Thanks For Photo: catchingdreamss
அந்த ஹைபர்மார்க்கெட்டின் கழிவறை பகுதியில் சுத்தம் செய்பவராக இருக்கும் அந்த தொழிலாளிக்கு மாதச் சம்பளம் மிகக்குறைவு பணியில் கூடுதலாக ரெண்டு மணிநேரம் ஓவர்டைம் பார்த்து வந்த அந்த மனிதர் நேபாளத்தைச் சார்ந்தவர்..ஆசைப்படும் பொருட்களையெல்லாம் மற்றவர்கள் வாங்கிச் செல்வதை பார்க்கும் போது தானும் இதையெல்லாம் வாங்கமாட்டோமா எண்ணம் தோன்றியிருக்கனும் அவரும் மனிதர்தானே. போன மாதம் நடந்த ஹைபர்மார்க்கெட் குலுக்கலில் மெர்சிடீஸ் பென்ஸ் ஈ சீரிஸ் கார் பரிசாக கிடைத்திருக்கிறது..எப்படி அவருக்கு இந்த பரிசு கிடைத்தது தெரியுமா அங்குதானிறைவனின் ட்விஸ்ட் இருந்திருக்கிறது..அது எப்படீன்னா ஒரு ஷேக் தான் வாங்கிய பொருட்களுக்காக கிடைத்த குலுக்கல் பரிசு கூப்பனை இவர் சுத்தம் செய்யும் கழிவறை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கிறார் அது இவர் கண்ணில் பட்டு தன் பெயரை எழுதி போட்டிக்கான பெட்டியில் போட்டு காரை வென்றிருக்கிறார்..செம்ம செம்மயா இருக்குல்ல.
பிகு: நானும் அதே பெட்டியில் என் கூப்பனையும் போட்டிருந்தேன் என்பது கூடுதல் தகவல் + புகை(எனக்குத்தான்..!)
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான தளம் இது.. நிலா நிலா ஓடி வா விலிருந்து கிட்டத்தட்ட அனைத்து ரைம்ஸ்களையும் வீடியோவாக ஏற்றி வைத்திருக்கிறார்கள்.அழகாக தங்கள் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கணினியிலேயே நிலாச்சோறு ஊட்டலாம்..
யாருமே இப்ப அதிகம் பதிவிடவதில்லை அப்படின்னு டிவிஆர் அவர்கள் ஆதங்கப்பட்டு பதிவிட்டிருந்தார்கள் எல்லாத்துக்குமே கூகுள் பஸ்தான் காரணம் நானும்கூட கிடைக்கிற நேரத்தில் அங்குதான் அப்டேட்டுகிறேன் அதுக்காக பதிவிட விரும்பவில்லை என்று அர்த்தமில்லை.. முதல் புள்ளி இங்குதான் அடுத்ததுதான் மற்றதெற்க்கெல்லாம்..
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஹார்ட் டச்சிங் ஹார்ட் டச்சிங்'ன்னு சொல்வாங்கள்'ல அதை ஒரு நிமிடத்திற்க்குள் அடங்கிடும் இந்த வீடியோவை பார்த்தால் கன்ஃபர்ம்டு..
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
வைரமுத்து கவிதைக்கென்றே தனி வலைத்தளம்..
http://vairamuththu-kavithai.blogspot.com/
தமிழ் நாவல், ஈ புக்ஸ், சுஜாதா, ராஜேஷ்குமார் என அனைத்தும் பிடிஎஃப் கோப்பாக கிடைக்கிறது இத்தளத்தில் அள்ளிக்கோங்க..
http://tamilbooksfreedownload.blogspot.com/
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
வண்ணதாசன்(எ) கல்யாண்ஜியின் கவிதைகளில் எனக்கு ரொம்ப பிடித்த,
' சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டன
அனைத்துத் திசைகளில்
பழங்கள்.
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்.
பழங்களைவிடவும்
நசுங்கிப்போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.’
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்.. எடக்கு மடக்கு கேள்விகளுக்கு மக்களின் பதில்களையும் முகபாவனைகளையும் கவனியுங்கள்.. இன்டரஸ்ட்டிங்.. சூப்பர்..
14 வம்புகள்:
எட்டு வருஷமா கூப்பன் போடுறேன்....இது வரை ஒரு முறை கூட......எனக்கில்லை... எனக்கில்லை !!!!
இர்ஷாத,கழிவறை சுத்தம் செய்பவருக்கு பரிசாக கிடைத்த பென்ஸ் ஈ சீரிஸ் காரை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்வார்?ஜம் என்று உட்கார்ந்து கொண்டு கத்தார் சாலைகளில் வலம் வருவாரா? இல்லை விற்று பணமாக்கி இருப்பாரா?:-)
உண்மையில் ஹார்ட் டச்சிங் வீடியோ கிளிப்பிங்ஸ்தான்.
நல்லாயிருக்கு எல்லாமே.
நல்ல பகிர்வு..
வலைத்தள அறிமுகங்களுக்கு நன்றி...
அன்புடன் பதிவுக்கு பாராட்டுக்கள்..
http://sempakam.blogspot.com
Nice share. luv that video
கலவை தகவல்கள் அருமை
அந்த ஏழையின் குழந்தைகளுக்கு மேலும் வல்ல ஏகன் சந்தோஷத்தை கொடுக்கட்டும் ...
நல்ல பகிர்வு.
//ஹார்ட் டச்சிங் ஹார்ட் டச்சிங்'ன்னு சொல்வாங்கள்'ல அதை ஒரு நிமிடத்திற்க்குள் அடங்கிடும் இந்த வீடியோவை பார்த்தால் கன்ஃபர்ம்டு..//
மெய்யாலுமே....!
தகவல்களுக்கு நன்றி இர்ஷாத்
salam
சூப்பர் கலவை தல...
பரிசு கூப்பன் மேட்டர் :)
அந்த காணொலி ரியலி ஹார்ட் டச்சிங் :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
சகோ. ஒருவனின் அடிமை
அலைக்கும் முஸ்ஸலாம்..
உங்களுக்கும் அனைவருக்கும் என் இதயங்கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்..
Post a Comment