே பார்க்கலாம்... எனக்கு குப்பென்று வேர்த்து கப்பென்று தண்ணீரை குடித்தேன்...எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு பாருங்கள்..குடும்ப உறவில் இருக்கும் அந்நியோன்யம் நடிப்பு என்பதாக சொல்கிறார்...சேனல் மாத்திருக்கலாம்.. ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை இருக்கலாம்..ஒருத்தர் இன்னொருத்தரை அடிமைப்படுத்தும் நோக்கம் இருக்ககூடாது என்கிறது சமூகம்..இதுதான் தற்போது பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது...நல்லதுதான்... பூரிக்கட்டைகள் பறந்து வருவது கிச்சனிலேர்ந்துதானே ஒழிய ஹால்லேர்ந்து ரிமோட் பறந்து கிச்சன் போனதாக வரலாறில்லை...அன்னப்பூர்ணா சால்ட் விளம்பரம் வந்தாத்தான் அன்னமே கிடைக்குறது என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது.
லிங்கி (அ) கோலி…கண்ணில் ஏறியிருக்கும் கருப்பு நிறம்போல் கண்ணாடிகுண்டில் ஏறியிருக்கும் நிறங்களை பாருங்கள்..பதின்மத்தில் இதை தாண்டாமல் யாரும் வந்திருக்க முடியாது..கிடையாது..வட்டக்கோடு,பேந்தா பிரபலமான பலிங்கி விளையாட்டு பெயர்கள்..வட்டக்கோட்டில் தோற்பவன் அவன்கிட்ட இருக்கும் பலிங்கியை தரனும்..அப்படியும் அவன்கிட்ட பலிங்கி இல்லையெனில் கார்ரூவாய்க்கு தேன்முட்டாய் வாங்கி தரனும்.. அதிலும் கடன் சொல்லும் பக்கிகள் இருந்தார்கள்….

டவுசரை இருவிக்கிட்டே

‘டே நாளக்கி வாங்கித்தர்றேண்டா’

கடனுக்கு ஒரு கடன் என சைனா பெருஞ்சுவர் மாதிரி அது போய்ட்டே இருக்கும்.. தேன்முட்டாய் கொடலாய் மாறி குடலுக்குள் போகும் சமயத்தில்… சாலிடைர் டிவிதான் அப்போல்லாம்… சேனல் மாத்த ரெகுலேட்டரை திருவனும்.. 

டிடி நேஷனல்… புதன்கிழமை தோறும் தமிழ் பாட்டு போடுவார்கள் ஏமாந்து இந்தி பாட்டு பார்க்க பழகிவிட்டிருந்தோம்...சித்ரகார் அவ்ளோ லேசில் மறக்க முடியாத நிகழ்ச்சி... வெள்ளி தோறும் ஒளிபரப்பாகும் ஒலி ஒளியும் என்ற நிகழ்ச்சியையும் போடுறேன்னு ஏமாத்தி ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்ற போர்டும் சில சமயம் தொங்கும் தூர்தஷனில்...வயலும் வாழ்வை இப்போதெல்லாம் கிண்டலடிக்கிறார்கள்...எவ்ளோ அற்புதமான மண் சார்ந்த நிகழ்ச்சி அது.. நகரமயமாக்கலில் கேஎஃப்சியில் லெக் பீசை கடிச்சாலும் நம் நாட்டில் இன்னும் முதுகெலும்பு விவசாயம்தான்... புரியாத இந்தியில் சித்ரகார் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.. அப்பெல்லாம் டிவி சில வீடுகளில் மட்டும் இருக்கும்..அவங்க வீட்டுக்கு போய் பார்ப்பதில் அந்த வீட்டுக்காரவங்களுக்கு வெத்திலை சுண்ணாம்பெல்லாம் வாங்கிகொடுத்துதான் டிவி பார்க்க வேண்டியிருந்தது...ஒடுங்கி உட்கார்ந்து பார்ப்போம்.. முடிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சுன்னு அந்த வீட்டுக்காரர்கள் டிவியை ஆஃப் செய்ய வரும்போது ஒரு சோகம் வரும்பாருங்க.

சொன்னபடி மழை பெய்யும் ஜுன் ஜுலையில்…அவ்ளோ நல்லவர்கள் இருந்தார்கள்..சிறுவர்களுக்கு சிறுவர்களுக்குண்டான புத்தி இருந்தது..யுடர்ன் அடித்து நிற்கிறது தற்காலம்…சினிமா பார்க்க போறேன்னு சொன்னாலே தழும்பு வர்ற வரைக்கும் அடி விழும்… சாப்பாட்டுக்கு,ஸ்கூல் மிஸ்ஸுக்கும் வாயை தொறந்தத தவிர வேற எதுக்கும் அதிகம் தொறந்ததா ஞாபகமில்லை… அவ்வாறான ரமணன் வந்து அறிவிக்காத (அறிவிச்சுட்டாலும்..!) மழைக்காலத்தில் விளையாட்டு பலிங்கியிலிருந்து காகித கப்பலுக்கு மாறுகிறது… எவ்ளோ இயல்பான மாற்றம் பாருங்கள்… முறுக்கும் கடலைமுட்டாயும் மழைக்கால திண்பண்டங்கள்… காகித கப்பலுக்கு ரஃப் நோட்டு தாளை கிழிக்கும் பழக்கம் இருந்தது..எல்லோருக்கும் இருந்திருக்கும்.. ரெண்டா மடிச்சு கப்பல் வடிவில் அத்தாளை கொண்டுவந்து மழை சொட்டு சொட்டாய் டிங் டிங் என்று வடியும்..வீட்டு மாடியிலேர்ந்து சொட்டு சொட்டென்று ஒரு புள்ளியாய் மேலிருந்து தோன்று கீழே விழும்… வரிசையா பத்து பதினைந்து சொட்டுகள் வந்து விழும் மண்ணில்.. அச்சொட்டுகளில் இரண்டு சொட்டுகளின் நடுவே கைவிட்டு காகித கப்பலை லேசாக ஓடும் தண்ணீரில் விடுவோம்.. சில கப்பல்கள் கவுந்தும் விடும்.. அடுத்து வேறொரு பேப்பர்… இப்படியும் ரஃப் நோட்டின் இடுப்பு இளகும்…

கேப் சுருள் வெடிதுப்பாக்கி… தீபாவளி நேரங்களில் கடை தெரு அப்பியான் கடையில் குமுதத்தோடு தொங்கும்… ரெண்டு ரூவாக்கு கொஞ்சம் மட்டம், தரம் உயர்ந்தது அஞ்சு ரூபாய்… அஞ்சு ரூவாய் வாங்குறளவுக்கு எங்களின் தைரியத்தின் அளவு இல்லை…சில,பல கதவு உடைப்புகளுக்கு பிறகான கிடைக்கும் ரெண்டு ரூவாய் கைக்கு ஏறியதும் ஒரே ஓட்டமாய் ஓடி நிக்கிற இடம் அப்பியான் கடை.. துப்பாக்கியோடு கேப் சுருள் ரெண்டு மூணு தருவார்..அதுக்கு அடிஷனல் பத்து அல்லது அஞ்சு பைசாக்கள் வீதம் கொடுத்தாத்தான் கிடைக்கும்…அந்த கேப் சுருள் ஒவ்வொரு பொட்டாக துப்பாக்கியில் வைத்து பட் பட்’ன்னு வெடிப்போம்…வீட்டுல உள்ளவங்கள துப்பாக்கிய காட்டி பயமுறுத்துறது என அதகளம் அன்னாளில் செஞ்சிருக்கோம்…அதேபோல் கரும்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று..கடைத்தெருவுக்கு போய் வாங்கிட்டு வந்து தின்போம்.. நீள நீளமாய் சுவற்றில் சாய்த்து வைத்து விற்கும் வேட்டி கட்டிய கடைக்காரர்  இருப்பார்….இனிப்பு கம்மியான கரும்பென்றால் கடைக்காரனுக்கு வசவு வாய் நிறைய இருக்கும்…

‘நல்லா மெண்டு சாப்பிடு…பல் சுத்தமாவும்’ என்பார்கள் பெரியவர்கள்.. பொட்டிலடித்தாற்போல் ஞாபகம் இருக்கு எனக்கு இந்த டயலாக்….இனிப்பான கரும்பு சக்கையாய் போற வரைக்கும் விடுறதில்லை…கரும்பு அதிகமாய் தின்ற அன்னிக்கு பல்லின் மேல் முரசு நற நற வென இருக்கும்….ஒரு மாதிரி ஃபீல் அது…கரும்பின் ஒரு தட்டு முடியும்போது ஒரு கசப்பு சாம்ராஜ்யம் வரும்….அதை அகற்ற படும்பாடு இரு்க்கே சொல்லி மாளாது… கத்தியை கொண்டுவந்து வெட்டனும் அதுக்கு கத்தியை போய் அடுப்படியில தேடனும் தேடற நேரம் யாரும் இருக்ககூடாது அடுப்படியில் என பல வேகதடைகள் இருக்கிறது… எங்கும் அசையாத சோம்பேறிகள் பல்லாலேயே கடித்து துப்பிவிடுவார்கள்.. சிலருக்கு ரத்தமும் சேர்ந்து வரும்..இப்படி அந்த கசப்பு ஏரியா தாண்டியதும் இனிப்பு….ஜுப்பர்..


90’களில் யமஹா பைக் ஒரு கனவு எல்லோருக்கும்… கியர் வண்டிகளில் யமஹா தனி டைப் பைக்.. உர் உர் உர்ரென்று உறுமும் தன்மை பல பசங்களுக்கு பிடித்து போக காரணம்…டிவிஎஸ் சாம்ப்’யே பல வருஷம்? கற்று ஓட்டியவன் நான்…கியர் வண்டி என்றால் பத்தடி தூரம் நிற்கும் ரகம்..அப்படியாயினும் யமஹாவின் லுக்கும் உர் உர் உர்ரென்ற சவுண்டும் பிடித்தது என்னவோ தெரியலை… எப்படியாவது பழகிடனும் என்ற எண்ணத்திலேயே இருந்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது…நண்பனிடமிருந்தும் பழக தோன்றவில்லை…ஏனோ தவிர்த்து விட்டேன்… சமீபத்தில் சென்னையில் யமஹாவில் செம்ம ரவுண்டு அடித்து ஆசைகளை தீர்த்தாச்சு.. 


பேக்ரவுண்ட் ம்யூசிக்கை [BGM] கேட்பதில் அலாதி இன்பம்தான்… இளையராஜா தொடங்கி இன்றைய அநிருத் வரைக்கும் வெவ்வேறு வகையில் பிஜிஎம்கள் அப்படியே மயக்கும்…ரஹ்மான் பம்பாயில் கொடுத்த பிஜிஎம் இன்றளவிலும் கேட்க அவ்வளவு இனிமையா இருக்கும்.. ராஜாவின் தளபதி,ஆண்பாவம் பிஜிஎம்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை…இதில் லேட்டஸ்ட்டாக அநிருத் பட்டைய கிளப்பிட்டு வர்றார்… மூணு என்ற படத்தின் பிஜிஎம் அவ்ளோ பிரமாதமாக இருக்கும்…ரஹ்மான் ரிதம் பிஜிஎம் ரொம்ப ஸ்பெஷல்..மெல்லிசையாக அப்படியே மென்மையாகவே பிஜிஎம் கொடுத்திருப்பார்..இங்கே சில பிஜிஎம்கள் கொடுத்திருக்கிறேன்…கேட்டுட்டு சொல்லுங்கள்.

  

  

  

  

 


சிலர் எப்போதும் தன் மேல் கவனம் குவியனும் என்பதற்காக குட்டையை அல்ல கடலையையே குழப்புவார்கள்..அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் குழப்பிய விஷயம் எழுத்துரு..அதாவது தமிழை தங்க்லீஷில் எழுதி பழக சொல்கிறார்..மொழியை பொருள்பட உபயோகிக்க இந்த தங்க்லீஷ் உதவாது…இதற்கு மொழிப்பற்றாளர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்..என்னை பொருத்தவரை இந்த மாதிரி குழப்பம் விளைவிக்கும் எழுத்தாளர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பதே..இவர் சினிமாவுக்கும் வசனமெல்லாம் எழுதுகிறார்…தமிழிலும் மலையாளத்திலும்…இதே மாதிரியான எழுத்துரு குழப்பத்தை மலையாள மொழியில் கிளப்பினால் அண்ணனுக்கு சேட்டன்மார்கள் யார் என்று தெரிந்திருக்கும்…ஆனால் தமிழந்தான் தமிழை/தமிழனை திட்றவனை ஆதரிப்பானே…இந்த ஜெயமோகனை முற்றிலும் ஒதுக்கிடனும்..இதெல்லாத்தையும்விட இவரது அடிப்பொடிகள் அல்லது ஏஜெண்டுகள் குறைஞ்ச பேர் சோஷியல் நெட்வொர்க்குகளில் இருக்கிறார்கள்…எங்கெல்லாம் ஜெயமோகனை கிழித்து தொங்கவிடுறாங்களோ அங்கெல்லாம் போய் வாந்தி எடுப்பதே இவர்களின் தலையாய கடமை…இல்லாங்காட்டி குருவுக்கு என்ன மரியாதை.. இந்தமாதிரி சபை குழப்பும் எழுத்தாளனுக்கு சப்பைக்கட்டிட்டு வரும் இவங்களை என்ன சொன்னாலும் பத்தாது..

ஷார்ட் ஃபிலிம்… சொல்ல வந்த விஷயத்தை ஷார்ட்டா சொல்லனும்…சுவராஸ்யமா இருக்கனும்..சலிப்பு தட்டக்கூடாது..இவ்விஷயங்களை பத்து அல்லது எட்டு நிமிஷ ஷார்ட் ஃபிலிம்களில் கொண்டுவர்றது அவ்ளோ சாத்தியமில்லாதது…அதையும் சாத்தியப்படுத்தி சிலர் ஜெயிக்கிறார்கள்..அதில் இந்த ஷார்ட் ஃபிலிம் அசால்ட்டாக தட்டிச்செல்கிறது… முடிவு சூப்பர்..



க்ராவிட்டி..ஒரு கற்பனையான திரைப்படமாக தோன்றவில்லை..விண்வெளியை நாம் நேரில் பார்ப்பது போன்றே திரைக்கதை அமைத்திருப்பது இதுவரை இல்லாத ஒன்று.. விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு இவ்வளவு முக்கியம் கொடுத்து ஒரு அறிவியல் விஷயத்தை இவ்வளவு ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்க்கு இயக்குனர் அல்ஃபோன்சா க்யூரன் தான் முக்கிய காரணம்.. ஜார்ஜ் க்ளூனி மற்றும் சாண்ட்ரா புல்லக் பிரதான கதாபாத்திரங்கள்.. முப்பரிமாணத்தில் (3D) பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பது விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு கிடைத்த வெற்றி… ஆரம்பித்த நேரத்திலிருந்து கடைசி வரை நம்மை எங்கும் போகவிடாமல் தடுக்கும் திரைக்கதை உத்தி… இந்த வருஷத்தின் சயின்ஸ் ஃபிக்ஷன் வரிசையில் முதல் இடம் இதற்க்குத்தான்… சுஜாதாவின் ‘வானத்தின் ஒரு மெளன தாரகை’ கதையில் இதே மாதிரியான விண்வெளி வீரர் தன் எந்திரத்தின் கோளாறு காரணமாக தொடர்பற்று இருப்பார்…பல உள்ளடி வேலைகளால் அவருக்கு உதவ மறுப்பதாக கதை முடியும்.. அதை படித்திருப்பவர்களுக்கு இந்த கதை விஷுவலில் புரியும்… 3டியில் பார்ப்பதே சிறந்தது…நார்மலில் பார்க்காதீர்கள்..அதில் அதன் முழுமையை அனுபவிக்கமுடியாது..

சூப்பர் சிங்கரில் எப்போதும் அருமையான பாடல்கள் படிக்கப்பட்டு இருந்தாலும் இந்த சிறுமி குரலில் இந்த பாடல் தேனாய் இனிக்கிறது..மெய்மறக்கலாம் நம்பி…அருமை…அருமை…
 

துல்லியமா கேட்ககூடிய ஹெட்செட்டை காதில் பொருத்திக்கொள்ளுங்கள்.. பக்கத்தில் இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்… ஆவி பறக்க ஒரு கப் டீயை வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த ம்யூசிக்கை கேளுங்கள்… எட்டே நிமிஷத்தில் சந்தோஷம்,உற்சாகம்,சோகம்,நினைவலைகள் என நவரசங்களை பிழிந்து தருகிறது இந்த இசை… சான்ஸே இல்லை என்பேன்… கேட்டு முடிந்து இப்போ டீ’யை பருகுங்கள்..அந்த மாதிரி ஃப்ரெஷ் ஃபீலை அனுபவிக்கலாம்…
   


என்றும் அன்புடன்
A.அஹமது இர்ஷாத் 

Post Comment

ஹஜ்ஜுப் பெருநாளும் சிந்தனையும்...


னைவருக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும் இதயங்கனிந்த ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்..!
.................
சிந்தனை ஓட்டங்கள் அளவுக்கு மீறி ஊறினாலும் எழுத முடியாத ஒரு சின்ன இடைவெளி இங்கு விழுந்தமைக்கு சேர்ந்தார்போல் கூடிய விரைவில் நல்ல தருணத்தில் உங்களையெல்லாம் சந்திக்கிறேன்..என்னை நம்பி படிக்க இங்கு வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி..இந்த அற்புதமான மனம் மயக்கும் பாடலை கேளுங்கள்..அப்படியே கொண்டு செல்லும்...ஆங்கிலத்தில் Awesome என்ற வார்த்தையை ஒரு லாரி நிறைய கொண்டு சென்று இதை படித்தவருக்கும் இசையமைத்தவருக்கும் தாராளமாய் கொடுக்கலாம்..வாரே வாஹ்ஹ்...அற்புதம்..
  

 
அன்புடன்,
A.அஹமது இர்ஷாத்

Post Comment

ஜெம்ஸும் பத்தாத சட்டையும்..

Photo: SankaraNarayanan

மெரீனா..தமிழ்கூறும் நல்லுலகில் அனைவரும் போயிருக்ககூடிய சாத்தியம் இருப்பதால் எல்லோரும் அறிந்து இருக்ககூடிய நீளமான கடற்கரை..ஏற்கனவே போயிருந்தாலும் கடந்தமுறை போயிருந்தேன்..அடிக்கிற காற்றில் மட்டும் கலப்படம் இல்லை.. குதிரை சவாரி,சுண்டல் விற்பனை,ஐஸ்க்ரீம் என வழக்கமான காட்சிகள் ரிப்பிட்டேஷனில் தொடர்ந்து அடிக்கிறது கண்களை..தள்ளுவண்டியில் விற்கும் மாங்காய் கீத்துகளை பார்த்ததும் நாவில் சுவையேறி நாலு கீத்து வாங்கிட்டு ஐம்பது ரூபாயை கொடுக்க பரீட்சை ஹாலில் மாட்டிக்கிட்ட ஸ்டூடண்டை பார்க்கிற மாதிரி பார்த்தார் அந்தக் கடைக்காரர்..

‘என்னங்க’

‘எம்பது ரூவா சார்’

மாங்காய் மரத்துக்கும் சேர்த்த விலையை சொல்கிறார்..அவரும் அவர்க்கு பிடிச்சதை வாங்கும்போது அந்த கடைக்காரரும் பகீர் விலையை சொல்வார் இல்ல...அப்ப விளங்கட்டும்னு சொல்லி விட்டுட்டேன்..வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு வேற சொல்றாங்களே...மணலுக்கும் செருப்புக்கும் சரியான சண்டை, முடிவில் மணல் ஜெயித்து செருப்பு போட்டிருந்த எங்களை தன் மடியில் உட்காரவைத்தது செருப்பையும் தாங்கிக்கொண்டே... எங்கேயும் உட்கார முடியாதபடி ஆங்காங்கே மணலை அழுக்காக்கி வைத்திருந்தது மனித சமூகம்..பத்தாதுக்கு நாய் சமூகமும் ஆங்காங்கே ஒன்னாம் நம்பரும் ரெண்டாம் நம்பரையும் போயி மனுச பயலுவளுக்கு நாங்களும் சளைத்தவரில்லையென்று ‘வாசத்திலேயே அடிச்சி சொல்லியிருந்தது...

முட்டி வரை பனியன் போட்ட பையன் யாராவது சுண்டல் கொண்டு வருவானே என்று எண்ணியிருந்தபோது.... நிறுத்து... இது 2013 வருஷம் இன்னும் போன நூற்றாண்டுலேயே இருந்தா எப்படின்னு முட்டி பனியனை கடாசிவிட்டு டீசர்ட்டில் இருந்தான் ஒரு பையன்.. சுண்டல் வாங்கிட்டு அவன் போன பத்து நிமிஷம் சொச்சத்தில் பஞ்சுமிட்டாய்க்காரன் வந்துட்டான்..வாங்குற ஐடியா இல்லை என ஜாடையில் சொன்னேன்.. போய்ட்டான்..!! தொழிலுக்கு புதுசு போலிருக்கு.. குடும்பத்தோடு போனதால் மகனின் கேள்விக்கு பதில் சொல்லிட்டே இருந்தேன்.. ரெண்டு மணி நேர பவர்கட், இப்படி காத்தாட பீச் போன்ற செளகரியங்கள் சென்னைவாசிகளுக்கு.. பல கலர், பல அடையாளங்களோடு ஒரு மில்லியன் மக்களை அடக்கிகொண்டு பெரூமுச்சு விடுகின்றது சென்னை..
 -----------------------------------
திகாலை பறவைகளின் கூக்குரலும், நாய்களின் சோம்பல் முறிப்புகளும் பார்க்கப்பட்டு பழக்கப்பட்ட சமயங்களில் தினந்தந்தி வாங்க பிஎஸ் ஏ சைக்கிளில் மெயின் ரோட்டுக்கு போவேன்..போற வழியிலேயே பழஞ்செட்டி தெருவில் திமுக கரைவேட்டி கட்டிய சாத்தையன் தந்தி,தினகரன்,குமுதம் வெச்சிருப்பார்...அஞ்சே முக்கால் மணிக்கு காரைக்குடி போகும் ராஜா பஸ் வரும்..பட்டுக்கோட்டையிலிருந்துதான் பேப்பர் வரும்.. வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளின் தந்தி சீக்கிரம் வித்துப்போயிடும்.. இலவச இணைப்புகளுக்காகவே அப்படி..கலர்ஃபுல் சினிமா,இன்னபிற செய்திகளையும் கொஞ்சம் விலாவாரியாக,லோக்கல் செய்திகளை போடுவதாலும் தினந்தந்திக்கு முதலிடம்...கொஞ்சம் கலகலப்பான பார்ட்டிகள் தினமணி படிக்கமாட்டார்கள்.. ‘அது ஏம்ப்பா கரையான் அரிச்ச மாதிரி இருக்குது’ என்பார்கள்..பெரும்பாலும் மெயின் செய்திகளை மட்டும் பப்ளிஷ் செய்யும் தினமணி..வாஜ்பாயை வாஜ்பேயி என்றெழுதி பயமுறுத்துவார்கள்..தினந்தந்தி வெள்ளி மலர்க்கு மார்க்கெட் சலூனில் நான் நீ என்றிருக்கும்..அதேபோல் குடும்பமலருக்கும்..ஆக எப்படி பார்த்தாலும் தந்தியே முந்தி நின்றது உண்மை...அப்படி பேப்பரை வாங்கிட்டு கேரியரில் மடக்கி வெச்சிட்டு கெளம்பிடுவேன்..போற வழியில் சேர்மன்வாடி பஸ்ஸ்டாப் நாயக்கர் கடையில் ஒரு டீ..அந்த பஸ்ஸ்டாப்பில் குழவி புகையலை வெத்திலை சகிதமாக பெண்களும், செய்யது பீடியை புகைச்சுக்கிட்டே குந்தின மாதிரி உட்கார்ந்திருக்கிற ஆண்களை பார்க்கலாம் அந்த ஆறரை மணி வாக்கில்.. எல்லோரும் மேஸ்திரி,கொத்தனார்,சித்தாள்கள்..சரியாக எட்டு எட்டரைக்கெல்லாம் தஞ்சாவூர் போகும் பஸ்ஸு வரும்போது குருவிகூட்டில் கல்லெறிந்தது போல் அந்த கூட்டம் ஆளுக்கொரு திசையில் போயிருப்பார்கள் வேலைக்கு..

திரும்ப பத்து பத்தரை வாக்கில் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க போவேன்..எல்லா நாளும் அல்ல எப்பவாவது..பன்னா, கெழக்கன் என கூறுபோட்டு விற்பார்கள்...கூறுக்கு இருபது ரூபாய் என்றிருக்கும்..மீன் விஷயத்தில் ஜெனரல் நாலேட்ஜ் எனக்கு கம்மி...அழகாய் பளிச்சென்று இருக்கும் மீனை வாங்கிட்டு வந்து வீட்டுல திட்டு வாங்குவேன்.. இறால் என்றால் கொள்ளை ப்ரியம் [நம்ம ஊரு பாஷையில் ‘ராலு ] இங்கே கேஎப்ஸியில் இருபத்தி அஞ்சு ரியாலுக்கு இறாலோடு செவன் அப்பையும் சேர்த்து வைக்கிறார்கள்..படு திராபை.. இறால் பத்து ரூபாய்க்கு கூறு இருக்கும்..அடுத்த செக்‌ஷன் காய்கறி... தெரிந்தவர், ரொம்ப தெரிந்தவர் ரெண்டு கேட்டகிரியில் காய்கறிகடைக்காரர்கள் எனக்கு பழக்கம்.. தெரிந்தவரிடம் போனால் ரொம்ப தெரிந்தவர் முறைக்கிற மாதிரி இருக்கும்..இப்படி பல படிகளை கடந்துவிட்டு மீன் உள்ள கீஸ் பையை [ப்ளாஸ்டிக் பையை எங்க ஸ்லாங்கில் ‘கீஸ்’ பை என்றழைக்கிறார்கள்..இந்த வார்த்தை எப்படி வந்ததென பிறகு விளக்குகிறேன்] பைக் ஹேண்ட் பாரில் கொழுவிவிட்டு கிக்கரை உதைத்த கொஞ்ச நேரத்தில் போய் நிற்குமிடம் எம் பி சர்பத் கடை மெயின்ரோட்டில்..ரோஸ்மில்குக்கும் பாதாம்கீருக்கும் பேமஸான கடை அப்பெல்லாம்..வெயில் காலங்களில் கூட்டமிருக்கும்... அங்கே நின்று குடிக்காமல் பார்சல் வாங்கிட்டு போய்டுவேன்...ரொம்ப தாகம் அல்லது குடிச்சாகனும்னு மனசு சொன்னால் க்ளாஸில் குடித்துவிடுவேன்... பல நேரங்களில் மனசு சொல்வதை புத்தி கேட்பதில்லை.. இன்னொரு பார்சல் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சட்டையை கழட்டிட்டு பனியனோடு நாற்காலியில் உட்கார்ந்து ஃபேனை அஞ்சுல வெச்சுட்டு உஸ்ஸுன்னு ஊதும்போது மணி பதினொன்னு அம்பதாகியிருக்கும்..மரம்,குளம் போன்ற இயற்கை பிரதிநிதிகள் ஊருக்கு மையத்தில் அமைந்திருப்பதால் வெயில் நேரங்களிலும் லேசான காற்று இருக்கும்..
-----------------------------------
பெரும்பாலும் சாயங்காலம் ஆறு மணியிலேர்ந்து ஏழுவரை வரை கொசுக்களின் படையெடுப்பு பயங்கரமாய் இருக்கிறது ஊரில்..ஓவர் சைஸ் கொசுக்கள்..பெண் கொசுக்கள்தான் கடிக்குமாம் (கொசுக்களிலுமா..!) பஸ்ஸ்டாண்ட்டை ஒட்டி தெரிந்தவர் கடையில் சாயங்கால நேரங்களில் நேரம் கிடைக்கும்போது போறதுண்டு..மணி ஆறரை இருக்கலாம்...பைக்கை ஓரங்கட்டிட்டு நின்று பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே என்னால் நின்று பேசமுடியாதளவுக்கு கொசுக்கடி..கடிதாளாமல் உடம்பை ‘வைப்ரேஷனில் வைத்திருக்கவேண்டிய நிலை.. அவர் சிரிச்சுக்கிட்டே,

‘நீங்களெல்லாம் ஃப்ரெஷ்ஷா வர்றீங்கள்ல அதான் டேஸ்ட் பார்க்குது’

அதாவது கொசு இல்லாத ஏரியாவில் இருக்கிறோமில்லையா அதை சொல்கிறார்... கொசுவுடைய கூட்டாளி முட்டை பூச்சி அங்கே இருக்கிறாப்டி...ஆக எங்க போனாலும் கடி உறுதி.. ரொம்ப ப்ராக்டிக்கலான மனிதர்.. பேச்சும் அப்படித்தான்..

‘அந்த புக்கு படிச்சியளா?’

‘எந்த புக்க சொல்றிய?’

‘அதான் விகடன்லேர்ந்து வருதே, பாஸ்னு வருமே’

ஆமா டைம்பாஸ்ன்னு ஒரு புக்கு வருது...அத படிச்சா என்ன படிக்காட்டி என்னங்க..சரியில்லையே’

‘அப்படி இருந்தாத்தான் புக்கு விக்குது..இப்பத்தான் எல்லாத்தையும் நெட்ல பார்த்துடுறானுவள... அதையும் மீறி புக்கு வித்தாவனும்ல... கொசுவத்தி விக்கனும்னா கொசு கடிச்சாவனும்ல.. அதே மாதிரிதான் இதுவும்ன்னார்...

மெலிதாக சிரிச்சேன்..இயல்பாய் பேசினாலும் கோபமும் ஆற்றாமையும் யாரையோ நோக்கி பாய்கிறது..

பவர்கட் பற்றி யாரிடமும் விசாரிக்க முடியாதளவுக்கு பெரும் அதிருப்தியை காண முடிகிறது எங்க ஏரியாக்களில்..அந்த கோபத்த எதில் காட்டுவார்கள் மிஞ்சிப்போனால் வர்ற எம்பி எலக்‌ஷனில் காட்டமுடியும்..அதுவும் கரண்ஸிக்கு மயங்கி அதே கட்சிக்கு ஓட்டுப்போடுறதும் நடக்கும்...மெட்ராஸிலே ரெண்டு மணி நேர பவர்கட்ன்னு அங்கே வாடகை வீட்டிலாவது குடியேற சில பேர் நினைக்கிறார்களாம்...சொல்றதுக்கு ஒன்றுமில்லை...அங்கே வீட்டு ஓனர்களை சமாளிக்கிறதுக்கு இங்கே கொசுக்கடிகளையே சமாளிக்கலாம்.. இப்படியாக எப்போதுமில்லாத அளவில் கடும் புழுக்கத்துடன் மக்கள் இருப்பது வேதனையான விஷயம்..கரண்ட் வர்றதை ஏதோ வாணவேடிக்கையை போல கொண்டாடுகிறார்கள் சிறுவர்கள்...பணம் படைத்தவனும் கஷ்டப்படும் சூழ்நிலை அங்கே...முன்னாடியெல்லாம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பு,சாப்பாடு போன்ற விஷயங்களுக்கு சம்பாதிக்கிறவர்கள் இப்போ இன்வெர்ட்டர் அதுவும் தரமான இன்வெர்ட்டருக்கு சேர்த்து சம்பாதிக்கோனும்...நிலைமை அப்படி..
-----------------------------------

கல் சாப்பாட்டு சமயங்களில் தஞ்சாவூரில் இருக்க நேர்ந்தால் நேராக சத்தார்ஸ்க்கு போய்டுறது என் வழக்கம்..பிரியாணியை விட பரோட்டாவில் டேஸ்ட் இன்னும் அதிகம்..பரோட்டா வித் சிக்கன் மஞ்சூரியன் அல்லது மட்டன் வகையோடு சேர்த்து சாப்பிடுகிற சுவை நன்றாக இருக்கும்.. பெரிய குறை சப்ளையர்கள் லேட்டாக சர்வ் பன்றது..வரவும் மாட்டேன் என்கிறார்கள்..வரும்போதே பிடிச்சிடனும்...விட்டா விக்கியிலேகூட பிடிக்கமுடியாது..நான் முன்னமே சொன்னதுதான்.. சாப்பாடு நல்லாயிருந்தா சப்ளையர்கள் சர்வீஸ் நல்லா இருக்காது, சப்ளையர்கள் பரீட்சை ஹாலில் வலம் வரும் வாத்தியார்மாதிரி சுத்தி சுத்தி வந்தால் சாப்பாடு அவ்ளோ விசேஷமாக இருக்காது...அப்படி இருந்தால் ரொம்ப ரேர்..மற்றபடி வேறெந்த குறையும் சொல்ல முடியாதபடி தனித்துவமா விளங்குகிறது இந்த ஹோட்டல்.
----------------------------------- 
லைவலி என்பது வியாதி இல்லை அது உடம்பில் ஏற்படும் சிம்டெம்ஸ்தான் என்கிறார் டாக்டர்.கீர்த்தனா..மனித வாழ்வில் ஆரோக்கியத்தில் என்னவெல்லாம் பின்பற்றினால் என்ன பலன்களை பெறலாம் என நிறை குறைகளை அலசுகிறது இந்த பேட்டி.. ’நேச்சுரோபதி’ [தமிழில்: இயற்கை மருத்துவம்] இதில் முக்கிய அம்சமே ‘வித் அவுட் மெடிசின்’ வகை.. அதாவது காய்ச்சலோ, தலைவலியோ,முட்டிவலியோ,தூக்கம் வராதது என எதற்க்கும் மாத்திரை மருந்துகளை எடுக்காதீர்கள் என்று சொல்லிவிடுகிறார்கள் இவர்கள்... இதில் சர்க்கரை வியாதி மற்றும் ஹை பிபி’க்கு மட்டும் விதிவிலக்கு...அதாவது மாத்திரை மருந்துகளை தொடரலாம் என சொல்கிறார் இவர்.. முப்பது நிமிஷம் ஓடக்கூடிய வீடியோவில் பல தகவல்களை மருத்துவ ரீதியான ஆச்சரியப்படுத்தும்படியாக சொல்கிறார்... மாத்திரை மருந்தில்லாமல் எப்படின்னு நானே யோசிச்சேன்..ஆனால் இவர்கள் சொல்ற வழிமுறைப்படி போனால் பாடாவதி மாத்திரை மருந்து இன்ஜெக்‌ஷன்களிலிருந்து விடுதலை... உங்களிடம் எவ்வளவு பீஸ் என்றெல்லாம் ஒரு டிவி ப்ரோக்ராமில் கேட்ககூடாதுதான் என்றாலும் இந்த சன்டிவி காரர்கள் கேட்கிறார்கள்..அதற்க்கு என்ன பதில் என்பதை அங்கே காண்க... தவறாமல் பார்க்கவேண்டிய காணொளி... தெளிவான உரையாற்றல்...பாமரனுக்கும் புரியக்கூடிய வகையில் விளக்கம் அளிக்கிறார் டாக்டர்...  

-----------------------------------

 நானெல்லாம் சீரியல் பார்ப்பேன்னு கனவில்கூட நினைச்சதில்லை.. பாடாவதி ‘தென்றல்’ என்ற சீரியல் பார்க்காமலும் இருக்கமுடிவதில்லை... அதற்க்கப்புறம் இப்ப விஜய் டிவியில் ‘ஆபீஸ்’ என்ற சீரியல் பார்த்து வருகிறேன்.. கொஞ்ச நாள் முன்பு இதன் டீசர் அடிக்கடி போட்டார்கள்..நல்லாருக்கேன்னு பார்த்தால் ஆரம்பம் எல்லாம் நல்லா இருந்தது, இடையில் ஒரு வில்லேஜ் கேரக்டரை கொண்டுவந்து படுத்தி எடுக்கிறார்கள்..மெதுவடை நல்லாருக்கேன்னு பார்க்க போய் லஞ்ச் சாப்பிட்டுட்டு வந்த கதையா போச்சு..இது பத்தாதுன்னு சேல்ஸ் டீம்’ன்னு ஒரு குரூப்பு அடிக்கிற மொக்கையில காது ஜவ்வு எல்லாம் கிழியுது.. தொடர்ந்து பார்க்க ஒரே காரணம் விஷ்ணு என்ற கேரக்டர்தான்..அந்த கேரக்டருக்காவது பார்க்கலாம்னு இருக்கேன்..
----------------------------------- 
பாத்ரூம்ல என்ன இருக்கிறது என்ற அறிவுப்பூர்வமான? கேள்வியோடு வரும் விளம்பரங்களுக்கு மத்தியில் இண்ட்ரெஸ்டிங்கா திரும்பவும் பார்க்க தூண்டும் சுவராஸ்யத்துடன் வந்த இந்த ஜெம்ஸ்’ விளம்பரம் வந்தாலே நான் சேனலை மாற்றுவதில்லை...எந்த வித லாஜிக் இல்லாமல் வரும் விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த விளம்பரம் அருமை... நீங்களும் பார்த்தால் திரும்ப பார்க்க தூண்டலாம்...பாருங்கள்..
   
----------------------------------- 
மீபத்தில் மனதை பாதிக்க செய்த புகைப்படம்:

கண்களில் தெறிக்கிறது குறும்பு பத்தாத சட்டையிலும்..



----------------------------------- 
அன்புடன்

அஹமது இர்ஷாத்

Post Comment

பாக்கெட் மணியும் பாலிதீன் பையும்..


--
கிண‌றுக‌ளில் இருக்கும் த‌ண்ணீர் இன்ப‌மாக‌ இருக்கும்; வீட்டு தேவைக‌ளுக்கும்,குளிய‌லுக்கு உத‌வ‌க்கூடிய‌ வ‌கையில் இருந்த‌வை இன்றைக்கு இப்ப‌டித்தான் இருந்த‌து கிண‌று என்று வ‌ரைந்து காட்ட‌ வேண்டிய‌ சூழ‌ல்; சாதார‌ண‌மாக‌ ப‌த்து அடி ஆழ‌த்திற்க்கு மேல்தான் இருக்கும்; முன்பெல்லாம் ம‌ழைக்கால‌த்தில் குள‌ம்,கிண‌று எல்லாம் நிறைந்து போதும் போதும் என்ற‌ள‌வுக்கு ம‌ழை கொட்டித் தீர்த்த‌து; ம‌ழை பெய்த‌ அந்த‌ காலை ம‌ண்ணெல்லாம் ஒருவித‌ ஈர‌ப்ப‌த‌த்தோடு ம‌ண்வாச‌மும் ம‌ண‌க்க‌ ம‌ன‌தினுள் ஒரு குளுமை ஆட்டோமேட்டிக்காக‌ குடி கொள்ளும்;

பால் என்ற‌ப‌டி சைக்கிளில் பால்கேனை க‌ம்பியால் த‌ட்டி ஒலியெழுப்பும் பால்கார‌ர்; ரெண்டு உள்ள‌ங்கைக‌ளையும் தேய்த்த‌ப‌டி வ‌ரும் அடுத்த‌ வீட்டுக்கார‌ர்; ச‌ட்டையை அக்குளில் வைத்து க‌ன‌மான‌ ப‌னிய‌னை போட்டு த‌லையில் துண்டை க‌ட்டிய‌ப‌டி வ‌ரும் கொத்த‌னார் என‌ அன்றைய‌ பொழுதுக‌ளில் ப‌ல‌வ‌ற்றை காண‌லாம் சொல்ல‌லாம்; ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்த‌ காலையில் கிண‌று நிர‌ம்பியிருக்கிற‌தா என்ற‌ ஆவ‌ல் ஏற்ப‌டும்; போய் பார்த்தால் கிண‌ற்றின் க‌ழுத்து வ‌ரை த‌ண்ணீர் ஏறி கிண‌ற்றின் த‌ண்ணீரில் முருங்கைக்காய் இலை மித‌ப்ப‌தையும், நீண்ட‌ கால்க‌ளையுடைய‌ த‌ண்ணீரில் ஓடும் பூச்சி ஓடுவ‌தையும் பார்க்க‌லாம் [அந்த‌ பூச்சி பேர் தெரிய‌வில்லை]; த‌ண்ணீர் கை எட்டும் தூர‌த்தில் இருப்ப‌தால் க‌யிற்றின் துணையின்றி நேர‌டியாக‌வே த‌ண்ணீர் அள்ளும் செள‌க‌ரிய‌ம் இருந்த‌து;

ஜில் ஜில்லென்று அதிக‌ குளிரில் இருக்கும் அந்த‌ த‌ண்ணீர்; ப‌ட‌க்கென்று குவ‌ளையில் த‌ண்ணீரை எடுத்து உட‌ம்பில் ஊற்ற‌ முடியாத‌ அள‌வுக்கு த‌ண்ணீர் குளிர்ந்து இருக்கும்; அத‌னால் ஒரு குவ‌ளை த‌ண்ணீர் (எங்க‌ ஸ்லாங்கில் சொன்னால் 'மோண்டுட்டு வா' என்பார்க‌ள், அதாவ‌து 'மோண்டு என்றால் 'த‌ண்ணீரில் குவ‌ளையை முக்கி எடுத்துட்டு வா என்று அர்த்த‌ம்) முத‌லில் ஒரு கைக்கு ஊற்றிவிட்டு அப்புற‌ம் ம‌றுகைக்கு ஊற்றி மெதுவாக‌ த‌லைக்கு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ஊற்றி ஊற்றி குளிச்சு முடிய‌ற‌துக்குள் ஸ்கூலில் இன்ட‌ர்வெல் பில் அடித்துவிடுவார்க‌ள்; அதே போல் இர‌வினில் வான் நிலாவை கிண‌ற்று த‌ண்ணீரில் பார்த்தால் அற்புத‌ த‌ருண‌மாக‌ இருக்கும் என‌ கேள்விப்ப‌ட்டிருக்கேன் ஆனால் பார்த்த‌தில்லை; இனிமே அடாப் ஃபோட்டோஷாப்பில் பிர‌மாத‌மாக‌ பார்க்க‌லாம்; வ‌டிவேலு 'கிண‌த்த‌ காணோம் என் கிண‌த்த‌ காணோம்'னு போலீஸ் ஸ்டேஷ‌னுக்கு ஓடி வ‌ருவார், அதே போல‌தான் இன்னைக்கும் நிலைமை ப‌ல‌ கிண‌றுக‌ளை தூர்த்து விட்டார்க‌ள்; வ‌டிவேலு பாஷையிலேயே சொன்னால் 'சார் கிண‌த்த‌ எங்கேயுமே காணோம் சார்';

----------------------------------------------------------------------------------------------------------

ரப்பர் மிட்டாய் என்பது என் சிறுவயதில் படுபிரபலம்; ஒரு நீண்ட தடித்த கம்பு அதில் பாதி கம்புலேர்ந்து மலைப்பாம்பு உடலைபோல் வளைந்து ஒட்டப்பட்டு வைத்திருக்கும் இனிப்பு சொர்க்கம்; ரோஸ்,பச்சை,வெள்ளை என கலர்கள் பின்னி பிசைந்திருக்கும் அந்த ரப்பர் மிட்டாயில் வாட்ச் செய்து தருவார்; அதை என் கைகளில் ஒட்டிவிடுவார்; அதை கையில் ஒட்டியதும் வரும் பாருங்க ஒரு சந்தோஷம்; டுர் டுர் டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ரெண்டு கையையும் பைக் ஓட்டுவது மாதிரி முறுக்கிக்கிட்டு அரைக்கால் டவுசரோடு ஓடியது இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது; கையில் ஒட்டிய வாட்சை சாப்பிடாமல் வைத்திருந்து சாயங்காலம் சாப்பிட்டு இருக்கிறேன்; ரப்பர் மிட்டாய்க்காரர் தெருவிற்க்குள் வந்தால் ஒரே குதூகலம்தான்;அதேபோல் காசு மிட்டாயும் பிரபலம்; அதாவது ரோஸ் கலர் மிட்டாயை சிறிய அதற்கேற்ப பிளாஸ்டிக்கில் சுருட்டி வைத்திருப்பார்கள்; அஞ்சு பைசா அல்லது பத்து பைசா விலை; அந்த மிட்டாயை சப்பி சப்பி காசு இருக்கிறதா இல்லையான்னு பார்த்தே ஓய்ந்துடுவோம்; ரொம்ப எக்ஸைட்டிங்கான மூவ்மெண்ட் அது; காசு தட்டுப்பட்டால் ரவுசு தாங்காது; ‘ஹேய் எனக்கு வந்துருச்சுல்ல வந்துருச்சுல்ல’ என யாருக்கு காசு வருதோ அவன் கொண்டாடுவான்;அழகான அருமையான நினைவுகள் அவை; மாங்காய் கீத்து கீத்தா சீவி அரிசி பொடியோடு தொட்டு சாப்பிடுறது 'வெளி தீனிகளில் ஃபர்ஸ்ட் ஆக இருந்தது சின்ன வயசில்; அதற்க்கு அடுத்த வெளி தீனிகளில் கல்கோனாதான் அதிகம்; மறக்க முடியாதது; கூகிளான் உதவியோடு இந்த படத்தை பார்க்கும் போது முதல்வன்'ல சுஜாதா வசனம்தான் நினைவுக்கு வருது;

'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'

----------------------------------------------------------------------------------------------------------
பாக்கெட் மணி’ பத்தின நீயா நானா விவாதம் பார்த்தேன்; பாக்கெட் மணி கொடுக்கிறது ஒரு சோஷியல் ஆக்டிவிட்டி சார்’ங்குது ஒரு பொண்ணு; இப்பவே இப்படி இருக்கு நிலைமை; என் மகன் வயசு நாலு; சைக்கிள் கேட்கிறான் வாங்கி கொடுத்தாச்சுங்கிறது அடுத்த விஷயம் ஆனா காலேஜ் போற நேரங்களில் என்ன வாங்கி கேப்பானோ என நினைக்கும்போது பகீர்’ன்னு இருக்கு; வர்ற/வளர்ற ஜெனரேஷனை நினைச்சா பிள்ளைகள் பெறும் ஆசையே தோன்றாது போலிருக்கு; ஒரு நேரத்தில் ஏன் இப்பகூட ‘குழந்தையில்லாத/ ஒரு குழந்தை மட்டுமே உள்ள எந்த தம்பதிகளையும் ‘ஏன் குழந்தையில்லை/ அடுத்த குழந்தை எப்ப’ன்ற கேள்வியெல்லாம் மறைந்துவிட்டது என்பது நிதர்சனம்;
----------------------------------------------------------------------------------------------------------

போன மாதம் ஒருநாள் மாலை ஆறரை மணி அளவில் எங்கள் அலுவலகம் அருகில்; டபுள் டோர் மட்டுமே கொண்ட கார் இது; ஒரு பெண் ஐந்து மாத குழந்தையை பின் சீட்டில் வைத்தப்படி காரை ஓட்டி வந்திருக்கிறாள் அவள வீட்டிலிருந்து அவளுடைய சகோதரி வீட்டிற்கு (எங்கள் அலுவலகத்தின் பக்கத்திலிருக்கிறது அச் சகோதரி வீடு) வந்து காரை நிறுத்தி டிரைவிங் சீட்லேர்ந்து இறங்கி கார் கதவை திறந்தபடியே வைத்துவிட்டு சகோதரி வீட்டின் கதவை தட்ட கொஞ்சம் இடைவெளியில் (100 மீ) இருக்கும் வீட்டின் கதவை தட்டுவதற்க்குள் இங்கே கார் கதவு காற்று அடித்ததில் பூட்டிக்கொண்டது; சைல்ட் லாக் செய்திருக்கிறாள் கார் சாவியும் உள்ளே குழந்தையும் உள்ளே; என்ஜினும் ஆஃப் செய்யப்பட்டு உள்ளே ஏசியும் ஆஃப்; மொபைலும் உள்ளே மாட்டிக்கொண்டது; யாரை கூப்பிடுறது என்றே தெரியாமல் எங்கள் அலுவலகத்தில் வந்து ஹெல்ப் ப்ளிஸ் என்றதும் எல்லோரும் ஓடிப்போய் பார்த்து அவசர அவசரமாக ஸ்க்ரூ ட்ரைவர் மற்றும் இதர ஸ்பேர் பார்ட்ஸுடன் எங்கள் டிரைவர் வரவழைக்கப்பட்டு முதலில் கார் கண்ணாடியில் சுற்றி இருக்கும் ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் கிழிக்கும் பணி ஆரம்பாகி விடுவதற்க்குள் உள்ளே குழந்தை அழ ஆரம்பிக்க தாயும் அழ ஆரம்பித்து விட்டாள்; அவளை தேற்ற வார்த்தையில்லை; அடுத்த இருபத்தைந்து நிமிஷத்தில் கார் கண்ணாடியையும் நாலு பேர் முழு பலம் கொண்டு கீழே இறக்க அந்த தாயின் ப்ரார்த்தனையும் மற்றும் அனைத்து நண்பர்களின் முயற்சியில் திறந்தது; அக் குழந்தையை தூக்கி அதன் உச்சிதனை முகர்ந்து ஆனந்த கண்ணீரை விட்டாள் அந்த சகோதரி;

எங்களுக்கு கண்கள் பணித்தது.

----------------------------------------------------------------------------------------------------------
சென்னையிலிருந்த நேரங்களில் அதிகம் பயணம் செய்தது எலெக்ட்ரிக் ட்ரெய்ன்களில்தான்; பல்லவன் பேருந்துகளில் பெரும்பாலும் இல்லை; பீச் ஸ்டேஷனில் ஆரம்பித்து தாம்பரம் வரை அதிகமாய் போயிருக்கிறேன்; கண் தெரியாத பாடகர், கடலை விற்பவர், கடலை போடுபவர், ஜன்னலோர சீட்டுக்கேட்டு அடம்பிடிக்கும் சிறுவர்கள், ஜன்னல் வழி தெரியும் சரவணா ஸ்டோர்,ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்,ரத்னா ஸ்டோர் என தாம்பரம் சானிடோரியம் வரை போற வேகம்,நேரம் தெரியாது; அருமையான அனுபவம்; சென்னைக்கான வேகமான வாழ்க்கையில் மனிதர்களின் பரபரப்போடு எலெக்ட்ரிக் ட்ரெய்ன்கள்; --------------------------------------------------------------------------------------------
  
மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் ஹிட்சாக்கின் ‘STRANGERS ON A TRAIN’ இப்ப பார்த்து முடிச்சேன்; ஸ்க்ரீன்ப்ளே சான்ஸ்லெஸ்; என்ன மாதிரியான முடிச்சுகள் எப்படி எங்கே யாரால் அவிழ்க்கப்படுகிறது என்பதை லாவகமாக சொல்வதில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை; குட் எண்டர்டெய்னர்; சூப்பர்;
--------------------------------------------------------------------------------------------
பக்கம் பக்கமா எழுதுவதை ஒரு கார்ட்டூனில் சொல்லமுடியும் என நிரூபிக்கும் கார்ட்டூன்; ஹேட்ஸ் ஆஃப் டூ கார்ட்டூனிஸ்ட்;

 -------------------------------------------------------------------------------------------- 
 படித்ததில் பிடித்தது:

1) 'வாழ்க்கை என்பது எப்படி இருக்க வேண்டும்?'

''வைரமுத்து எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, 'ஒவ்வொரு நாளும் மலச்சிக்கல் இல்லாமல் தொடங்க வேண்டும், மனச்சிக்கல் இல்லாமல் முடிய வேண்டும்!' ''

- அ.சுசிலா, தஞ்சாவூர்.

.........
2) முரண்'  என்பதற்கு உதாரணம்?

'பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி எனச் சொல்லிவிட்டு, மரக்கன்றுகளை நட பாலிதீன் பைகளிலேயே மரக்கன்றுகளை வைத்துக் கொடுப்பது!'

- என்.சீதாலெஷ்மி, சென்னை. @விகடன் நானே கேள்வி நானே பதில்.

.........

3) சுஜாதாவின் பதிலில் இருக்கும் நக்கலை பாருங்கள் :)

கேள்வி: ஆங்கிலத்தில் 'POUR' என்றால் தமிழில் 'வார்' (வார்த்தல்) என்றாகிறது; இதுபோல் வேறு மொழி வார்த்தைகள் இருக்கின்றனவா? [ராணி...ஈரோடு]

பதில்: 'பனி என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் தெரியும்; அதே சொல்லுக்கு தெலுங்கில் 'வேலை' என்று அர்த்தம்; மலையாளத்தில் 'காய்ச்சல்' என்று பொருள்; 'தமிழ்ப் பனியில் தெலுங்கு 'பனி செய்தால் மலையாளப் பனி' வரும்.

.........

4) சலூனில் கழுத்து முதல் கால்வரை மூடியிருக்கும்போது மூக்கில் அரிக்கும் பாருங்க அதுக்கு பேர்தான் கொலவெறி.

......... 
5) EB'க்கு போன் போட்டு கரண்ட் எப்ப வரும்னு கேட்டா உன் மொபைல்ல இன்னமும் சார்ஜ் இருக்கான்னு கேட்கிறான்.

.........   
பிடித்த புகைப்படம் ஃபேஸ்புக்கிலிருந்து:



அன்புடன்,

அஹமது இர்ஷாத்


Post Comment

ப்ளாஸ்டிக்கும் இன்பாக்ஸும்..


Thanks For Photo Hall's

என்னுடைய‌ ஆல்டைம் ஃபேவ‌ரிட் ஸ்பாட் ர‌யில‌டி.. ஊரிலிருந்த‌ ச‌ம‌ய‌த்தில் அதிக‌ம் விசிட் செய்த‌து இங்கேதான்..காலையில் போகாம‌ல் சாய‌ங்கால‌ம் அதாவ‌து நாலு நால‌ரை ம‌ணிக்கு போயிட்டால் என்னெ காற்று என்னெ காற்று இய‌ற்கை காற்று முக‌த்தில் அறையும்போது வாங்கிக் கொண்டே இருக்க‌லாம் அம்பூட்டு சுக‌ம்..இந்த‌ த‌ட‌வை எக்ஸ்ட்ரா டிக்கெட் ஆக‌ என் ம‌க‌னும் நானும் வ‌ருவேன்னு அட‌ம்பிடிக்க‌, கூட்டிட்டு வ‌ந்து உட்கார்ந்தாச்சு ர‌யில‌டியில்..

'இந்த‌ ரோடு  எப்டி போட்டாங்க‌?'

 த‌ண்ட‌வாள‌த்தை பார்த்து கேட்கிறான்..சில‌ ப‌தில்க‌ள் சொன்னேன்..இங்கே விள‌க்கியெல்ல‌ம் சொன்னால் தாவு தீர்ந்திடும்..
'இந்த‌ ரோடு எதுவ‌ரை போகும்?' ரெண்டாவ‌து கேள்வி..ச‌ர்ரென்று வாங்கிட்டுவ‌ந்த‌ 'Kit Kat' ல் பாதியை உடைத்து குடுத்து வாயை அடைச்சாச்சு... ஏன் முழு சாக்லெட்டையும் குடுக்க‌லைன்னு நீங்க‌ கேட்க‌லாம் எப்ப‌டியும் ம‌றுகேள்வி கேப்பான்ல‌ அதுக்குத்தான் மீதி...ஆனாலும் சின்ன‌ குழ‌ந்தைக‌ளின் கேள்விக‌ள் வெகு சுவராஸ்ய‌ம்..கேள்விக‌ள் கேட்டுவிட்டு ப‌திலை உட‌ன‌டியாக‌ எதிர்ப்பார்க்கும் த‌ன்மை..ஆச்சரிய‌ப்ப‌டுத்தும் ப‌தில்க‌ளை சொல்லும்போது புருவ‌ங்க‌ளை ஏற்றி க‌ண்க‌ளை அக‌ல‌விரித்து வாயை லேசாக‌ திற‌ந்து கேட்கும்போது வாவ் கொள்ளை அழ‌கு...

'எப்ப‌ ட்ரையினு வ‌ரும்?'

'நைட்டுக்குத்தான் வ‌ரும்..'

அவ‌னை கூட்டிட்டு போன‌நேர‌ம் பார்த்து விவ‌ரிக்க‌முடியாத‌ அள‌வுக்கு அற்புத‌மான‌ வானிலையை கொண்டிருந்த‌து எங்க‌ள் ஊர்..அமேஸிங்..க‌ரு மேக‌ங்க‌ள் ஒன்றுகூடி முறுக்கிக் கொண்டிருந்த‌ ப‌த்து அல்ல‌து ப‌தினைந்து நிமிஷ‌த்தில் ஒருதுளி ம‌க‌னின் க‌ன்ன‌த்தில் பொட்டென்று விழுந்த‌வுட‌ன் 'ப்பா ம‌ழ‌ வ‌ர‌ப்போவுது வா வீட்டுக்கு போலாம்' என்றான்..ச‌ரியென்று நானும் கிள‌ம்பி வெளியில் நின்றிருந்த‌ பைக்'ஐ எடுக்க‌லாம் என‌ போனால் புள்ளி மானின் உட‌ம்பிலிலுள்ள‌ புள்ளிக‌ளைப் போல‌ பைக்கின் பெஞ்சை ஒவ்வொரு புள்ளியாக‌ தொட்டு அல‌ங்க‌ரித்திருந்த‌து ம‌ழைத்துளி.. ம‌ணி ஆறு இருப‌தை தொட்டிருக்க‌ க‌ரு மேக‌ சூழ‌லாம் ஊரே இருட்டாக‌ இருக்க‌ த‌ன் ப‌ங்குக்கு ப‌வ‌ர்க‌ட் செய்து மேலும் இருட்டாக்கிய‌து த‌மிழ்நாடு மின்சார‌ வாரிய‌ம்..அது அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌ தோஷ‌ம் என்ப‌தால் அந்த‌ 'தோஷ‌ம்' அக‌ல‌வே மாட்டேங்கிற‌து த‌மிழ்நாட்டைவிட்டு..பைக் கிக்க‌ரை உதைத்தேன் ம‌க‌னை முன்புற‌ம் உட்கார‌வைத்துவிட்டு..க‌ட‌ற்க‌ரை ஒட்டியே ர‌யில‌டியும் இருப்ப‌தால் ம‌ழைத்துளி ம‌ண்ணில் ப‌ட்ட‌தும் ம‌ண்ணின் ம‌ண‌ம் நாசியை துளைத்த‌து..அற்புத‌ த‌ருண‌ம் அது..பைக்கின் வேக‌ம் கூட‌ கூட‌ லேசாக‌ வ‌ரும் ம‌ழைத்துளியும் அதிக‌மாக‌ வ‌ந்த‌தால் துணிப்பை'யை ம‌க‌னின் த‌லையில் க‌விழ்த்துவிட்டு சீரான‌ வேக‌த்தில் வீட்டை அடைந்தேன்..ம‌ழை வ‌ர‌ப்போய் வீட்டிற்க்கு போயாச்சு.. ம‌ழை இல்லாத‌ அடுத்த‌ நாள் இர‌வு ஏழு ம‌ணிவாக்கில் மெயின்ரோடு சாரா க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌த்திற்கு ப‌க்க‌த்தில் ஒருத்த‌ர் த‌ள்ளு வ‌ண்டியில் வைத்து ஆவி ப‌ற‌க்க‌ சுண்ட‌ல், வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லை, சோழ‌/ல‌/க்க‌திர், அவிக்காத‌ நில‌க்க‌ட‌வை விற்பார்...ப‌ழைய‌ டால்டா நெய் ட‌ப்பாவில் செங்குத்தான‌ சிறிய‌ குழாயில் திரிவைத்து இருப்பார்..அந்த‌ ட‌ப்பாவில் ம‌ண்ணென்னையை ஊற்றி திரியை கொஞ்ச‌ம் ஈர‌மாக்கி கொளுத்துவார்..ஓர‌ள‌வு வெளிச்ச‌த்தில் எரியும் அவ்விள‌க்கே அந்த‌ த‌ள்ளுவ‌ண்டியின் பிர‌தான‌ அடையாள‌ம்..தெருவிள‌க்கு,ரோட்டில் போகும் வாக‌ன‌ங்க‌ளின் வெளிச்ச‌ம் இருந்தாலும் இந்த‌ விள‌க்கின் மேல் அவ‌ருக்கு ந‌ம்பிக்கை..எரியும் நெருப்பின் புகையும், சுண்ட‌லிலிருந்து வ‌ரும் ஆவியும் ஒன்றாக‌ க‌ல‌க்கும் அத் த‌ருண‌த்தை ஏதோச்ச‌யாக‌ பார்த்திருக்கிறேன்..முன்பு எல்லாம் தெரு வ‌ழியாக‌ வ‌ண்டியை த‌ள்ளிக் கொண்டே விற்ப‌னை செய்வார்..
'முன்ன‌ மாதிரி முடிய‌லீங்க‌'ன்னார்.. ஒருவித‌மான‌ ச‌லிப்பு பேச்சில்..ஆர்வ‌ங்கொண்டு தொழில் செய்ய‌ இய‌லாத அள‌வுக்கு உட‌ல்நிலை இருந்தாலும் தொழில் செஞ்சே ஆக‌வேண்டுமென‌ அவ‌ரை கொண்டு போய் த‌ள்ளியிருந்த‌து வ‌றுமை..சின்ன‌ சின்ன‌ மாங்காய் கீத்துக‌ள்,ப‌ச்சை மிள‌காய் ஆங்காங்கே தூவ‌ப்ப‌ட்டு,வெங்காய‌ம்,கேர‌ட் போன்ற‌வ‌ற்றோடு கூட்ட‌ணி அமைத்து மெஜாரிட்டியோடு ந‌ம் ம‌ன‌ங்க‌ளை வென்று ந‌ம்மை சாப்பிட‌வைக்கிற‌து அவ‌ரிட‌ம் இருக்கும் சுண்ட‌ல். வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லையும் சாப்பிட‌ ந‌ன்றாக‌ இருந்த‌து..


'ம‌ழை வ‌ந்தா என்ன‌ செய்வீங்க‌?'


'இந்தெ [சிக‌ப்பு க‌ல‌ர் தார்ப்பாயை எடுத்து காட்டுகிறார்] வ‌ண்டிய‌ சுத்தி மூடிட்டு நான் ஓர‌மா ஒதுங்கி நின்றுவேன்' 


'ம‌ழ‌ வ‌ந்தாத்தான் ந‌ல்ல‌து..ஆனா அதிக‌மா வ‌ர‌ப்பிடாது' க‌ண்டிஷ‌ன் போடுகிறார் என்னை பார்த்த‌ப‌டி.


'ஏங்க‌ அப்ப‌டி?'


'அப்ப‌த்தான் சீக்கிர‌ம் வித்துப்போவும் நானும் வூட்டுக்கு போயிடுவேன்ல‌'


ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு ப்ரார்த்த‌னைக‌ள்..வித‌வித‌மான‌ அப்ளிகேஷ‌ன் ஃபார்ம்க‌ள் பார‌மாக‌ கிடைக்கிற‌து எல்லோர் ம‌ன‌திலும்..

......................................................

சின்ன‌ தூற‌ல், ஒரு ரெண்டு மூணு நாள் ம‌ழையோடு நின்றுவிட்ட‌து..தென்மேற்கு ப‌ருவ‌ம‌ழை இந்த‌ வ‌ருஷ‌ம் பொய்த்துவிட்ட‌தாக‌ சொல்கிறார்க‌ள்..எங்க‌ள் ஊரின் ம‌த்தியில் நான்கு குள‌ங்க‌ள் இருக்கிற‌து..இந்த‌ வ‌ருஷ‌ ம‌ழையும் பொய்த்துபோனதால் குள‌ம் வ‌த்திப் போய் கிரிக்கெட் விளையாடுகிறார்க‌ள்..ப‌ந்து போட‌ கையை உய‌ர்த்தும்போது நீச்ச‌ல‌டிப்ப‌து போன்ற‌ உண‌ர்வை த‌ருகின்ற‌து பார்க்கும் என‌க்கு..வாழ்க்கை த‌ர‌ம் எப்போது போல‌வே என்று சொல்ல‌ முடிந்தாலும் சில‌ வித்தியாச‌ங்க‌ள் இருக்கின்ற‌து..அதிக‌மாக‌ ரோடுக‌ளில் வேக‌த்த‌டைக‌ள் இருப்ப‌து ந‌ல்ல‌து என்றாலும் வேக‌த்த‌டைக‌ளில் ஒரு ஓர‌மாக‌ வ‌ழியை உண்டு ப‌ண்ணி விடுகிறார்க‌ள்..ஒருவ‌ர் காட்ட‌ ம‌ற்ற‌ எல்லோரும் அவ்வ‌ழியே போக‌ போக‌ வேக‌த்த‌டை இருப்ப‌த‌ற்க்கான‌ ப‌ல‌ன் இல்லாம‌ல் போய்விடுகிற‌து..10 ம் வ‌குப்பு ப‌டித்தாலும் பைக் + செல்போன் அதிலும் முன் கேம‌ரா,ட‌புள் சிம்,ஜிபிக‌ண‌க்கில் மெம‌ரி கார்டு என‌ சக‌ல‌மும் இருப்ப‌தால் ப‌ள்ளிக்கூட‌ புத்த‌க‌ங்க‌ளை வீட்டிலிருந்து ஸ்கூலுக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டிற்க்கும் 'சும்மா' எடுத்துட்டு போகும் 'வேலை' ம‌ட்டுமே ப‌ல‌மாக‌ ந‌ட‌க்கின்ற‌து..ப‌டிக்கிறார்க‌ளா என‌ ஆராய‌லாம் என‌ ஸ்கூலுக்கு போனால் ஸ்கூல் வாத்தியாருங்க‌ ப‌ரிட்சையில் பெயிலாம்..அவ‌ர்க‌ள் நிலைமை ப‌டு பாத‌க‌மாக‌ இருக்கிற‌து... ப‌ட்டுக்கோட்டையில் ந‌ண்ப‌ரின் ந‌ண்ப‌ர் வாத்தியார்..அவ‌ரை கேட்க‌லாம்னா வீட்டை விட்டே அதிக‌ம் வ‌ர‌மாட்றாராம்..இப்ப‌டி கிலி'ய‌டித்து போய் கிட‌க்கிற‌து க‌ல்வித்துறை..பொதுவாக‌ சொல்ல‌முடியாவிட்டாலும் தோல்விய‌டைந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் சொல்லும் ஒரே கார‌ண‌ம் 'கொஸ்டீன் பேப்ப‌ர் க‌ஷ்ட‌முங்க‌'..அதையேதான் நாளைக்கு மாண‌வ‌னும் சொல்வான்.. 
......................................................

99% ச‌த‌வீத‌ம் ப்ளாஸ்டிக் ஒழிப்பில் இருக்கிற‌து எங்க‌ள் ஊர்.. சின்ன‌ ட‌வுன் என்றாலும் இத்த‌கைய‌ 'க‌ட்டாய‌' மாற்ற‌த்திற்க்கு பாராட்ட‌த்தான் வேண்டும்..நிற்க‌... இப்ப‌டி ப்ளாஸ்டிக்கை ஒழிக்கும்போது இதே மாதிரி வேறொரு பை'யை கொடுக்கிறேன் பேர்வ‌ழின்னு ஒரு வித்தியாச‌மான‌ ச‌ண‌ல்'ஐ விட‌ மெல்லிய‌தால் செய்ய‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு பை கொடுக்கிறார்க‌ள்..அதுவும் அந்த‌ பையின் விலை இர‌ண்டு ரூபாய்..50 ரூபாய்க்கு மேல் பொருட்க‌ள் வாங்கினால் கூட‌ இர‌ண்டு ரூபாய் பையை த‌ர‌ யோசிக்கிறார்க‌ள்..சில‌ க‌டைக‌ளில் க‌ஸ்ட‌ம‌ருக்கும் க‌டையிலிருப்ப‌வ‌ருக்கும் வாக்குவாத‌ம் முற்றி கைக‌ல‌ப்பில் போய் நின்றிருக்கிற‌து..மெயின்ரோட்டில் மொபைல் ரீசார்ஜ் ப‌ண்ண‌ நான் நிற்க்கும்பொழுது ப‌க்க‌த்து ம‌ளிகை க‌டையில் ஒரு பெரிய‌வ‌ர் ' ப்ளாஸ்டிக் பை'யை ஒழிக்கிறீங்க‌ன்னு சொல்றீங்க‌ளே இந்தா 'இது [பிர‌ப‌ல‌ தேயிலை தூள் பாக்கெட்டை காட்டுகிறார்] 'அது [ஷாம்பு சாஷே'வை காட்டுகிறார்] 'ப்ளாஸ்டிக் தானே இதையும் நிப்பாட்டு..இதை ஏன் ஒழிக்க‌லை' ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்றேன்னு கெள‌ம்பி வ‌ந்து க‌ஷ்ட‌த்த‌ தான் கொடுக்கிறாங்க‌'ன்னார்.. அவ‌ர் சொல்வ‌தில் நியாய‌ம் என்று ப‌ட்டாலும் பால் பாக்கெட்டோ அல்ல‌து அரை கிலோ சர்க்க‌ரையோ வாங்கும்போது அத‌ற்கு த‌குந்த‌ பை இல்லை..அந்த‌ இர‌ண்டு ரூபாய் பை வாங்க‌வும் யோச‌னை என்றால்? க‌டைக்கார‌ர்க‌ளையும் குறை சொல்ல‌முடியாது ஒரு ப்ளாஸ்டிக் பை இந்த‌ க‌டையிலிருந்துதான் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என‌ உறுதியால் இர‌ண்டு ஆயிர‌ம் ரூபாய் அப‌ராத‌ம் அடிக்கிற‌து பேரூராட்சி...இதே க‌ட‌மை உண‌ர்வுட‌ன் தேங்கி கிடைக்கும் சாக்க‌டைக‌ள், குப்பைக‌ள் போன்ற‌ ம‌க்க‌ளின் அன்றாட‌ இய‌ல்பு வாழ்க்கையில் தேவைக‌ளை ச‌ரிசெய்தால் ச‌ந்தோஷ‌மே..ஃபைன் அடிக்கும் முனைப்பு இதிலிருக்க‌ட்டும்.. எப்ப‌டியோ ப்ளாஸ்டிக் ஒழிப்பில் ஆத‌ர‌வை விட‌ பொரும‌லும் ப்ளாஸ்டிக்கினால் வ‌ரும் ஆப‌த்தை புரியாத‌ த‌ன்மையும் நிறைய‌ பேரிட‌ம் இருப்ப‌து உண்மை.. 
......................................................

ப‌க‌ல் நேர‌ம் இர‌ண்ட‌ரை ம‌ணி இருக்கும்..ஒரு தேவைக்காக‌ ப‌ட்டுக்கோடை போக‌ வேண்டியிருந்த‌து..பைக் ப‌ஞ்ச‌ரான‌தால் பேருந்தில் போக‌லாம்னு பாயிண்ட் டூ பாயிண்ட் என‌ப்ப‌டும் பேருந்தில் [பாயிண்ட் டூ பாயிண்ட் என்றால் இடையில் 12 கிமி எங்குமே எந்த‌ ஸ்டாப்பிலும் நிற்காம‌ல் அதிரை டூ ப‌ட்டுக்கோட்டை செல்லும் பேருந்து..ஷார்ட்டா பிபி என்பார்க‌ள்] உட்கார்ந்தேன்..டிரைவ‌ருக்கு பின் த‌ள்ளி நாலு சீட்டுக்கு ஒரு வ‌ல‌துபுற‌த்தில் இட‌ம் கிடைத்த‌து..டிரைவ‌ருக்கு மேலே " அப்பா ப்ளிஸ் வேக‌மாக‌ போகாதீங்க‌ " என்ற‌ ஸ்டிக்க‌ர் வாச‌க‌ம் ஒட்டியிருந்த‌து ஸ்பெஷ‌ல்..அதை அவ‌ர் க‌வ‌னிக்கிறாரோ தெரியாது ம‌ற்ற‌ எல்லோரும் க‌வ‌னிக்கிறார்க‌ள்..ப‌க‌ல் சாப்பாட்டுக்கு பிற‌கான‌ நேர‌ம் என்ப‌தால் எல்லோரும் தூங்க‌ப் போகும் ஸ்டெஜிலேயே இருந்த‌ ச‌ம‌ய‌த்தில் க‌ல்யாண‌ வீட்டு ஸ்பீக்க‌ரில் அள‌விற்க்கு ஒரு ச‌த்த‌ம் எல்லோரையும் 'த‌ட்டி' எழுப்பிய‌து..க‌டைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த‌வ‌ரின் சைனா மாட‌ல் போனாம்..ஒட்டுமொத்த‌ பேருந்திலிருந்த‌ எல்லோரும் திரும்பி பார்க்க‌ அப்ப‌வும் கொஞ்ச‌ம் அல‌ற‌ விட்டுட்டுத்தான் எடுக்கிறார்...இந்த‌ மாதிரி ஹை டெஸிப‌ல் ச‌த்த‌ம் அவ‌ர் ப‌ர‌ம்ப‌ரைக்கே காது கேட்காம‌ல் போய்விடும் என்ப‌து உண்மை..அவ‌ர்கிட்ட‌ போய் 'ஏங்க‌ இவ்ளோ ச‌த்த‌மா ரிங்டோனை வைக்கிறீங்க‌ன்னு சொல்ல‌ யாருக்கும் தேவையும் இல்லை என்ப‌து மாதிரியான‌ ஒரு தோற்ற‌ம் நில‌விய‌து பேருந்தில்..நானும் அமைதியாகி விட்டேன்..சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ வேளைக‌ளில் அமைதியாக‌வே இருந்துவிடுவ‌து உட‌ம்புக்கு சேஃப்ட்டி...ஒன்ப‌தாவ‌து அல்ல‌து ப‌த்தாவ‌து கிமிட்ட‌ரில் வ‌ண்டி நின்ற‌து..இதுதான் எங்கேயும் நிற்காத‌ பேருந்தாச்சேன்னு ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ரிட‌ம்,

'ஏங்க‌ இங்க‌ நிக்குது?'

'இந்த‌ ......' ஸ்கூல்ல‌ ம‌ட்டும் நிக்குது என்னான்னு தெரிலீங்க‌ன்னார்..

த‌வ‌று ந‌ட‌க்கிற‌து அதை த‌ட்டிக்கேட்க‌ யாருக்கும் நேர‌மில்லை..ந‌ம‌க்கேன்? என்ற‌ டோண்ட் கேர் ம‌ன‌ப்பான்மை த‌லைவிரித்தாடுகிற‌து..க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் பாக்கி ப‌ண‌ம் வ‌ர‌வேண்டியிருப்ப‌தால் நான் அந்த‌ மாதிரி கேள்வி ப‌தில் பிசின‌ஸ்க்கெல்லாம் த‌யாரில்லை..

......................................................

My Twitter Updates 

வெக்கேஷன் முடிந்து சொந்த ஊரை விட்டு பிரியும்போது நம்மையறியாமலே நம் நகத்தை விரலில் இருந்து வெடுக்கென்று பிடுங்கிய உணர்வு..

பாகன் என்றொரு சினிமா; எனக்கும் பக்கத்து சீட்டுக்காரருக்கும் ஒரு பந்தயம்; யாருக்கு முதலில் கதை புரியமென்பதில்; ரெண்டுமணிநேரம் ஆச்சு.

விசில் என்பதற்க்கு தமிழில் 'வீளை' என்று அர்த்தமாம்

சில வேளைகளில்/நேரங்களில் மனசும் புத்தியும் ஒன்றோடொன்று மோதி சில்சில்லாய் தெரிக்கிறது உடலில் # வாழ்வியல்

குக்க‌ரின் விசிலுக்கு ப‌ய‌ப்புட்ட‌ என் வாரிசு இப்போ ஸ்கைப் ஆன் ஆஃபில் வ‌ரும் ச‌த்த‌திற்க்கு ப‌ய‌ப்ப‌டுகிற‌து # டெக்னால‌ஜி

மகனின் சட்டையில் குத்தப்பட்ட இந்திய தேசியகொடி பேட்ச்'ஐ கழட்ட விடாமல் பார்த்துக்கொண்டதே இவ்வருட சுதந்திர தின வெற்றி எனக்கு..

அதிர்ஷ்டம் (Luck) என்ற வார்த்தைக்கு தமிழில் 'ஆகூழ்' என்ற வார்த்தையும் உண்டாம்.

மளிகைகடைக்காரர் மெலிந்து, கடை பெருத்து இருக்கிறது # நேட்டிவ் அப்டேட்ஸ்

பிள்ளைகள்/பதக்கங்கள் பெறுவதில் எப்பயுமே சப்ப மூக்குக்காரன்தான் ஃபர்ஸ்ட்டூ..

சாலை விபத்து இன்னம்பிற சோக செய்திகளையும் ஃபேஸ்புக்கில் லைக் செய்கிறார்கள்..என்ன மாதிரியான அளவுகோல் இது?

உறவுகளுக்கு பயந்து உள்ளங்களை விற்றுவிடும் நாம் சமூகத்துக்கு பயந்து உள்ளதையே விட்டுவிடுகிறோம்..

இன்னும் 5,6 வருஷத்துக்கு டெண்டுல்கர் விளையாடுவாராம் # பீதிய கெளப்புறதே வேலையா போச்சு..

பெரிதினும் பெரிது கேள்; என் மகனுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்னு தெரியவில்லை.

தாய்க்கும் பிள்ளைக்குமான உறவுகளில் சில 'மொழிகள்' தந்தைக்கு புரிவதில்லை # தொப்புள்கொடி லாங்வேஜ்

இரண்டு நண்பர்கள் கேஷ் கவுண்ட்டரில் நான் பில் Pay பன்றேன்னு பர்ஸை எடுக்கும் விதத்தை வெச்சே எது போலி எது ஒரிஜினல்னு சொல்லிறலாம்..

கரை வேட்டி உடுத்தாத கோட்டு சூட்டு போட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அலுவலகங்களில்.

தெரியாத இந்தியில் 'ஜல்தி என்று சொல்லியும் லேட்டாகத்தான் வர்றான் கேண்டீன் சர்வர்.

ஒப்பனை செய்து கண்சிமிட்டாமல் ஸ்டுடியோவிலெடுத்த எவனுடைய பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவோ எல்லோர் காலிலும் மிதிபடுகிறது அன்றொரு முற்பகலில்..

பல்லவன் பேருந்து லேடீஸ் சைடில் மகளிர்,பெண்டிர்,மங்கை.. லெஃப் சைட் ஆண்கள் பகுதியில் 'திருடர்கள் ஜாக்கிரதை # படித்ததிலிருந்து.

சாவி துவாரத்தின் வழியே பார்த்தால் அது 1980, கதவை திறந்தே பார்ப்பது 2012 # ஜெனரேஷன் கேப்.

மேட்டர்' என்ற வார்த்தையை வில்லங்கமாக்கியது தமிழன்'ஸின் மற்றொரு ஹிஸ்ட்ரி..

ஸெல்லோ டேப்பில் விட்ட இடத்தை திரும்ப பிடிக்கும் கஷ்டம் வேற எதிலும் இல்லை...

தஞ்சாவூரு,ட்ரெய்னு,சென்னை,காலை டிபன்,வேலை முடிஞ்சு,கனவு,முழிப்பு,ஊருக்கு,வந்தாச்சு, # சிறுகதை

அனுபவம்’ என்று எல்லா இடத்திலும் சொல்லமுடிவதில்லை.

வாழ்த்த வயதில்லை என்ற இழுவையைவிட ’ஹேப்பி பர்த்டே என்பது சுளுவாக போய்விடுகிறது..

பழசு : அம்மா ஆடு இலை. புதுசு: அம்மா கரண்ட் இல்லை..

கோல்கேட் பேஸ்ட்டை கடைசி சொட்டு வரை அழுத்துபவன் எவ்ளோ பெரிய க்யூவானாலும் நின்று ஜெயிப்பான் # பித்துவம்

ஏன் போர்ட எடுக்குறீங்க? 'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்னு எழுதினா'அதான் எங்கவீட்டுலேயே கிடைக்குமேன்னு எவனோ எழுதிவெச்சிட்டு போய்ட்டான்.

அடுத்த நிமிஷம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பிரமிக்கத்தக்கவை.

ஒரு ஊர்ல அப்படின்னு ஆரம்பிச்சாலே குழந்தைகள் தூங்க போய்டுது..டிஜிட்டலில் கதை சொல்லனும் # 2012

தங்கம்' அப்படின்னு கேள்விப்படலாம் இனி.

கெஞ்சலில் வரும் அன்பைவிட கொஞ்சலில் வரும் அன்பே மேலானது.

காரோட்டும் தகப்பங்காரன் கண்ணாடியில் இடமும் வலமும் பார்க்க அவனையே இடமும் வலமுமாக பார்க்கிறது பின்சீட்டு குழந்தை.

விறுவிறுப்பாக படித்துக்கொண்டிருந்த நாவலின் கடைசி பக்கத்தை கிழித்ததுபோல் இருக்கிறது வார விடுமுறைகள்..

ஷாக் அடிச்சிருச்சு என்பவனை நம்பாதீர்கள் தமிழ்நாட்டில் # சட்டியில இருந்தாத்தானே கம்மிங் டூ அகப்பை.

என்னதான் பச்சைத் தமிழனாய் இருந்தாலும் வெயிலை பார்த்து 'சூடு என்று தெலுங்கலேயும் சொல்ல வேண்டியாதிருக்கிறது..

காமத்தை காமத்தால் வென்றவனைவிட சாமத்தில் வென்றவன் அதிகம் # பித்துவம்


......................................................

அனிமேஷ‌ன் ஷார்ட் ஃப்லிமில் இந்த‌ ப‌ட‌த்திற்க்கு த‌னி ம‌குட‌மே சூட்ட‌லாம் 6 நிமிஷ‌த்திற்க்குள்ளாக‌ க‌தையை கொஞ்ச‌மும் சுவ‌ராஸ்ய‌ம் குறையாம‌ல் சொல்லியிருப்ப‌து அச‌த்த‌ல்..எந்த‌ இட‌த்திலும் குறையே க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ல் முழுவ‌தும் நிறையே உள்ள‌ இந்த‌ ஷார்ட் ஃப்லிமுக்கு ஐந்து ஸ்டார்க‌ளை குத்த‌லாம்...டோண்ட் மிஸ் இட்..
அருமையான‌ கான்செஃப்ட்..காட்சிய‌மைப்புக‌ளில் சொத‌ப்பாம‌ல் இருப்ப‌து சிற‌ப்பு..சில‌ லாஜிக் மீற‌ல்க‌ள் இருந்தாலும் ர‌சிக்க‌ வைக்கும் மென்மையான‌ ஸ்டோரி...சூப்ப‌ர்.. பாருங்க‌ள்..

Post Comment

ரமலானும் பதிவும்....

கடந்த மூன்று மாதத்திற்க்கு மேல் நான் பதிவு ஏதும் எழுதவில்லை..நேரமின்மை அல்லது அதற்க்கான சூழல் வாய்க்கவில்லை அதுவே உண்மை... இரண்டொரு பேர் [கவனிக்க ’இரண்டொரு பேர்] எனக்கு மெயில் செய்து ஏன் பதிவு எழுதவில்லை என்று கேட்டார்கள்...அட! நம்மையும் படிக்க ஆள் இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சி வந்தது உண்மை...அவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் ஒரு ’கமர்ஷியல் பதிவு ஒன்றை ரெடி செய்வதற்க்குள் ரமலான் மாதமே வந்துவிட்டது..இந்த ஒரு மாதம் முடிந்ததும் கண்டிப்பாக ஒரு பதிவு இருக்கும்..ஊக்குவிப்பவர்கள் இருக்கும்வரை எப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கலாம்...மிக்க நன்றி...
................................................................................................


இன்று [19-07-2012] இரவு பொறுமையின் மாதமாம் ரமலான் மாதம் தொடங்குகிறது...அனைவருக்கும் ப்ரார்த்தனைகள் என் வழியில்..அதோடு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும்..
................................................................................................

சென்னை சேத்துப்பட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஆயிஷா டெக்ஸ்டைல் என் சொந்தங்கள் நடத்தும் துணிக்கடை..இதை ஒரு செய்தியாக படிப்பவர்கள் செய்தியாகவும் விளம்பரமாக படிப்பவர்கள் விளம்பரமென எடுத்துக்கொள்ளலாம்.. என் மூலம் சிலருக்காவது இச் செய்தி போய் சேர்ந்தால் நலமே... திறப்புவிழா சமயத்து புகைப்படங்கள் என் கைக்கு கிடைக்காததால் இந்த புகைப்படத்தை இங்கே பதிகிறேன்...கடை திறக்கப்பட்டு விட்டது..உங்கள் ஆதரவை வேண்டி...உங்கள் வாழ்த்துக்களோடு...


என்றென்றும் அன்புடன்,

A. அஹமது இர்ஷாத்

Post Comment

ஃபேர் & ல‌வ்லியும் ஊஞ்ச‌லும்...


ட்விட்ட‌ர் அன்ட் ஃபேஸ்புக் கீச்சுக‌ள்

இடைதேர்த‌லில் திமுக‌ வெற்றிபெறும் ஸ்டாலின் # ச‌ங்க‌ர் சிமெண்ட்ல‌ பெயிண்ட் அடிச்சா ச‌ங்க‌ர் கோச்சுப்பாரா..

இந்தியாவா என்றுவிட்டு 'இந்தி'யா என்பவர்களிடம் இல்லை தமிழ்நாடு 'தமிழ்' என்றுசொல்லிவிட்டு வந்துவிட்டேன் # வளைகுடா

தியேட்டர் முன்சீட்டில் காலை போடுபவனும் தலைமுடியால் ஒருபக்க முகத்தை மூடிக்கொள்பவளும் அடுத்தவர்க்கு சிரமத்தையே கொடுக்கும் ரகவாதிகள்

நினைத்ததை முடிப்பவனைவிட முடிந்ததை நினைப்பவனே புத்திசாலி # நான் சரியாத்தான் பேசுறேனா

பெண்கள் அழகாயிருக்க ஆண்களே காரணம் என நம்ப மறுக்கும் பெண் அழகா இருப்பதேயில்லை # ட்ரூ அல்லது உண்மை

பெரிய பட்ஜெட்டில் இன்டர்மிஷன் என்றும் லோ பட்ஜெட்டில் இடைவேளை என்றும் கார்டு போடுகிறார்கள் # டமில் சினிமாடா

விளம்பரங்களில் வரும் வாழ்க்கைபோல் நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும் # லைஃப் பாய் க‌றைய‌வே க‌றையாது

தமிழ்பட ஈரோக்க‌ள் மாதிரி மொத மூணு அடிக்கு அப்புறம் திருப்பி அடிக்கிறானுங்க இந்திய டீமு..

மின் கம்பிகளில் துணி காயப் போடும் போராட்டம் - பாமக அழைப்பு # அடுத்து ட்ரான்ஸ்ஃபார்ம‌ரில் ஊஞ்ச‌ல் ஆடி விளையாடி போர‌ட்ட‌ம்பாய்ங்க‌ளோ....

கூகிள் ச‌ர்ச்'க்கு பிற‌கு அதிக‌மாய் கேட்ட‌து த‌மிழ் சினிமா க்ளைமேக்ஸில் ஹீரோவை வீட்டினுள் தேட சொல்லும் இன்ஸ்பெக்ட‌ரின் ச‌ர்ச்'தான்..

க‌டைசி மேட்சில் ம‌ட்டும் ஜெயிச்சுட்டு இனிமே தொட‌ர் வெற்றி பெறுவோம்'னு க‌பில்தேவ் கால‌த்திலிருந்து சொல்றீங்க‌ளேப்பா # கிர்ர்ரீக்க‌ட்டு

அன்பும‌ணிக்கு ம‌றுக்கா ஒருத‌ட‌வை நாக்க‌ க‌டிப்பார் போலிருக்கே கேப்ட‌ன்.

இருவ‌ரும் ச‌வால் விட்டார்க‌ள் ஓக்கே..ஊத்திக் கொடுத்தார்/குடித்தார் என்ற‌ விஷ‌ய‌ம் ம‌ட்டும் 'சொப்ப‌ன‌ சுந்த‌ரியின்' கார் மாதிரி சுத்தி சுத்தி வ‌ருதே ஏன்?

ரெண்டு விஷய‌த்துக்கு இந்திய‌ர்க‌ள் ந‌க‌ம் க‌டிக்கிறார்க‌ள்..ஒன்று இந்திய‌ ஜெயிக்குமான்னு இன்னொன்று இந்திய‌ அணி தோற்க்குமான்னு..க‌டைசியில் விர‌லில் ர‌த்த‌ம் வ‌ந்த‌துதான் மிச்ச‌ம்..

ம‌ற்ற‌வ‌னைவிட‌ க‌ற்ற‌வ‌னையே ந‌ம்புகிற‌து ச‌மூக‌ம்..

என்ன‌தான் ஆண்க‌ளுக்கென்று ஃபேர் & ல‌வ்லி வ‌ந்தாலும் பெண்க‌ளுடைய‌தையே ஆண்க‌ள் உப‌யோகிக்கிறார்க‌ள்..

ச‌ச்சின் 80 ர‌ன்னில் அவுட்// நூறு அடிச்சாலும் இந்தியா தோற்க்குது அதாம்பாஸ் புரிய‌ல‌..

முடிந்தால் முடியாத‌து வேறொன்றுமில்லை.
# த‌ப்பு ஒன்றை க‌ஷ்ட‌ப்ப‌ட்டு 'முடித்து' கெள‌ம்பும்போது ம‌ற்றொன்று அதைவிட‌ க‌டின‌மாய் வ‌ரும்போது சத்திய‌மாய் முடியாது..

டேங்க‌ர் லாரிக‌ள் ஸ்ட்ரைக்கால் தென்மாநில‌ங்க‌ளில் சிலிண்ட‌ர் த‌ட்டுப்பாடு # கேஸ்,கேஷ் எப்ப‌வுமே த‌ட்டுப்பாடுதான்..

சிறையில் இருக்க‌ த‌யார் ; ந‌ட‌ராஜ‌ன் # ஹிந்தில‌ சொன்னாலும் அங்க‌தான் இருக்கோனும்

இளைய தலைமுறையினர் பற்றி ஐ.நா.கூட்டத்தில் பேசுகிறார் குஷ்பு # மானாட‌ ம‌யிலாட‌ நினைப்பில் கெமிஸ்ட்ரியை ம‌ட்டும் பேசிடாதீங்க‌ அம்ம‌ணி..
-----------------------------
சூப்ப‌ர் சிங்க‌ர் ஜீனிய‌ர் சீஸ‌னில் போன‌ வார‌ எபிசோடில் குட்டீஸ்க‌ள் எல்லாம் சேர்ந்து காம்பிய‌ர் ப‌ன்ற‌தும்,ந‌டுவ‌ர்க‌ளா இருப்ப‌துமாக‌ அருமையாக‌ இமிடேட் செஞ்ச‌து ரொம்ப‌வே ந‌ல்லா இருந்த‌து..நீங்க‌ளும் பாருங்க‌ள்..சூப்ப‌ர்..


-----------------------------
அதே விஜ‌ய் டிவியில் அது இது எதுன்ற‌ நிக‌ழ்ச்சி ரொம்ப‌வும் எல்லோருக்கும் பிடிக்கும் வ‌கையில் இருக்கிற‌து..சிற‌ந்த‌ பொழுதுபோக்கிற்க்கு இந்த‌ நிக‌ழ்ச்சியை சொல்ல‌லாம்..அதில் வ‌ரும் ஒரு ட்ராக்கை பாருங்க‌ள்..சிரிச்சு சிரிச்சு மாள‌லை..நூறு ச‌த‌வீத‌ம் நான் கேர‌ண்டி இந்த‌ வீடியோவை க‌ட்டாய‌ம் பாருங்க‌ள்..


-----------------------------
ச‌மீப‌த்தில் பிடித்த‌ புகைப்ப‌ட‌ம்

-----------------------------

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates